Home சமையல் குறிப்புகள் எளிமையான ஆரஞ்சு கீர்

எளிமையான ஆரஞ்சு கீர்

19

Orange-Kheer-1-300x215தேவையான பொருட்கள் :
ஆரஞ்சு பழம் – 3
பால் – 4 கப்
கண்டென்ஸ் மில்க் – 5 ஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
ரோஸ் எசன்ஸ் – 3 சொட்டு
செய்முறை :
* ஆரஞ்சு பழத்திலிருந்து சதையை மட்டும் தனியாக எடுத்து உதிர்த்து வைக்கவும்.
* பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்து பிரிட்ஜில் வைக்கவும்.
* பால் நன்றாக குளிர்ந்த பின்னர் பிரிட்ஜில் இருந்து அதை எடுத்து அதில் கன்டென்ஸ் மில்க்கை சேர்த்து நன்றாக கலக்கவும்.
* அடுத்து அதில் ஏலக்காய்தூள், உதிர்த்து வைத்த ஆரஞ்சு சதையை சேர்த்து நன்றாக கலந்து மறுபடியும் பிரிட்ஜில் வைக்கவும்.
* கீர் நன்றாக குளிர்ந்ததும் அதை வெளியில் எடுத்து அதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்து பருகவும்.
* சுவையான ஆரஞ்சு கீர் ரெடி.