Home சூடான செய்திகள் தெலுங்குப் படப்பிடிப்பில் நடிகை ஹன்சிகா காயம்

தெலுங்குப் படப்பிடிப்பில் நடிகை ஹன்சிகா காயம்

24

தெலுங்குப் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது நடிகை ஹன்சிகாவுக்கு காயம் ஏற்பட்டது.

மாப்பிள்ளை, எங்கேயும் எப்போதும்,வேலாயுதம் படங்கள் மூலம் பிரபலமான ஹன்சிகா இப்போது, ஒரு கல் ஒரு கண்ணாடி, வேட்டை மன்னன் படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஹைதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் நடந்த மஸ்கா என்ற தெலுங்குப் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். அப்போது எதிர்பாராத விபத்தில் சிக்கினார். இதில் ஹன்சிகாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

உடனடியாக படக்குழுவினர் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். விபத்து குறித்து ஹன்சிகா கூறுகையில், “படப்பிடிப்பில் நடந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். இதில் கேமரா உடைந்துவிட்டது. ஒளிப்பதிவாளரின் உதவியாளருக்கு காயம் ஏற்பட்டது. எனக்கும் லேசான காயம்தான். நல்லவேளை, யாருக்கும் பெரிதாக ஒன்றும் ஆகவில்லை,” என்றார்.

Previous articleகாலம் போன காலத்தில் செக்ஸி உடையா?- ஸ்ரீதேவிக்கு கண்டனம்
Next articleத்ரிஷாவின் கருணை மனசு!