Home சூடான செய்திகள் என்னை சரியாக திருப்திப்படுத்தவில்லை. பாலியல் தொழிலாளியிடம் $80,000 நஷ்ட ஈடு கேட்ட நபர்.

என்னை சரியாக திருப்திப்படுத்தவில்லை. பாலியல் தொழிலாளியிடம் $80,000 நஷ்ட ஈடு கேட்ட நபர்.

30

prostitute1_620_1745134aநியூசிலாந்தில் ஒருவர் சமீபத்தில் தான் பாலியல் தொழிலாளி ஒருவரை அணுகி அவர் கேட்ட பணத்தை கொடுத்ததாகவும், ஆனால் அவருடன் இரண்டு மணிநேரம் இருந்தும் அவர் தன்னை திருப்திப்படுத்தவில்லை என்றும், எனவே அவர் தனக்கு $80,000 நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் ஆக்லாந்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை அவர் Mr. N என்ற புனைப்பெயரில் ஆக்லாந்து நீதிமன்றத்தில் தொடுத்தார். தன்னை Ms.M என்ற பாலியல் தொழிலாளி தன்னை இரவு முழுவதும் திருப்திபடுத்துவதாக கூறி அவர் கேட்ட தொகையையும் எனது விலையுயர்ந்த செல்போனையும் பெற்றுக்கொண்டார். ஆனால் இரண்டு மணி நேரம் ஆகியும் என்னை அவர் திருப்திபடுத்தவில்லை.
எனவே நான் மன உளைச்சலுடன் அங்கிருந்து திரும்பினேன். இந்த வழக்கில் MS. M என்ற பாலியல் பெண்ணுக்காக வாதாடிய வழக்கறிஞர், Mr. M வேண்டுமென்றே தவறான தகவல் தருவதாகவும், அவர் தனது செல்போனை மறந்து வைத்துவிட்டதாகவும், அந்த செல்போனை திருப்பி அவரிடம் சேர்க்க MS. M பலமுறை முயற்சி செய்ததாகவும், மேலும் அவர் தன்னை திருப்திபடுத்தவில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய் என்றும், பொய்வழக்கு ஜோடித்து தனது கட்சிக்காரரின் மனதை நோகடித்த Mr. N , தனது கட்சிகாரருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் வாதாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரின் கோரிக்கையையும் தள்ளுபடி செய்து வழக்கையும் டிஸ்மிஸ் செய்தார். வழக்கு தொடுத்த Mr. N அவர்களையும், வழக்கறிஞர்களையும், நீதிபதி கண்டித்தார். நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கியதாக இருவருக்கும் அபராதம் விதித்தார்.