Home உறவு-காதல் நெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்!

நெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்!

722

நேரடியாக கேட்டு “டேய் உன்கிட்ட நான் பிரெண்டு மாதிரி தான் டா பழகினேன்” என்று மொக்கை வாங்குவதை விட, உண்மையாக ஒரு பெண் உங்களை விரும்புகிறாள் என்பதை அவர் ஆழ்மனதில் இருந்து அறிந்துகொள்ள வேண்டும். “என்னங்க இவ்வளோ பெரிய டாஸ்க் கொடுக்கறீங்களே” என ஷாக் ஆகாதீங்க. பொதுவாக பெண்கள் தன்னுடன் பழகும் ஆண் ஒருவரை நல்ல நண்பனாக, நல்ல சகோதரனாக, காதலனாக என மூன்று விதமாக வகைப்படுத்துவார்கள். இதில் எந்த லிஸ்டில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை முதலில் தெரிந்துகொண்டால் சிக்கல் இல்லை. இதை கண்டுபிடிக்க சிம்பிள் ட்ரிக் இருக்கு. போகுற போக்கில் “எனக்கு கல்யாணம். பொண்ணு பாக்கறாங்க. எப்படி செலக்ட் பண்ணனும். உனக்கு தெரிஞ்சா சொல்லு” என்று சொல்லி பாருங்கள்.

#1. “எதுவும் சொதப்பி வெச்சிராத. நானும் ஒரு டைம் அவங்ககிட்ட பேசி உனக்கு ஓகே ஆகுமான்னு சொல்றேன். அதுவரைக்கும் அவசரப்படாத” இந்த மாதிரி பதில் வந்தால், நீங்கள் சகோதரன் லிஸ்டில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

#2. “உன்ன புடிச்சிருக்குன்னு சொல்றவங்கள, யோசிக்க நேரம் குடுக்காம உடனே கல்யாணம் பண்ணிக்க.இதுக்கு போய் என்கிட்ட ஏன் டா கேட்குற” இந்த மாதிரி பதில் வந்தால், நீங்கள் நல்ல நண்பன் லிஸ்டில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

#3. “டேய்! சொல்லவே இல்ல. அப்படியா..? அப்போ என்னைய எல்லாம் இனி கண்டுக்கவே மாட்டியா.?” இந்த மாதிரி ஏக்க குரலில் பதில் வந்தால் உங்களை விரும்புகிறார்கள் என்று அர்த்தம்.

#Just 3 Reply : இதனை வைத்து ஒரு 80% முடிவுக்கு வரலாம். அதுக்கும் மேல 20% என்ன ஆகும்னு சந்தேகம் வரக்கூடாது. வந்தால் நாங்கள் பொறுப்பல்ல மக்களே!