Home சூடான செய்திகள் காலம் போன காலத்தில் செக்ஸி உடையா?- ஸ்ரீதேவிக்கு கண்டனம்

காலம் போன காலத்தில் செக்ஸி உடையா?- ஸ்ரீதேவிக்கு கண்டனம்

15

முன்னாள் நடிகையாகிவிட்ட ஸ்ரீதேவி, இப்போது தன் மகளை நடிகையாக்க தீவிரமாக முயன்று வருகிறார்.

மூத்த மகள் ஜானவியை விதவிதமாக அழகுபடுத்தி தன்னுடன் கூட்டிச் செல்லும் ஸ்ரீதேவி, மகளை விட செக்ஸியான உடைகளில் விழாக்களில் கலந்து கொள்கிறார்.

சமீபத்தில் கூட மும்பையில் நடந்த கவர்ச்சி பேஷன் ஷோவில், இளம் பெண்கள் அணியும் சிறிய உடைகளை அணிந்து நடைபோட்டார் ஸ்ரீதேவி. இது அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.

ஸ்ரீதேவியின் இந்த உடையும் நடையும் மகளிர் அமைப்புகளைக் கடுப்பேற்றியுள்ளன.

“நடிகையாக இருந்தவரை அவரது உடை பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. அது பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது.இப்போது அவர் இரு பெண்களின் தாய். இத்தனை வயதுக்குப் பிறகு, செக்ஸியாக உடை அணிந்து பொது இடங்களில் ஆட்டம் போடுவது அருவருப்பான விஷயம். ஸ்ரீதேவிக்கு இது ஏன் புரியவில்லை,” என்று மும்பை மகளிர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

Previous articleபூமியின் மிக ஆழமான கடலில் தனியாக பயணித்து ‘டைடானிக்’ இயக்குனர் சாதனை!
Next articleதெலுங்குப் படப்பிடிப்பில் நடிகை ஹன்சிகா காயம்