Home சூடான செய்திகள் சுந்தர்.சி இயக்கத்தில் ஸ்ருதிஹாசன்

சுந்தர்.சி இயக்கத்தில் ஸ்ருதிஹாசன்

29

 

சுந்தர்.சி இயக்கத்தில் நாயகி ஸ்ருதி ஹாசன் இணைகிறார்.
நாயகன் விஷால், திரு இயக்கத்தில் “சமரன்” படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா நாயகியாக நடிக்க, பாலாஜி ரியல் மீடியா சமரனை தயாரித்து வருகிறது.

சமரன் படத்தினைத் தொடர்ந்து விஷால், சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். முதன் முறையாக மூன்று வேடங்களில் நடிக்க உள்ள விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் நடிக்க இருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் தயாராகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஸ்ருதிஹாசன் நடித்து வருவதால் இப்படத்தின் நாயகியாக ஸ்ருதியை ஒப்பந்தம் செய்யலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

தான் இயக்கிவரும் “மசாலா கஃபே” படத்தை முடித்த பிறகு, மார்ச் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பை சுந்தர்.சி தொடங்க திட்டமிட்டுள்ளார்.

 

Previous articleபாண்டிராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம்
Next articleஇந்தியில் ரீமேக் ஆகும் காதலில் சொதப்புவது எப்படி