Home சூடான செய்திகள் ‘சிம்புவுடன் நடிக்க நான் ரெடி… ஆனா மூணு கண்டிஷன்’- நயன்தாரா

‘சிம்புவுடன் நடிக்க நான் ரெடி… ஆனா மூணு கண்டிஷன்’- நயன்தாரா

12

என் படங்களில் நயன்தாரா நடிக்கிறார்னு நியூஸ் போடாதீங்க என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார் சிம்பு. ஆனால் இன்னொரு பக்கம், தன் அடுத்த பட நாயகியாக நடிக்க விருப்பமா என நயனுக்கு தூது விட்டு வருகிறாராம்.

இதனை நயன்தாராவே இப்போது அம்பலமாக்கிவிட்டார்.

இப்போது சிம்பு நடிக்கும் வாலு படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடப்பது உண்மைதானாம். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கும் இந்தப் படத்தில் சிம்புவுடன் நடிக்க தனக்கு சம்மதம் என்று கூறியுள்ள நயன்தாரா, அதற்கு மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளாராம்.

தனக்கு சம்பளமாக தென் இந்தியாவில் எந்த கதாநாயகியும் வாங்காத அளவுக்கு ரூ.3 கோடி சம்பளம் தர வேண்டும்.

நடிப்பு தொடர்பான விஷயம் தவிர தனிப்பட்ட முறையில் என்னுடன் சிம்பு நெருங்கி பழகவோ பேசவோ முயற்சிக்கக் கூடாது.

முக்கியமாக எனது கேரவன் பக்கமே சிம்பு வரக்கூடாது போன்றவைதான் நயன்தாரா விதித்துள்ள நிபந்தனைகள் என்கிறார்கள் (கவனிக்க- நெருக்கமான காதல் காட்சிகள் வேண்டாம் என்று சொல்லவில்லை!).

இதுக்கு பேசாம நடிக்கமாட்டேன்னே சொல்லிடலாமே, என்று கமெண்ட் அடித்தாராம் பணத்தைக் கொட்டவிருக்கும் தயாரிப்பாளர்!

Previous articleமதுரையில் ஆபாச சினிமா போஸ்டர்கள்- ஆவேசமாய் கிழித்தெறிந்த பெண்கள்!
Next articleகடற்கரையில் கவர்ச்சி காட்டிய காஜல் அகர்வால் (வீடியோ இணைப்பு – திருமணம் ஆகாதவர்களுக்கு மட்டும்)