Home பெண்கள் பெண்குறி ஒழுங்கற்ற மாதவிடாய்: இதைக் குணப்படுத்த என்ன வழிகள் உள்ளன?

ஒழுங்கற்ற மாதவிடாய்: இதைக் குணப்படுத்த என்ன வழிகள் உள்ளன?

39

ஒழுங்கற்ற மற்றும் தவறிய மாதவிடாய்க்கு பல காரணங்கள் உண்டு. பொதுவாக ஹார்மோன் தொந்திரவுகளே இதற்கான முக்கிய காரணம். மற்ற வியாதிகளும் தொற்றுநோய்களும் கூட இந்தப் பிரச்சினையை உண்டாக்கும்.

மகளிரின் இந்த முக்கியமான உடல்நலப் பிரச்சினையைத் தீர்க்க நமது உலகில் பல சாதரண வழிகள் கையாளப்படுகின்றன. இவை:

• முதலில் உடம்புக்குத் தேவையான, சத்துள்ள உணவைச் சாப்பிடுங்கள். புரதம், இரும்புச்சத்து உள்ள உணவுகள் மிகவும் முக்கியம். பூசணிக்காய், பப்பாளிப்பழம், பேரீச்சம்பழம், முருங்கைக்காய், புடலங்காய், பாவக்காய் மற்றும் வெள்ளரிக்காய் நல்லது. புதிய, பசுமையான அன்று சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிடுங்கள். ஜங்க்ஃபுட் மற்றும் எல்லா பதனிடப்பட்ட உணவுகளைத் தவிருங்கள்.

• 2 முதல் 4 மாதங்கள் வரை தினமும் புதிதாக பிழியப்பட்ட காரட் சாற்றை குடிங்கள்.

• சிறிது இஞ்சிச்சாற்றில் தேனைக் கலந்து குடிங்கள்.

• இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வெந்தயம் உதவுகிறது.

• எள்ளும் மிக நல்லது.

• பெருங்காயமும் ஃப்ரோஜெஸ்ட்ரோன் என்ற பெண் பாலியல் ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்து உதவுகிறது.

• புதினாத் தூளையும் தேனையும் சம அளவில் கலந்து தினமும் 3 முறை சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை தீரும்.

இந்த முறைகளை 2 மாதங்கள் வரை பயன்படுத்தியும் பிரச்சினை தீராவிட்டாலோ, அதிக இரத்தப்போக்கு, இரண்டு மாதவிடாய்களுக்கு இடையில் இரத்தக்கசிவு மற்றும் மிக வலியுள்ள மாதவிடாய் இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் செல்லுங்கள்.

Previous articleமருத்துவ பலன் கொண்ட மூலிகை..!!
Next articleபெண்களின் பின்னழகில் உள்ள மயக்கம்…!!