Home காமசூத்ரா உங்கள் பாலியல் செயல்பாடுகளை பாதிக்கும் முக்கிய காரணிகள்

உங்கள் பாலியல் செயல்பாடுகளை பாதிக்கும் முக்கிய காரணிகள்

38

பாலியல் செய்திகள்:உலகின் தலை சிறந்தது எதுவென்று கேட்டால் அது நாம் வாயால் சொல்வதை விட அதனை நிகழ்த்தி காட்டுவதே. அதாவது “செயல்” தான் முதன்மையான ஒன்றாக என்றுமே இப்பூமியில் போற்றப்படுகிறது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு முக்கிய காரணம் இருக்க கூடும். குழந்தையாக பிறந்த போது செய்யும் செயலின் அர்த்தம் புரியாமல் செய்து வந்திருப்போம். காலம் போக போக, அவற்றின் புரிதல் அதிகம் ஆகி கொண்டே போகும்.

அந்த வகையில் நாம் திருமண பருவம் அடைந்தவுடன் நாம் செய்யும் செயல் நம் இணையை பாதிக்குமா, என்பதை நன்கு புரிந்து கொண்டு செய்தல் வேண்டும். ஏனெனில் அவை உங்கள் இல்லற வாழ்வை முற்றிலுமாக சீர்கேடு அடைய செய்து விடும். இந்த பதிவில் ஆண்களின் தாம்பத்திய வாழ்வை கெடுக்கும் 15 பழக்க வழக்கங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

இல்லற வாழ்வு இனிதே..! தனக்கு பிடித்தமானவரை தேர்வு செய்து, அவருடன் காதல் வயப்பட்டு இனிமையான வாழ்வை மேற்கொள்வதே மனித பிறப்பின் உன்னத நோக்கமாகும். அடுத்து அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து புணரும் போது அற்புதமான நிகழ்வு நடைபெறும். அதாவது, இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு உயிரை உயிர்ப்பிப்பது மிகவும் மகத்தான செயலாக இந்த பூமியில் கருதப்படுகிறது. இதுவே இல்லற வாழ்வின் முக்கிய அங்கமாகும்.

அதிக உப்பு, குறைந்த இன்பம்..! பெரும்பாலான ஆண்கள் தங்களின் உணவில் அதிக உப்பை சேர்த்து கொள்கின்றனர். இது அவர்களின் ரத்தை அழுத்தத்தை உயர்த்தி, ஆணுறுப்பை பாதிக்கிறது. இதனால் அவர்களின் இணை இல்லற வாழ்வில் திருப்தி அடைய முடிவதில்லை. மேலும், அதிக உப்பு ஆண்களின் மன நிலையையும் பாதித்து விடுமாம்.

உறவை கெடுக்கும் உறக்கம்..! இன்றைய நவீன உலக வாழ்வில் பலர் நிம்மதியான வாழ்வை மேற்கொள்வதில்லை. இதற்கு காரணம் அவர்களின் உணவு முறை, உறக்க முறை, இல்லற வாழ்வு போன்றவற்றை கூறலாம். ஆண்கள் போதுமான நேரம் தூங்கவில்லை என்றால், அவர்களின் உடலை பாதித்து விறைப்பு தன்மை போன்றவை ஏற்பட கூடும். இது இல்லற வாழ்வை பெரிதும் பாதிக்கும்.

நான் ரொம்ப பிசி..! ஆண்கள் செய்யும் பல செயல்களில் இந்த ஒரு செயல் அவர்களின் இணையை அதிகம் பாதிக்கிறதாம். பெரும்பாலும், ஆண்கள் தங்கள் வேலைகளில் மிகவும் பிசியாக இருப்பதால் அவர்களின் இணையுடன் இருக்கும் நேரம் குறைகிறது. இது அவர்களின் புரிதலை குறைத்து, இல்லற வாழ்வை பெரிதும் பாதிக்குமாம்.

ஸ்மார்ட் போன் வேண்டாமே..! இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டி படைத்து கொண்டிருப்பது ஸ்மார்ட் போன்கள் தான். நீங்கள் அதிக நேரம் ஸ்மார்ட் போனில் கவனம் செலுத்தினால் இது உங்கள் இணையுடன் உறவு முறிதலை ஏற்படுத்தும். மேலும், இன்பமான வாழ்வு நரகமாக மாற கூடும்.

ஜீன்ஸ் தரும் பாதிப்புகள்..! பல ஆராய்ச்சிகளும் ஆண் மற்றும் பெண் இறுக்கமான உடைய அணிவதை தவிர்க்க வேண்டும் என்றே சொல்கிறது. குறிப்பாக ஜீன்ஸ் போன்ற உடைகளை இறுக்கமாக அணிவதால், அவர்களின் இல்லற வாழ்வை பாதிக்குமாம். சில சமயஙக்ளில் பிறப்புறுப்பில் தொற்றுகள் கூட உருவாக கூடும்.

விறைப்பு தன்மை தரும் ஜங்க்..! ஆண்கள் வீட்டில் சாப்பிடும் உணவை விட வெளியில் சாப்பிடும் ஜங்க் ஃபூட்ஸே அதிகம். இது உங்களின் இல்லற வாழ்வில் எத்தகைய பாதிப்பை தரும் என்பதை நீங்கள் உணராமல் இருக்கிறீர்கள். ஜங்க் ஃபூட்ஸ் விறைப்பு தன்மையை ஏற்படுத்த கூடியது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே உங்கள் தாம்பத்திய உறவை இவை கெடுத்து விடும்.

மது, உறவுக்கு கேடு..! பெண்களை விட ஆண்களே அதிகம் மது பழக்கத்திற்கு அடிமை ஆகியுள்ளனர். பொதுவாகவே மது பழக்கம் ஆரோக்கியமான உடல் நலத்தை தராது. மேலும், இது உளவியல் ரீதியாகவும் எண்ணற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த கூடும். ஆதலால், மது பழக்கம் பல்வேறு வகையில் உங்கள் இல்லற வாழ்வில் இடர்பாடுகளை ஏற்படுத்தும்.

மன அழுத்தம்… வேலையில் உள்ள கோபங்களை பல ஆண்கள் வீட்டில் வந்து கொட்டி விடுகின்றனர். தனது இணையுடன் பகிந்து கொள்ளுதல் வேறு, இணையுடன் கோபமாக கத்துவது வேறு. இவ்வாறு அதிக மன அழுத்த நிலையில் நீங்கள் இருந்தால் கட்டாயம் தாம்பத்திய வாழ்வை கெடுத்துவிடும்

குறட்டை செய்யும் பாடுகள்..! பல வீடுகளில் குறட்டை விடுவதால் அன்றாடம் சண்டை நடக்க கூடும். இது உங்கள் இருவருக்கும் இடையில் ஒருவித விரிசலை ஏற்படுத்தும். காரணம் என்னவென்றால், ஆழ்ந்த தூக்கத்தில் உள்ள உங்கள் இணை, நீங்கள் விடும் குறட்டையால் கடுப்பாக நேரலாம். இதனை சரி செய்ய மருத்துவரை அணுகுங்கள் நண்பர்களே.

எப்போதும் ஒரே மாதிரியா..? யாருக்காக இருந்தாலும் செய்த ஒரே செயலை மறுபடி மறுபடி செய்தால், நிச்சயம் எரிச்சலை தரும். அதே போன்றுதான், இல்லற வாழ்வில் இனிமையாய் என்றும் இருக்க ஆணும் பெண்ணும் புது புது விஷயங்களை பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும். அத்துடன் புதிய தாம்பத்திய முறையையும் கையாளுங்கள்.

உங்கள் இணையிற்கான நேரம்..! பெரும்பாலும் பல விவாகரத்து பிரச்சினைகள் ஏற்பட காரணம், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளாமலே இல்லற வாழ்வில் சேர்வதுதான். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் முதலில் தங்கள் இணையுடன் புரிதலை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால், இது பொய்யான இனிமையற்ற நினைவுகளையே தரும்.

புகை உறவுக்கும் பகை…! யாராக இருந்தாலும் புகை பழக்கம் கட்டாயம் அவர்களின் தாம்பத்திய வாழ்வை முற்றிலுமாக கெடுத்து விடும் என மருத்துவர்களை கூறுகின்றனர். புகை பழக்கம் திருப்தியான இல்லற வாழ்வை தராதாம். மேலும், இருவருக்கும் பல வித உடல் கோளாறுகளை ஏற்படுத்தும்