Home அந்தரங்கம் கூட வேலை பார்ப்பவர்களுடன் ஒரு போதும் ‘கூட’ வேண்டாம்!

கூட வேலை பார்ப்பவர்களுடன் ஒரு போதும் ‘கூட’ வேண்டாம்!

27

சக ஊழியர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது நல்லதல்ல என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அலுவலகத்தில் பணியாற்றும் ஆண், பெண்களுக்கிடையே காதல் ஏற்படுவது சாதாரணம்தான். ஆனால் இந்த உறவு சரிப்பட்டு வராது என்று ஒரு கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து எடுக்கப்பட்ட ஆய்வில், 28 சதவீதம் பேர் தங்களது அலுவலகத்தில் பணியாற்றுவோருடன் காதலில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்தது.

ஆனால் இந்த காதல் மற்றும் செக்ஸ் உறவு யாராவது ஒருவர் அல்லது இருவருக்குமே வேலைக்கு ஆபத்தை கொண்டு வந்து விடுகிறதாம். மேலும் அவர்களை அனைவரும் தனிமைப்படுத்தி விடுகிறார்களாம். வதந்திகளும் ரெக்கை கட்டிப் பறக்குமாம். இதனால் மன ரீதியான பாதிப்புகளுக்கு அந்தக் காதலர்கள் ஆட்பட நேரிடும் என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான ஜான் ஐய்க்கன்.

இவர் ஒரே அலுவலகத்தில் வேலைபார்த்துக் கொண்டே காதல் மற்றும் செக்ஸில் ஈடுபடுவோருக்குத் தரும் அட்வைஸ் என்னவென்றால், உங்கள் காதலை வெளியில் வைத்துக் கொள்ளுங்கள். அலுவலகத்தில் இருக்கும்போது தொட்டுப் பேசாதீர்கள், முத்தமிடாதீர்கள், முக்கியமாக செக்ஸ் வைத்துக் கொள்ளாதீர்கள்.

மேலும் உங்கள் காதலி அல்லது காதலருடன் அலுவலகத்தில் வைத்து அதிக நேரம் பேசாதீர்கள். ஒரு சக ஊழியர் போலவே இருவரும் பழகுங்கள்.

ஒருவேளை உங்களது காதலி அல்லது காதலர் உங்களுக்கு மேலதிகாரியாக இருந்தால் பெரும் சிக்கல்தான். காரணம் அவர் உங்களிடம் எப்படிப் பழகுவது என்பதில் குழப்பம் வரும். அதேசமயம், மற்ற ஊழியர்கள் உங்கள் இருவரையும் எப்படி அணுகுவது என்பதில் குழப்பமடைவர்.

உங்கள் இருவரையும் கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு ஊழியர்களின் போக்கு தள்ளிக் கொண்டு போய் விடும். இதனால் இருவருக்கும் இடையே தர்மசங்கடமான நிலை வரலாம்.

ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டு, காதலித்து பின்னர் அது முறிந்தும் போய், மறுபடியும் ஒரே அலுவலகத்தில் இருவரும் வேலை பார்க்கும்போது ஏற்படும் அவுசகரியத்தை சொல்லில் சொல்ல முடியாது.

எனவே ஒரே அலுவலகத்தில் இருப்பவர்கள் காதலிப்பதை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது. அப்படியே காதலில் வீழ்ந்தாலும் கூட யாராவது ஒருவர் ராஜினாமா செய்து விட்டு வேறு அலுவலகம் போய் விடுவதுதான் உத்தமம், காதலும் பத்திரமாக இருக்கும்.

Previous articleஇல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்!
Next articleகர்ப்பகாலத்தில் காசநோய் தாக்கினால் குழந்தையை பாதிக்கும்?