Home சூடான செய்திகள் கணவர் சில்மிஷம் செய்தா, கோச்சுக்காம அனுபவியுங்கள்!

கணவர் சில்மிஷம் செய்தா, கோச்சுக்காம அனுபவியுங்கள்!

9

images (1)காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவென்றாலும் சில நாட்களிலேயே தம்பதிகளுக்கு இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பு. ஆனால் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அதன்படி நடந்துகொண்டால் பிரச்சினைகள் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். வணிகத்தில் இணையும் இரண்டு நிறுவனங்களிடேயே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படுகிறது. இரண்டு நாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அதேபோல இல்லறத்திலும் தம்பதியரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

அமைதியா இருங்க

சண்டையே போட்டுக்கொள்ளாத தம்பதியர் இருந்தால் அவர்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பார்கள். ஏனெனில் சண்டை இல்லாத குடும்பங்களே இல்லை. அவ்வாறு சண்டை போட்டுக்கொள்ளாத தம்பதியர்களின் வாழ்க்கையை கவனித்துப் பார்த்தால்

அவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் வாழ்பவர்களாக இருப்பார்கள். ஒருவர் கோபப்படும் போது மற்றவர் அமைதியாக போய்விடுவதாலே அங்கே சண்டைக்கு இடமற்று போய்விடுகிறது. இதற்குப் புரிந்துணர்வு மிக முக்கியமானதாகும்.

சுதந்திரம் முக்கியம்

“ஒருவரின் சுதந்திரம் மற்றவரின் மூக்கு நுனிவரை` எனக் கூறுவார்கள். தனிநபரின் சுதந்திரத்திற்கு பங்கம் வரும்போதுதான் கோபமும் கூட வருகின்றது. குடும்பத்தில் தம்பதியர்களிடையே கோபம் ஏற்பட்டு அது சண்டையாக மாறும் சமயத்தில் யாராவது ஒருவர் தன்மையுடன் நடந்து கொண்டால் சண்டைக்கு இடமில்லை.

இல்லறத்தில் பிரச்சினைகளை தீர்க்க நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய வகையில் சில நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் குடும்பச் சச்சரவுகளை வீதிவரை கொண்டு வராது வீட்டிலேயே தீர்த்துக் கொள்ளலாம். என்கின்றனர் நிபுணர்கள்.

பகிர்ந்து கொள்ளுங்கள்

குடும்பத்தில் இருவருமே தொழில் செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அங்கு அதிக அளவில் சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளது. கணவர் வீட்டிற்கு வந்த பின்னரும் மனைவி வீட்டில் இல்லாத பட்சத்தில் அங்கு எரிச்சலும், கோபமும் ஏற்படுகிறது. கணவன் தனது வேலைப்பளுவைப் பற்றி உங்களுடன் பேசும் போது அவர்களது சுமைகளைப்பகிர்ந்து கொள்ளாமல் “எனக்கும் வேலை தான்“ பிரச்சினை இருக்கிறது. நான் அதையெல்லாம் முடித்து வந்த வீட்டு வேலைகளைப் பார்க்கவில்லையா?` என்று கூறாதீர்கள். இது அவர்களின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தம்.

வெளிப்படையாக இருங்கள்.

உங்களுடன் படித்த அல்லது வேலை பார்க்கும் ஆண் நண்பர்களுடன் பழகும் போது கணவருக்கு தெரியும்படியாக அவருக்குக்கூட அறிமுகப் படுத்திவிட்டு பழகுங்கள். இதனால் குடும்பத்தில் தேவையற்ற குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கலாம். இதைவிடுத்து உங்கள் நண்பர்கள் குறித்து நீங்கள் மறைத்திருந்தால் அது தேவையில்லாத சந்தேகங்களுக்கு வித்திடும். எனவே வெளிப்படையாக இருங்கள்.

அனுசரனையான வாழ்க்கை

வீட்டில் உள்ள மூத்தவர்களை கூடியவரை அனுசரித்துப்போங்கள். அதிகளவான குடும்பங்களில் பிரச்சினை இவர்கள் மூலம் தான் ஆரம்பிக்கின்றது. உங்கள் கணவனிடம் குறைகள் காணுமிடத்து குறிப்பாக அவர் நடத்தையில் சந்தேகம் வரும்போது “அவர் அப்படிச் செய்யக்கூடியவர் தானா?` என்று உங்களுக்குள்ளேயே சுயமதிப்பீடு செய்து முடிவெடுங்கள் ஒரு தீர்மானத்திற்கு வரமுடியாத சந்தர்ப்பத்தில் மட்டும் அவருடன் அதுபற்றி நேரடியாக பேசுங்கள் தேவையில்லாமல் உங்கள் நண்பர்களிடமோ உறவினர்களிடமோ இது பற்றி பேசாதீர்கள்.

விருப்பத்தை நிறைவேற்றுங்கள்

தம்பதியரிடையே பிரச்சினைகள் ஏற்பட மூல காரணம் படுக்கையறையில் ஏற்பட்ட திருப்தியளிக்காமையாகத் தான் இருக்கும். ஆண்களின் விருப்பம் ஆசைகளைப்பற்றி ஓரளவாவது அறிந்து வைத்திருப்பது நல்லது. அதற்கேற்றால் போல் செயற்படுங்கள். நீங்கள் சமைக்கும் போதோ அல்லது துணிதுவைக்கும் போதோ அல்லது குளிக்கும் போதோ வந்த சின்னப் பிள்ளைகளைப்போல போல் சீண்டுவார்கள். அதை அனுபவியுங்கள்.

நீங்கள் மறுக்கும் பட்சத்தில் ஆசையாக உங்களை அணுகும் கணவரை பல மடங்கு தாக்கும். அவர்கள் மனமுடைந்து விடுவார்கள். படுக்கையறைதான் செக்ஸுக்குரிய இடமென்று கருதாதீர்கள். வீட்டின் மற்றைய இடங்கள் தான் அதிகளவான இன்பத்தை உண்டு பண்ணும். எனவே இல்லறத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொள்ளுங்களேன். உங்களின் வாழ்க்கை சிக்கல் ஏற்பட வாய்ப்பே இல்லை.