Home இரகசியகேள்வி-பதில் உடலுறவில் திருப்தி இல்லாததால் லெஸ்பியனாக மாறிய பெண் !

உடலுறவில் திருப்தி இல்லாததால் லெஸ்பியனாக மாறிய பெண் !

95

கேள்வி :
அன்புள்ள அம்மா,
கல்யாணமாகி, 10 வருடமாக ஒல்லியாக இருக்கும் ஒரு பெண், போதுமான அளவு தாம்பத்ய உறவு இல்லாததால் தான், குண்டாகி விடுகிறாள் என்று டாக்டர் சொல்கிறார்; இது சரியா?
இனி, என் குடும்ப விஷயம்: என் வயது 35. என் கணவர் வயது 40. 15 வயதில் ஒரு பெண் குழந்தை. இருவர் குடும்பமும், மிக ஆச்சாரமான குடும்பம் தான். என் கணவர், வைதீகம். நாலாயிரம்திவ்ய பிரபந்தத்தை கரைத்து குடித்தவர். கோவில் அர்ச்சகரும் கூட. அவருக்கு செக்சில் ஆர்வமே இல்லை. அவ்வப்போது வெளியூரும் சென்று விடுவார்.
10 நாள் கழித்து தான், வீட்டுக்கு வருவார். எப்போதும், பஞ்சகச்ச உடைதான். மேலும், மூன்று வருடங்களாக, அவருக்கு ரத்த கொதிப்பும், சர்க்கரையும் உண்டு.
அலுப்பாகயிருக்கிறது என்று, சாந்தி முகூர்த்தம் அன்றும், அடுத்த நாளும் தூங்கி விட்டார். முதல் ஐந்து வருடம், மாதத்திற்கு இரு முறை. போகப்போக, மாதத்திற்கு ஒரு முறை என்றே, தாம்பத்திய உறவு இருந்தது. நான் காலையும், கையையும், உடம்பையும் பிடித்து விட்டாலும், “என்னை தொந்தரவு செய்யாதே… காலை 4.00 மணிக்கு கோவிலுக்கு போகணும்…’ என்பார்.
இனி, என்னைப்பற்றி : நான் பி.ஏ., பட்டதாரி. வேலைக்கு போகவில்லை. என் கணவரின் வற்புறுத்தலால், எப்போதும் மடிசார் புடவை தான் கட்டிக் கொண்டிருப்பேன். எனக்கு அம்மா கிடையாது. அப்பா வெளிநாட்டில், என் அண்ணா வுடன் இருக்கிறார்.
எங்கள் இருவர் பக்கத்திலும், உறவினர்கள் கிடையாது. 28 வயது வரை புடலங்காய் போன்று ஒல்லியாக இருந்த என் உடம்பு, நாளாக நாளாக கொஞ்சம், கொஞ்சமாக பெருத்து விட்டது.
என் உணவு விஷயம்: காலை 6.00 மணிக்கு காபி, 8.00 மணிக்கு கஞ்சி, 12.00 மணிக்கு சைவ சாப்பாடு, மாலை, 4.00 மணிக்கு டிபன், வாரத்திற்கு, மூன்று நாட்கள் இரவு மோர் சாதம். துணி துவைப்பது, வீட்டை பெருக்கி, கோலம் போடுவது, பாத்திரம் கழுவுவது எல்லாம், நான் தான்.
தினமும் காலை, 9.00 மணிக்கு கோவிலுக்கு போவேன். உணவு விஷயத்தில் கட்டுப்பாடும், கோவிலை சுற்றி வருவதுடன், வீட்டு வேலைகளையும் நானே செய்வதன் மூலம், உடற்பயிற்சி என்ற ஒன்று இயற்கையாகவே உண்டாகிறது. இப்படியிருக்க, உடல் ஏன் பெருத்து விடுகிறது.
வைத்திய பரிசோதனை செய்தேன். எல்லாம் நார்மல். என் சொந்த வீட்டின் பக்கத்து போர்ஷனில், 50 வயதான விதவை டாக்டரம்மா ஒருவர் இருக்கிறார். மிகவும் நல்லவர். என் மேல் ரொம்ப அன்பு வைத்திருப்பவர். என் கணவர் வெளியூர் செல்லும் போதெல்லாம், அந்த டாக்டரம்மா, எனக்கு துணையாக ஹாலில் படுக்க வருவார்.
அந்த, “மூன்று’ நாள் மென்சஸ் போதும், டாக்டரம்மா தான் எனக்கு சமையல் செய்து போடுவார். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும், தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது வழக்கம். ஒரு வெள்ளிக்கிழமையில் ஏதேச்சையாக வந்த அந்த டாக்டரம்மா, “நான் எண்ணெய் தேய்த்து விடுகிறேன்…’ என்று சொல்லி, தேய்த்து விட்டார். “நான் வேண்டாம் மாமி…’ என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல், பல முறை எனக்கு எண்ணெய் தேய்த்து விடுவார். முதலில், தலைக்கு மட்டும், எண்ணெய் தேய்த்து விட்டார். பிறகு கை, கால்களுக்கும் தேய்த்து விட்டார். எனக்கு ஆனந்தமாகவும், வெட்கமாகவும் இருந்தது.
அந்த விதவை டாக்டரம்மாவிடம், என் உணவு கட்டுப்பாடு விஷயத்தையும், கோவிலை சுற்றுவதன் மூலம் கிடைக்கும் நடை பயிற்சி பற்றியும் சொன்னேன். “என் உடம்பு நாளுக்கு நாள் ஏன் பெருத்து விடுகிறது…’ என்று கேட்டேன். என் தாம்பத்திய உறவு பற்றி கேட்டார். கடந்த, “ஐந்து வருடமாக, 40 நாளுக்கு ஒரு முறை தான் என்னுடன் சேருகிறார்…’ என்றும், “அதுவும் ஐந்து நிமிடமே’ என்று சொன்னேன். அந்த டாக்டரம்மா, “உனக்கு போதுமான அளவு தாம்பத்ய உறவு இல்லாதது தான் காரணம். இந்த 35 வயதில், மூன்று குழந்தைகள் பெற்றிருக்க வேண்டுமே…’ என்றும், “இன்னும் நான்கு மாதத்தில், உன்னை ஒல்லியாக இருக்கும்படி செய்கிறேன்…’ என்றும் சொல்லி, “நெருங்கி’ பழக ஆரம்பித்து விட்டார்.
என் உடல் இளைக்க, ஒல்லியாக இருக்க, நான் அந்த டாக்டரம்மாவிடம், அவர் விருப்பப்படி, “நெருங்கி’ பழகுவதில், எந்த தப்பும் இல்லை என்று எனக்கு தோன்றுகிறது.
தங்களுடைய கருத்துகளை, அபிப்பிராயங்களை தெரிந்து கொண்ட பின், நான் ஒரு முடிவுக்கு வருகிறேன்.
— இப்படிக்கு அன்பு மகள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பதில் :

அன்புள்ள மகளுக்கு,

உன் கடிதம் கிடைத்தது.


கல்யாணமாகி பத்து வருடமாக ஒல்லியாக இருக்கும் ஒரு பெண், போதுமான அளவு தாம்பத்ய உறவு இல்லாமல் இருந்தால், குண்டாகி விடுகிறாள் என்று, உனக்கு பரிட்சயமான டாக்டர் கூறுகிறார். இது சரியா என கேட்டிருக்கிறாய். பொதுவாக, பெண்கள் பிரசவத்திற்கு பின் குண்டாவர். அம்மா வழி பாட்டி, அம்மா குண்டாக இருந்தால், மகளும், முப்பது வயதுக்கு மேல் குண்டாவர். தாம்பத்யம் சரிவர கிடைக்காத மன உளைச்சலில் இருக்கும் பெண்கள், ஹைபோ தைராய்டினால் பாதிக்கப்பட்டு குண்டாவர் அல்லது புலீமியா என்னும் நோயால் பாதிக்கப்பட்டு, அதிக உணவு உண்டு குண்டாவர். பகல் தூக்கமும் கூட, குண்டாவதற்கு முக்கிய காரணம். ஆனால், திருமணமான பெண்கள், பத்து வருடங்களுக்கு பின் குண்டாவதற்கு, தாம்பத்யமின்மை நேரடி காரணமாகாது. விதவை டாக்டரம்மா, தன் தேவையை பூர்த்தி செய்ய பொய் சொல்லி இருக்கிறார். தன் லெஸ்பியன் உறவு மூலம், உன்னை ஒல்லியாக்குவதாக சொல்வது, சுத்த ஹம்பக்.


உன்னுடன் நட்பாய் இருக்கும், 50 வயது விதவை டாக்டரம்மா, அலோபதி மருத்துவரா, சித்த மருத்துவரா என்பதை நீ குறிப்பிடவில்லை. டாக்டரம்மாவின் மகன், மகள் குடும்பத்தினர் எங்கு இருக்கின்றனர், என்ன செய்கின்றனர் என்பதையும், நீ குறிப்பிடவில்லை. நீயும், டாக்டரம்மாவும், ஒரே படகில் பயணம் செய்கிறீர்கள். ரத்தக்கொதிப்பும், நீரழிவு நோயும் உள்ள, இறை ஊழியர் கணவன் உனக்கு; டாக்டரம்மாவின் கணவர் இறந்து விட்டார். உனக்கு அரைகுறை தாம்பத்யம் அபூர்வமாய் கிடைக்கிறது; டாக்டரம்மாவுக்கோ அது அறவே கிடைக்கவில்லை.


டாக்டரம்மா ஒரு நீண்ட நாள் லெஸ்பியனாக தெரிகிறார். அவரது செயல்களில், இரையை வளைத்துப் பிடிக்கும் லாவகம் தெரிகிறது. அவரது செயல்பாடு தெரிந்துதான், அவரது குடும்பத்தினர், அவரிடமிருந்து ஒதுங்கி நிற்கின்றனரோ என, சந்தேகிக்க தோன்றுகிறது. குண்டாய் இருப்பது, தாம்பத்யம் கிடைக்காமல் இருப்பது என, உனக்கு இரண்டு பிரச்னைகள். ஆனால், தாம்பத்யம் சரிவர கிடைக்காத பிரச்னைதான், உனக்கு பிரதானம். அதன் முகமூடிதான் குண்டாய் இருக்கும் பிரச்னை.


ஒரு குறிப்பிட்ட மருந்தை, உடல் ஒல்லியாக சாப்பிடலாமா என கேட்பது போல், உடல் ஒல்லியாக, டாக்டரம்மாவுடன் லெஸ்பியன் உறவு வைத்துக் கொள்ளலாமா எனக் கேட்காமல் கேட்கிறாய். இது விபரீதமான கேள்வி. உன் பிறந்த வீட்டு, புகுந்த வீட்டு மாண்புகளை சீர்குலைத்து விடும், உன் லெஸ்பியன் ஆசை. உன் ஊளைச் சதையை குறைக்கவும், உன் கணவரின் ஆண்மைக்குறையை நிவர்த்தி செய்யவும், ஹோமியோபதியில் மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. பதிவு பெற்ற ஹோமியோபதி மருத்துவரை அணுகு. டாக்டரம்மாவை, பக்கத்து போர்ஷனிலிருந்து காலி பண்ண வை. உன் கணவரிடம் மனம் விட்டு பேசி, உன் தேவைகளை பூர்த்தி செய்து கொள். பருவ வயது மகளின் எதிர்காலத்தில் முழு மனதையும் செலுத்து, மற்ற விஷயங்கள் அற்பமாகும். கோவில் அர்ச்சகரின் குடும்பம், லெஸ்பியன் உறவினால் சிதறிப்போக, ஒரு நாளும் விட மாட்டார் பெருமாள் என, நான் திண்ணமாக நம்புகிறேன் மகளே!

— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.