Home சூடான செய்திகள் தனுஷுக்கு ஜோடியாகும் பார்வதி மேனன்!

தனுஷுக்கு ஜோடியாகும் பார்வதி மேனன்!

13

சில வருடங்களுக்கு முன் பூ என்று ஒரு படம் வந்தது நினைவிருக்கலாம். நிறைய பாராட்டுகளையும் கொஞ்சம் நஷ்டத்தையும் சம்பாதித்த படம் அது.

அந்தப் படத்தோடு தமிழ் சினிமாவில் காணாமல் போனவர் பார்வதி மேனன்.

இப்போது மீண்டும் நடிக்க வருகிறார். அதுவும் தனுஷுக்கு ஜோடியாக. ஆனால் தமிழில் அல்ல, இந்தியில்.

வந்தேமாதரம் உள்ளிட்ட புகழ்பெற்ற ஆல்பங்களைப் படமாக்கிய பரத் பாலா இயக்கும் புதிய இந்திப் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க, பார்வதிதான் அவருக்கு ஜோடி.

படத்தில் தனக்கு யார் நாயகியாக வரவேண்டும் என எந்த விருப்பத்தையும் தனுஷ் தெரிவிக்கவில்லையாம். தயாரிப்பாளரின் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் ஹீரோயினாக்கட்டும் என அமைதி காக்க, பார்வதி வந்திருக்கிறார்.

தனுஷ் ஜோடியாக நடிப்பதில் தனக்கு மிகுந்த திருப்தி என்றும், இந்த வாய்ப்பு தனக்கு புதிய கதவுகளைத் திறக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார் பார்வதி.

Previous articleபேஸ்புக் களியாட்டத்தில் அரைகுறை ஆடைகளுடன் இளசுகள்..!! (வீடியோ இணைப்பு)
Next articleஷங்கர் படத்தில் விக்ரம் ஜோடி தீபிகா?