Home ஆண்கள் எவ்வளவு கெஞ்சியும் கணவர் மாட்டேன் என்கிறார்! திருமணமான 1 வருடத்திற்குள் ஆண்களுக்கு இப்படியெல்லாம் உணர்வு வருமா?

எவ்வளவு கெஞ்சியும் கணவர் மாட்டேன் என்கிறார்! திருமணமான 1 வருடத்திற்குள் ஆண்களுக்கு இப்படியெல்லாம் உணர்வு வருமா?

247

என்னுடைய நெருங்கிய சொந்தத்தில், ஒரு வருடத்திற்கு முன்பு தடாபுடலாக திருமணம் நடந்தது. இதுவரைக்கும் அவ்வளவு ஆடம்பரமாக, எனக்கு தெரிந்து எங்கள் உறவினர்கள் யாரும் திருமணம் செய்தது இல்லை. மணப்பெண் எனக்கு தங்கை உறவு முறையில் வருவாள். அவங்க எல்லாம், எங்களுக்கு பங்காளி சொந்தம் என்று அப்பா சின்ன வயதில் சொன்னதாக நியாபகம். மாப்பிள்ளை வீடு வசதி அதிகம் என்பதால், தங்கையை, குதி போட்டுக்கொண்டு திருமணம் முடித்து வைத்தனர்.

மாப்பிள்ளை எப்படிம்மா? என்று தங்கையிடம் கேட்டதற்கு, அதெல்லாம் தெரியாதுன்னா, இனிமேல் அவங்க வீட்டுக்கு போன பிறகு தான் தெரியும் என்றாள். வசதியான இடம், கார், சொந்த வீடு, வாடகைக்கு நிறைய கடை கட்டிவிட்ருக்காங்க என்பதை மட்டுமே பார்த்து, ஏதோ தெரியாத இடத்தில் விழுந்து விட்டார்கள் என்று மனது உறுத்தியது. இருந்தாலும், காலம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதால், பெரிதாக நானும் என்னுடைய உணர்வை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

நான் நினைத்த மாதிரியே ஒரு வருடத்தில், நடக்கக்கூடாததெல்லாம் நடக்கிறது. “கல்யாணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகல, அவரு என்னைய வேண்டாம்னு சொல்றாருனா. நானும் அவரை ரொம்ப காதலிக்கிறேன். அவர் தான் உலகம்னு நினச்சுட்டேன். என்ன சொல்லியும், நீ எனக்கு வேண்டாம்டின்னு சொல்றாரு” என்று கண்ணீரோடு வந்து நின்றாள். விசாரித்து பார்த்ததில், மாப்பிள்ளை சைடு கொஞ்சம் கை மோசம் போல. வசதி இருப்பதால், பல பெண்களை ஏற்கனவே ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது.

கல்யாணம் செய்தது கூட, ஊருக்குள் கெட்ட பெயர் வரக்கூடாது என்ற காரணத்துக்காக தானாம். திருமணத்துக்கு முன்பே பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவன் அவன். தங்கை விஷயத்தில் ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. இன்னைக்கு வரன் பார்க்கும் பல பெண்களின் பெற்றோர், சம்பளம், அரசு வேலை, சொந்த வீடு தகுதியாக பார்க்கிறார்களே தவிர, குணத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. குறைவான சம்பளம் வாங்கினாலும், எதிர்கால மனைவிக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள், கடைசி வரைக்கும் கட்டபிரம்மச்சாரிகளாவே வாழ வேண்டியது தான் போல.

என்னுடைய ஆதங்கத்தை எல்லாம் தூக்கி ஒரு மூலையில் வைத்துவிட்டு, கண்ணீரோடு வந்த தங்கையிடம் கொஞ்ச நேரம் பேசி, அம்மா வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்று பார்த்த காலம் எல்லாம் அந்த காலத்திலேயே முடிஞ்சு போச்சு. உன் புருஷன் கடைந்தெடுத்த கேப்புமாறி என்று தெரிந்த பின்னரும் நீ அங்கு இருப்பது சரியல்ல. உன்னுடைய காதலையும், அன்பையும் புரிந்துகொள்ளாமல் கா மத்தை மட்டுமே எதிர்பார்ப்பவனிடம், வாழ்வதற்கு வாழாமலே இருக்கலாம்.

அவன் உன்னை வேண்டாம் என்று சொல்லி, வீட்டை விட்டு போ என்று சொன்ன பிறகும், அங்கு அடிமை வாழ்க்கை வாழ வேண்டும் என்ற அவசியமே இல்லை. புரிதல் இல்லாத கணவரை மறப்பதுதான் புத்திசாலித்தனம். காதல் மனைவி கிடைப்பதே அபூர்வம். அப்படிப்பட்ட மனைவி கிடைத்தும் வெறுக்கும் அவனெல்லாம் வாழவே தகுதியில்லை. இனிமேல் அவன நினைச்சு கண்ணீர் விடாமல், உன்ன பெத்தவங்களுக்கு கொஞ்ச நாள் ஆறுதலா இரு. கூடிய சீக்கிரத்தில் வாழ்க்கை வேறு விதமாக மாறும் என்று சொன்ன பிறகு, மனநிறைவோடு கிளம்பி போனாள்.

Previous articleஇந்தக்கால இளம்பெண்கள் தூங்கும் போது பொம்மையை கட்டிப்பிடித்து தூங்க காரணம் என்ன தெரியுமா?
Next articleபெண்களும் ஆ பாச படம் பார்ப்பார்களா? உறவில் அவர்கள் எதிர்பார்ப்பது என்ன? பலரும் பேசத்தயங்கும் டாபிக்