Home சூடான செய்திகள் சிம்பு படம் ட்ராப்?- மீண்டும் தனுஷிடம் போன வெற்றிமாறன்!

சிம்பு படம் ட்ராப்?- மீண்டும் தனுஷிடம் போன வெற்றிமாறன்!

21

பொல்லாதவன், ஆடுகளம் என இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் சேர்ந்து பணியாற்றிய தனுஷ் – வெற்றி மாறன் மீண்டும் கூட்டணி அமைக்கிறார்கள்.

ஆடுகளம் படத்துக்குப் பிறகு வெற்றிமாறன், சிம்புவை வைத்து வட சென்னை என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார்.

ஆனால் அந்தப் படம் ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள். படத்தின் ஹீரோக்களில் ஒருவரான ராணா, சிம்புவுடன் நடிக்க மறுத்து விலகிவிட்டார். இருந்தாலும் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என்று கூறிவந்தனர்.

இப்போது படமே கிட்டத்தட்ட கைவிடப்பட்டுவிட்டது. இதோ அதோ என சிம்பு இழுத்தடித்ததாலும், இன்னும் போடா போடி, வேட்டை மன்னன் ஆகிய படங்களை அவர் முடிக்க வேண்டியிருப்பதாலும் இந்தப் படம் வேண்டாம் என்ற முடிவுக்கு வெற்றிமாறன் வந்துவிட்டார். ஆனால் இதை ரொம்ப பாலீஷாக, தனுஷ் படம் முடிந்த பிறகு சிம்பு படத்தை பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார். வெற்றிமாறன் ஒரு படத்தை முடிக்க கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் எடுத்துக் கொள்வார். அதற்குள் என்னென்ன மாற்றங்களோ என்கிறார்கள் யூனிட்டைச் சேர்ந்தவர்கள்.

இதைத் தொடர்ந்து தனது ராசியான ஹீரோ தனுஷிடமே திரும்ப வந்து, நாம சேர்ந்து படம் பண்ணலாம் என்று கூறிவிட்டார் வெற்றிமாறன்.

இந்தப் படத்தை க்ளவுட் நைன் மூவீஸ் தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

Previous article‘கலகலப்பு’ ஆனது மசாலா கபே!
Next articleஉடலுக்கு மட்டுமல்ல உறவு, ஆரோக்கியத்திற்கும்தான்!