Home சூடான செய்திகள் கோடீஸ்வர பட்டியலில் ஹன்ஸிகா… கோயில் கட்ட கூட்டம் ரெடி!

கோடீஸ்வர பட்டியலில் ஹன்ஸிகா… கோயில் கட்ட கூட்டம் ரெடி!

33

தமிழ் ரசிகர்களுக்கு ‘பன்’ மாதிரி கும்மென்று இருக்கும் நடிகைகள் மீதான் மயக்கம் தமிழ் சினிமா ஆரம்பித்த காலத்திலிருந்தே தொடர்கிறது.

அந்த மயக்கத்தின் உச்சம் குஷ்பு, நமீதாவுக்கெல்லாம் கோயில் கட்டிப் பார்த்தனர்.

இப்போது அவர்களின் லேட்டஸ்ட் கனவுக் கன்னி ஹன்ஸிகா மோத்வானி.

வந்த புதிதில் இரண்டு ப்ளாப்கள் கொடுத்து டல்லடித்து நின்றவர், இப்போது வேலாயுதம், ஓகே ஓகே ஹிட்கள் மூலம் தமிழ் சினிமாவின் அதிகம் விரும்பப்படும் நாயகியாக மாறியுள்ளார்.

அவர் கைவசம் உள்ள அடுத்த இரண்டு படங்களுமே கொஞ்சம் நம்பிக்கை தருபவை. சிம்புவுடன் வேட்டை மன்னன், சூர்யாவுடன் சிங்கம் 2 என பெரிய பட்ஜெட் படங்கள். வாசலில் ஒரு டஜன் தயாரிப்பாளர்கள் வரிசையில்!

விளைவு… சம்பளம் கிர்ரென்று உயர்ந்து ரூ 75 லட்சத்தில் நிற்கிறது. டெல்லி பெல்லி ரீமேக் படத்துக்குதான் இந்த சம்பளம். அதற்கடுத்த படங்களுக்கு இப்போதே ஒரு கோடி என்பதை அழுத்தமாக சொல்லிவிட்டாராம்.

ஹன்ஸிகா இதுவரை 4 படங்களில்தான் நடித்துள்ளார், தமிழில் என்பது நினைவிருக்கலாம்.

இன்னொரு பக்கம், ரசிகர்கள் மன்றம் அமைக்கவும், சின்ன குஷ்பு என்ற பெயரில் திருச்சி பக்கத்தில் கோயில் கட்டவும் அம்மணியின் அனுமதி வேண்டி விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கிறார்கள்!

Previous articleபிரசவத்திற்கு பின் உறவிற்கு அவசரமா? : மருத்துவர்கள் ஆலோசனை
Next articleமதில்மேல் பூனை… படப்பிடிப்பில் யானை… நாயகி அலறல்!