Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு ஒற்றைப் பெற்றோராக இருப்பதன் தாக்கம்

குழந்தைகளுக்கு ஒற்றைப் பெற்றோராக இருப்பதன் தாக்கம்

55

Shot of a young mother lying in a tent fort with her children and reading them a bookhttp://195.154.178.81/DATA/istock_collage/0/shoots/784332.jpg
கணவன் மனைவி குழந்தைகள் மட்டும் இருக்கும் சிறிய குடும்பங்களில், ஒவ்வொரு பெற்றோரும் வெவ்வேறு பாத்திரங்களை ஏற்றிருப்பார்கள். மேலும் இருவரும் வீட்டில் இருக்கும் போது குழந்தைகள் அதிகபட்ச பாதுகாப்பைப் பெறுவார்கள். தலைமைப் பண்பு மற்றும் ஒழுக்கத்திற்கு தந்தை ஒரு முன்மாதிரியாக இருப்பார். அதே வேளையில், குழந்தையின் தினசரி நடவடிக்கைகள் மற்றும் நற்குணங்களை உருவாக்குவதில் தாய் கவனம் செலுத்துவார்.

கடந்த 50 வருடங்களாக, குடும்ப அமைப்பு மாற்றம் அடைந்து வருகிறது. இரு பெற்றோர் கொண்ட குடும்ப அமைப்பு ஒற்றைப் பெற்றோர் அமைப்பாக மாறிக் கொண்டிருக்கிறது. ஒற்றைப் பெற்றோர் அமைப்பு என்பது விவாகரத்து, துணையில் ஒருவர் மரணம் அல்லது துணை கைவிட்டுவிடுதல் முதலியவற்றின் விளைவாக ஏற்படலாம். இதனால் வேலை மற்றும் வீட்டு நடவடிக்கைகள் இரண்டையும் சமநிலைப்படுத்தி குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் முழு பொறுப்பும் அந்த ஒரு பெற்றோர் மீது விழுகிறது. ஒரு ஒற்றைப் பெற்றோர் தனக்கிருக்கும் ஆதாரங்களை மதிப்பிட வேண்டியிருக்கும், அத்துடன் குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்கி கவனிக்க வேண்டும். இது இரண்டு பணிகளிலும் அழுத்தம் தரக்குடியதாக இருக்கும்.

காரணம் எதுவாக இருப்பினும் ஒற்றைப் பெற்றோராக இருக்கும் வீட்டில் வளரும்குழந்தைகள் பின்வரும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படுவதாக அறியப்படுகிறது (Children from single parent’s home irrespective of the cause, are known to be affected in various ways such as):

சுயமரியாதை குறைதல் (தன்னைப்பற்றியே எதிர்மறை உணர்வுடன் இருத்தல்):குழந்தைகள் பெற்றோரின் பிரிவுக்கு தாங்கள் தான் காரணம் என முடிவு செய்துவிடக்கூடும், இதனால் அவர்களது மதிப்பு குறித்து கேள்வி கேட்கத் துவங்குகிறார்கள்.
உளவியல் நல்வாழ்வு குறைதல் (மன அழுத்தம், வேதனை அறிகுறிகள்): பணியில் இருக்கும் ஒற்றைப் பெற்றோரின் கவனிப்பு குறைவதால் அல்லது இரட்டைப் பெற்றோர்கள் உடைய மற்ற குழந்தைகளுடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்வதால் அந்த குழந்தைக்கு மன அழுத்தம் ஏற்பட்டுவிடும். விவாகரத்து, பிரிவு அல்லது தனது துணையின் மறைவு காரணமாக ஒற்றைப் பெற்றோர் தனது வேதனையை வெளிப்படுத்துவது, குழந்தைக்கும் மன அழுத்தம் அதிகரிக்க வழிவகுக்கும்.
கல்வியில் தோல்வி அடைதல் (பள்ளிக் கல்வியில் தரம் குறைதல்): குடும்பத்தின் அனைத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் குழந்தையின் கல்வி செயல்திறனையும் மேற்பார்வை செய்வது ஒறைப்பெற்றோருக்கு கையாள்வதற்கு சிரமமாக இருக்கும். குழந்தையின் மீது ஒற்றைப் பெற்றோர் கவனம் இல்லாமல் இருப்பதால் குழந்தை தனது கல்வியை மிகவும் எளிதாக எடுத்துக் கொள்வது மோசமான கல்வி செயல்பாட்டிற்கு வழிவகுக்கிறது.
ஆக்கிரமிப்பு நடத்தை: ஒற்றைப் பெற்றோரின் அந்த நிலைக்கு தான் தான் காரணம் என ஊகித்துக் கொள்வது இந்த வெறுப்பான நடத்தைக்குக் காரணமாக இருக்கக் கூடும்.
உற்றாருடன் மோசமான உறவு (நெருங்கிய நண்பர்கள் குறைவாக இருத்தல்): உற்றார் நிராகரித்து விடக்கூடும் அல்லது ஒற்றைப் பெற்றோருடன் சேர்த்து குழந்தையை குறைவாக நினைக்கக் கூடும். நண்பர்களின் இந்த நடத்தை குழந்தைகளை தங்களது உற்றாரிடமிருந்து விலகி இருக்க வைக்கலாம், இதனால் அவர்களுக்கு குறைவான நண்பர்களே இருப்பார்கள்.
பொருளாதாரச் சிரமங்கள்: ஒற்றைப் பெற்றோருக்கு ஒரே ஒரு வருமானம் மட்டுமே இருப்பதால் தனது குழந்தையின் புத்தகங்கள், சீருடை, உடை, கணினி, தனியார் அமர்வுகள், வெளியே கூட்டிச் செல்லுதல், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், பார்ட்டிகள் முதலிய அனைத்து தேவைகளையும் கவனிக்க முடியாமல் போகலாம் இது அந்த குழந்தைக்கு பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையை உருவாக்கிவிடும்.
ஒற்றைப் பெற்றோருடன் பலவீனமான உணர்வுப்பூர்வமான பிணைப்பு: குழந்தைகளின் உணர்வுப்பூர்வமான தேவைகளை நிறைவேற்ற ஒற்றைப் பெற்றோர் எப்போதும் தயார் நிலையில் இருக்க முடியாத காரணத்தால் குழந்தைகளை கவனிப்பதன் தரம் பொதுவாக சமரசம் செய்யக் கூடியதாகவே இருக்கும். ஒரு ஒற்றைப் பெற்றோருக்கும் தங்கள் வாழ்வில் ஏற்படும் வீட்டுப் பிரச்சினைகளை ஈடுசெய்வதற்கு அவர்களுக்கு ஒரு இடைவெளி தேவையாக இருக்கிறது. இதற்கிடையில், குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே உணர்வுப்பூர்வமான பிணைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
தவறான பொருட்கள் பயன்படுத்துதல்: ஒற்றைப் பெற்றோர் கொண்ட குழந்தைகள் இடையே போதை மற்றும் மது பயன்படுத்துவது சற்று அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவருகிறது. இந்த பழக்கம் அவர்களுக்கு மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான ஒரு கருவியாக அல்லது சமூக அழுத்தத்தின் காரணமாக அல்லது பெற்றோருடன் நேரம் செலவிட முடியாததால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஏற்பட்டிருக்கக் கூடும்.
ஒரு ஒற்றைப் பெற்றோர் கொண்ட குடும்பத்தில் வளரும் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். இது அந்த குழந்தை மற்றும் பெற்றோர் இருவருக்குமே மன அழுத்தத்தை உருவாக்கக் கூடும். எனினும், அந்த ஒற்றைப் பெற்றோர் பொறுமை மற்றும் நேர்மறையான நடத்தையை வெளிப்படுத்தினால், அது குழந்தையின் நடத்தையில் நேர்மறையான விளைவுகளைக் கொடுக்கும். இதனால் அந்த குழந்தை வளர்வதற்கு ஏற்ற ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்க முடியும்