Home சமையல் குறிப்புகள் பனீர் கோகனட் பால்ஸ்

பனீர் கோகனட் பால்ஸ்

17

தேவையானவை:

பால் – 1 லிட்டர், வினிகர் – 2 டீஸ்பூன், பொடித்த சர்க்கரை – கால் கப், ஃபுட் கலர் (ரோஸ்) – 1 சிட்டிகை, ரோஸ் எஸன்ஸ் – சில துளிகள், தேங்காய் – ஒரு பெரிய மூடி, சர்க்கரை – அரை கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன். செய்முறை: பாலை கொதிக்கவிட்டு, வினிகரை சிறிது சிறிதாகச் சேர்த்து, நன்கு திரிந்ததும் வடிகட்டினால், பனீர் கிடைக்கும். பனீருடன் பொடித்த சர்க்கரை, ஃபுட் கலர், எசன்ஸ் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வையுங்கள். தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள். தேங்காயுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறுங்கள. சர்க்கரை உருகி, இளகி திரும்ப சற்று சேர்ந்தாற்போல் வரும்போது இறக்கிவிட வேண்டும். அதில் ஏலக்காய்த் தூளைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். ஆறியவுடன் சிறிதளவு எடுத்து உருட்டி, கிண்ணம்போல் செய்து, அதனுள் பனீர் உருண்டை களை வைத்து, நன்கு மூடி உருட்டுங்கள். ஃப்ரிஜ்ஜில் குளிரவைத்து, பரிமாறுங்கள். –

Previous articleதிருமண இரவில் என்ன செய்ய வேண்டும்?
Next articleஅலர்ஜியைப் போக்க சில கைப்பக்குவங்கள்!