Home காமசூத்ரா இளம் ஆண் பெண்களின் கட்டில் அறை பரபரப்புகள்

இளம் ஆண் பெண்களின் கட்டில் அறை பரபரப்புகள்

195

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களைப் போன்ற மனமொத்த நண்பர்களைத் தொடர்புகொள்வதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவர்கள் கருத்தடை முறைகள், சாதனங்கள் பற்றி எளிதில் அவர்களால் தெரிந்துகொள்ள முடிகிறது, அவற்றை எளிதாகப் பெற முடிகிறது. இதுபோன்ற காரணங்களால் கேஷுவல் செக்ஸ் எனும் நடைமுறை தற்கால இளைஞர்களிடையே பெருகிவருகிறது. இன்றுள்ள இளைஞர்கள், குறிப்பாக பதின்பருவத்தினர் கேஷுவல் செக்ஸ் என்பதை அருமையான விஷயமாகப் பார்க்கின்றனர். ஆனால் அது அவர்களின் மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம், இரண்டின் மீதும் தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர் அல்லது ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர்.

வேலை காரணமாகவும் படிப்பு காரணமாகவும் இன்று எண்ணற்ற இளைஞர்கள் வேறு நகரங்களுக்குச் சென்று வசிக்க வேண்டியுள்ளது, அங்கே அவர்கள் கேஷுவல் செக்ஸ் அனுபவத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் பெறவும் வாய்ப்புகள் பல உள்ளன. டேட்டிங் பயன்பாடுகள் பல கிடைக்கின்றன, அவர்களுக்கு பல்வேறு கருத்தடை முறைகள், சாதனங்களைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கிறது (அரைகுறையாக இருந்தாலும்), திருமணம், திருமண பந்தத்தில் உறுதியோடு நீண்டகாலம் இருப்பது போன்றவை பற்றிய அவர்களின் கண்ணோட்டம் மிக லேசாகிவிட்டது. இது போன்ற காரணங்களால் திருமணத்திற்கு முன்பு கேஷுவல் செக்ஸ் அனுபவத்தைப் பெற அவர்கள் முற்படுகின்றனர். திருமணத்திற்கு முன்பு கன்னித்தன்மை அவசியம் என்பது இப்போது பெரிதாகக் கருதப்படுவதில்லை.

இதுபோன்ற போக்குகளுக்குக் காரணமாக நிபுணர்கள் பின்வரும் சிலவற்றைக் குறிப்பிடுகின்றனர்:

சமூக மரபுகளில் மாற்றம்: நம் சமூகத்தில் பாலியலைப் பற்றிப் பேசுவதே தவறாகக் கருதப்படுகிறது என்றாலும், காமசூத்திரம் உருவான இந்த மண்ணில் திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவைப் பற்றி இன்றைய இளம் தலைமுறையினர் இயல்பாக எடுத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். நாடு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. சமூகத்தில் ஏற்படும் இந்த மாற்றங்களைத் தான் திரைப்படங்களும் பிரதிபலிக்கக் காண்கிறோம்.
குடும்ப அமைப்பு – இன்றும் பெற்றோர்கள் தங்கள் இளம் வயதுப் பிள்ளைகளிடம் பாலியல் மற்றும் பாதுகாப்பான உடலுறவு குறித்துப் பேசத் தயங்குகின்றனர். இப்படிப் பேசினால் தன் மகளோ/மகனோ பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கிவிடுவார்களோ என்று அவர்களுக்கு பயமுள்ளது.
பந்தங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த பயம் – இன்றைய இளைஞர்களுக்கு திருமண பந்தம், குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது சார்ந்த பொறுப்புகள் ஆகியவற்றைக் கண்டு பயப்படத் தொடங்கியுள்ளனர். சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் திருமணம், குடும்பம் போன்ற அமைப்புகள், அவர்கள் தான் விரும்பும் துறையில் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்திற்குத் தடைகளாக இருப்பதாகக் கருதுகின்றனர். நீடித்த பந்தத்தில் இருப்பதை தற்கால இளைஞர்கள் கடினமாகக் கருதத் தொடங்கியுள்ளனர். திருமண முறிவுகள் அதிகரித்து வருவதும், அவர்கள் திருமண பந்தங்களை விரும்பாமல் விலகிச் செல்லக் காரணமாக உள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி – இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, குறிப்பாக மருத்துவத் துறையில் உள்ள வசதிகளின் காரணமாக, இளைஞர்கள் கேஷுவல் செக்சில் ஈடுபடும்போது எதிர்பாராமல் கர்ப்பமடைவதை எளிதாகத் தடுக்க முடிகிறது, பால்வினை நோய்கள் போன்ற பிற பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் முடிகிறது.
கேஷுவல் செக்சின் தொலைநோக்கு விளைவுகள் (Aftereffects of casual sex)

ஒவ்வொருவருக்கும் தன் விருப்பப்படி சுதந்திரமாக வாழ உரிமை உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் அதே சமயம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறை அவர்களுக்கு பிற்காலத்தில் என்னென்ன விளைவுகளைக் கொடுக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இளம் தலைமுறையினர் இதன் ஆபத்துகளை உணரத் தவறிவிடுகின்றனர்.

பால்வினை நோய்கள் வரும் ஆபத்து: பலருடன் உறவு வைத்துக்கொள்வதால் பால்வினை நோய்கள் வரும் ஆபத்து அதிகரிக்கிறது. இது போன்ற உறவுகளால் எய்ட்ஸ் போன்ற உயிர்கொல்லி நோய்கள் வருவது மட்டுமின்றி, பிற்காலத்தில் உளவியல் பிரச்சனைகளும் வர வாய்ப்புள்ளது.
தேவையற்ற கர்ப்பம்: தற்காலத்தில் பல்வேறு கருத்தடை முறைகளும் சாதனங்களும் கிடைக்கின்றன என்றாலும், அவை எல்லாமே 100% உத்தரவாதமளிப்பவை அல்ல. கேஷுவல் செக்ஸ் மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவால் தேவையற்ற கர்ப்பம் ஏற்படலாம். பாதுகாப்பான உடலுறவு பற்றி போதிய விவரமில்லாத இளம் வயதினர் இந்த ஆபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். உடலுறவுக்குப் பிறகு பயன்படுத்தும் கருத்தடை மாத்திரைகளும் உள்ளன என்றாலும் அவற்றால் எதிர்காலத்தில் பெண்களுக்கு பல பாதகமான விளைவுகள் ஏற்படலாம் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர்.
How Casual is Casual Sex?

உளவியல் பிரச்சனைகள்: இளம் வயதில் பாலியல் அனுபவங்களைப் பெற்ற இளம் வயதினர் பலருக்கு பிற்காலத்தில் நம்பிக்கை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல முறை உடலுறவு கொள்வது, குறிப்பாக பெண்களுக்கு, அர்த்தமுள்ள உறவுகளைக் கண்டறிவது கடினமாகிவிடுகிறது.
இந்திய சமுதாயத்தில், இன்றும் பாலியலைப் பற்றிப் பேசுவதே தவறாகக் கருதப்படும் நிலையே உள்ளது. தன் பிள்ளைகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதை நினைக்க பெற்றோர்களுக்கு கடினமாக இருக்கலாம், ஆனால் அவர்களிடம் இது பற்றி வெளிப்படையாகப் பேசும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் எல்லா நேரமும் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று கண்காணித்துக்கொண்டு இருப்பது சாத்தியமில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும், ஆகவே அவர்களுக்கு பாலியல் பற்றியும் பாதுகாப்பான உடலுறவு பற்றியும் கற்றுக்கொடுக்க வேண்டியது முக்கியம். உங்கள் பிள்ளை பாலியல் உறவில் ஈடுபட்டிருப்பதைக் கண்டறிந்தால், அவர்களைக் கடிந்துகொள்ளவோ, தண்டிக்கவோ வேண்டாம், பயப்பட வேண்டாம். இதனால், அவர்கள் உங்களிடம் இயல்பாகவும் வெளிப்படையாகவும் பேசுவதற்கு தடையேற்பட்டு, உங்களுக்கு இடையிலான இடைவெளி இன்னும் அதிகமாகவே செய்யும். இது போன்ற செயல்களால் வரக்கூடிய ஆபத்துகள் பற்றி அவர்களுக்குக் கூறுங்கள். இதுபற்றிப் பேச உங்களுக்குத் தயக்கம் இருந்தால், ஆலோசகர்களின் உதவியை நாடலாம்.

கடினமாக உழைத்து வேலை செய்ய வேண்டும், அதைவிட அதிகமாக சந்தோஷமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற கொள்கையோடு வாழும் நபர்கள், ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் கேஷுவல் செக்சில் ஈடுபடும் முன்பு சற்று சிந்திக்க வேண்டும். இதற்கான உதவி மையங்கள், ஆலோசகர்கள் அல்லது குடும்பத்தினரிடம் உதவி கேட்கலாம். அவர்கள் இதில் உள்ள ஆபத்துகள் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குக் கூறுவார்கள், இதன் விளைவுகள் பற்றி அவர்களுக்குப் புரியவைப்பார்கள்.

சுதந்திரம் என்பது வாழ்வின் அமுதம் போன்றது, அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.