Home பெண்கள் பெண்குறி பெண்ணின் இனவிருத்தி உறுப்பு

பெண்ணின் இனவிருத்தி உறுப்பு

27

thumbnailபெண்ணின் இனவிருத்தி உறுப்புகளின் உட்பாகங்கள்

சினைப்பை: ஒவ்வொரு மாதமும் சினைப்பையிலிருந்து ஒரு முட்டை பெலோப்பியன் குழாய்க்கு அனுப்பப்படுகிறது. ஒரு ஆணின் விந்தணு இதோடு இணையும் பொழுது அது குழந்தையாக உருப்பெற துவங்கு கிறது. ஒரு பெண்ணுக்கு இரு சினைப்பைகள் இருக்கும் கருப்பையின் இரு புறமும் ஒவ்வொன்றும் இருக்கும். ஒவ்வொரு சினைப்பையும் ஒரு திராட்சைப்பழ அளவில் இருக்கும்.

கர்ப்பப்பைவாய் : கருப்பையின் வாயைத் தன் கர்ப்பப்பைவாய் என சொல்கிறோம். கருப்பையின் இத்திறப்பு யோனிக்குள் செல்கிறது. ஆணின் உயிரணு கர்ப்பப்பைக்குள் கர்ப்பப்பை வாயில் உள்ள சிறுதுவாரம் வழியே உள்ளே நுழைகிறது. அதே நேரத்தில் ஆண்குறி போன்ற மற்றவை கருப்பையில் நுழைய முடியாதபடி இது தடுக்கிறது. குழந்தைப் பிறப்பின்போது, இது திறந்து குழந்தை வெளியே வர உதவுகிறது.

.ஃபெலோப்பியன் குழாய்கள் : இக்குழாய்கள் சினைப்பையையும் கர்ப்பப்பையையும் இணைக்கிறது. சினைப்பை ஒரு முட்டையை வெளியிடும் போது, அம்முட்டை இக்குழாயில் பயணம் செய்து கருப்பையை அடைகிறது.

கர்ப்பப்பை : உள்ளே வெற்றிடத் தைக் கொண்ட தசையாலான பகுதி மாதவிடாயின் போது இங்கிருந்து தான் இரத்தம் வெளியேறுகிறது. கருத்தரித்த பின் குழந்தை இங்குதான் வளர்கிறது.

யோனிக் குழாய் அல்லது பிறப்புவழி : உல்வா (Vulva)விலிருந்து கர்ப்பப்பைக்கு செல்லும் பாதைதான் யோனிக் குழாய். இதன் தோல் பகுதி விஷேசமானது. உடலுறவின் போதும் குழந்தைப் பிறப்பின்போது இத்தோல் பகுதி சுலபமாக விரிவடை கிறது. இதிலிருந்து வெளிப்படும் திரவம் அல்லது ஈரம் யோனிக்குழாயை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், கிருமிகள் தாக்காமலும் பாதுகாக்கிறது.

பெண்களின் பாலியல் பிரச்சனைகள்

வளர்கின்ற பருவத்தில் பெரும்பாலான பெண்களுக்கு காதல் மற்றும் காம உணர்வுகள் வரத்தான் செய்யும். தாங்கள் யாரையாவது தொடவேண்டும் அல்லது யாராவது தங்களை தொடவேண்டும் என்று அவர்கள் இச்சையுடன் நினைப்பது சாதாரண விஷயம்தான்.

பெண்கள் உடலுறவில் ஈடுபட பல காரணங்கள் உண்டு. சிலர் குழந்தைவேண்டி உடலுறவில் ஈடுபடுகிறார்கள். சிலருக்கு உடலுறவு சந்தோஷம் அளிப்பதாய் உள்ளது. சிலருக்கு அது தேவைப்படுகிறது என்பதனால் உடலுறவில் ஈடுபடுகிறார்கள். சிலர், அதில் விருப்பம் உண்டோ, இல்லையோ, மனைவி என்ற அடிப்படையில், கடமை போல் அதில் ஈடுபடுகிறார்கள். சிலர் பணத்திற்காக அல்லது வாழ்க்கையில் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு அல்லது தனது குழந்தைகளுக்கு உடைகள் வாங்குவதற்காக அல்லது தங்க இடம் வேண்டி கட்டாயப்படுத்தப்பட்டு அதில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

மற்ற பெண்கள் தன்னுடைய துணைவன் தன்னை அதிகம் நேசிக்கவேண்டும் என்பதற்காக உடலுறவில் ஈடுபடுகிறார்கள். சில நேரங்களில், பெண்ணின் நண்பனோ அல்லது காதலனோ, பெண் தயாராக இல்லாதபோது கூட அவனுடன் உடலுறவு கொள்ளவேண்டும் என வலியுறுத்தி அவளை ஏற்றுக்கொள்ளச் செய்கிறான்.

தான் விரும்பாத பொழுது, எந்த ஒரு பெண்ணும் உடலுறவின் ஈடுபடக்கூடாது. தான் அதற்கு தயார் என்று பெண்ணாகிய நீங்கள் முடிவு செய்த பின்னரே அதில் ஈடுபட வேண்டும். உடலுறவு என்பது, அதில் ஈடுபடும் இருவருக்குமே மகிழ்ச்சி தரக்கூடியது. ஆனால் அதில் பயமோ, வெட்கமோ இருக்கும் பட்சத்தில் அந்த மகிழ்ச்சி கிடைப்பது கடினம். உடலுறவுக்கு நீங்கள் தயாரானவுடன், கருத்தரித்தல் மற்றும் பால்வினை நோய்களி லிருந்து உங்களை எப்போதும் பாதுகாத்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்

Previous articleபுடவை போட்டாவது மேல் பகுதியை முட வேண்டும் இல்லை என்றால் இது தான் கெதி !! இந்த வீடியோவை பாருங்கள் !!
Next articleவருங்கால மனைவியுடன் சேர்ந்து திருமணத்திற்கு முன்பே செய்து முடித்துவிட வேண்டியவை!!!