Home சமையல் குறிப்புகள் சைனீஸ் சிக்கன் டிரம்ஸ்டிக்

சைனீஸ் சிக்கன் டிரம்ஸ்டிக்

45

இந்த எளிய 5 மசாலா பொடி கலந்த சிக்கன் சுவையாகவும் எளிதாகவும் உங்கள் சைனீஸ் பார்ட்டிக்கு ஏற்ற ஒன்றாகும். இது உங்கள் விருப்பப்படி கால்பந்து பார்ட்டிக்கும் ஏற்றதாக இருக்க முடியும், ஆனால் இது குழந்தைகளுக்கு ஏற்ற உணவு கிடையாது.
தேவையான பொருட்கள்:
சிக்கன் டிரம்ஸ்டிக் – 8, நடுத்தர அளவிலானது
பூண்டு – 5 பல், நன்கு நறுக்கியது
இஞ்சி – 2 டீஸ்பூன், புதிதாக துருவியது
உலர்ந்த ஷெர்ரி – 1 டீஸ்பூன்
நிலக்கடலை எண்ணெய் – 1 டீஸ்பூன்
சோயா சாஸ், 2 டீஸ்பூன் –
ஐந்து வகை மசாலாப் பொடி – 2 தேக்கரண்டி
தேன் – 2 டீஸ்பூன்

செய்முறை:
ஒரு கிண்ணத்தில், சிக்கன் டிரம்ஸ்டிக்கை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இப்போது சிக்கன் டிரம்ஸ்டிக்கை இதனுடன் சேர்த்து, கலவை சிக்கன் முழுவதும் கலக்குமாறு கிளறி விட்டு, இதை பிளாஸ்டிக் உறையால் மூடி 30 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
ஓவனை 180 டிகிரி செல்சியஸ் ல் சூடுபடுத்திக் கொள்ளவும்.
வறுக்கும் ட்ரேயில் இந்த சிக்கன் டிரம்ஸ்டிக்குகளை வரிசையாக வைத்து 30 முதல் 40 நிமிடங்கள் அல்லது சிக்கன் நன்கு வெந்து சாறு நன்கு சிக்கனுள் இறங்கும் வரை சூட்டில் வைக்கவும்
கீரையை பரப்பி இதன் மீது இந்த சிக்கன் டிரம்ஸ்டிக்கை வைத்து, உங்களுக்கு விருப்பமான டிப் கொண்டு இதன் மீது விட்டு சூடாக பரிமாறவும்.