Home இரகசியகேள்வி-பதில் இந்த வயதில் காதல் தேவையா… கொஞ்சம் அடக்கி வாசிக் கலாமே

இந்த வயதில் காதல் தேவையா… கொஞ்சம் அடக்கி வாசிக் கலாமே

23

நான், வீட்டுக்கு மூத்த வன்; வயது 22. தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். பத்தாம் வகு ப்பு வரை தான் படித்தேன். அன்பான பெற்றோர்; இரண்டு தம்பிகள். போலீஸ் அதிகாரியாக வேண் டும்; இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற வேண்டும்; சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பதே என் ஆசை களாக இருந்தன. படிக் கும் வயதில் பள்ளிக்கு போகாமல், ஊர் சுத்தி னேன்; விஷயம் வீட்டுக்குத் தெரிந்தது. “பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, எது வேண்டுமானாலும் செய்…’ என்றனர் என் பெற்றோர். நானும், பல்லைக் கடித்துக் கொண்டு பள்ளிக்குப் போனேன்.
அப்போதுதான், இளமை பருவத்தில் வரும் காதல் தென்றல், என் னுடைய வாழ்க்கையிலும் வீச ஆரம்பித்தது. நான் பள்ளிக்கு போகும் போது, அந்த பெண்ணை பார்த்தேன். தொடர்ந்து பல தடவைகள் பார்த்தபின், அந்தப் பெண்ணின் மீது எனக்கு காதல் அரும்பியது. எட்டாம் வகுப்பு படிக்கும் அவளுக்கு, ஒரு கவிதை எழுதி அனுப்பினேன்; இரண்டு பக்கமும் பிரச்னை வெடித்தது. இந்த வயதில் காதல் தேவையா… கொஞ்சம் அடக்கி வாசிக் கலாமே என்று முடிவெடுத்தேன்.
தொடர்ந்து அந்த பெண்ணை பார்க்கவே பள்ளிக்கு போனேன். என்னுடைய வாழ்க்கையில் ஒருபோதும் பாடப் புத்தகங்களை தொடவே கூடாது என சங்கல்பம் கொண்டிருந்தேன். பத்தாம் வகு ப்பு பொதுத் தேர்வு நெருங்கிய போது, ஒரு சினிமா பார்த்தேன். அது, என் வாழ்க்கை பாதையை புரட்டி போட்டு விட்டது. தமிழ் சினிமாவில் பெரிதாக சாதிக்கணும் என்று உறுதி கொண்டேன். தேர்வுக்கு அனைவரும் புத்தகமும், கையுமாய் இருக்க, நான் மட்டும் புத்தகத்துக்குள் தாள் வைத்து கதை எழுதினேன்.
பத்தாம் வகுப்பு படித்து முடித்த பின், “என்ன செய்யப் போகிறா ய்?’ என்று அப்பா கேட்டார். “சினிமாவில் சேரப் போகிறேன் என் றால் உதைப்பார். அதனால், ஏதாவது வேலைக்கு போகிறேன்…’ என்றேன். எங்களது வீட்டுக்கு அருகில் ஒரு தனியார் நிறுவனம் இருந்தது; அதன் மேலாளர், அப்பாவின் நண்பர். மேலாளர் மூல மாக நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. இன்று வரை க்கும் அதே நிறுவனத்தில்தான் வேலை செய்கிறேன். படிக்க போவதை விட, வேலைக்கு போவது எனக்கு அதிக சந்தோஷத் தைக் கொடுத்தது. என் வாழ்க்கையில் எந்த பிரச்னையும் இல் லாமல், இரண்டு வருடங்கள் ஓடின. ஒரு நாளைக்கு இரு தடவை அந்தப் பெண்ணை பார்ப்பேன்; அந்தப் பெண்ணும் என்னை பார்ப்பாள். என்னுடைய காதலை, அவளிடம் வெளிப்படையாக சொல்ல முயன்று, தோற்றேன். நான்தான் படிக்கவில்லை. இப் போது காதலை சொல்லி, அவளின் படிப்பையும் கெடுக்க வேண் டுமா என்று யோசித்தேன். அவளின் படிப்பு முடிய காத்திருப் போம் என நினைத்தேன்.
தொடர்ந்து இன்று வரை காதலை அறிவிக்காமல் காத்திருக் கிறேன். அவளது குடும்பத்தில் பாட்டி, அம்மா, அக்கா, இரு அண் ணன், அண்ணிகள் உள்ளனர். மூத்த அண்ணியிடம் எனக்கு பரிச்சயம் உண்டு. என் காதல் அவளின் அன்பான குடும்பத்தை கலைத்து விடக்கூடாது அல்லவா!
அலுவலக வேலை நேரத்தில், கதைகள், கவிதைகள் எழுத ஆரம் பித்தேன்; பிரச்னை வெடித்தது. சினிமாவில் நடிப்பதற்காக, 2007ல் ஒரு முறை சென்னை வந்தேன். இங்கு, வந்தவுடன்தான் புரிந்தது, கோயமுத்தூர் வேறு, சென்னை வேறு என்று. அன்று முழுக்க சென்னையை சுற்றிவிட்டு, இரவே கோவை திரும்பி னேன். என்னுடைய வாழ்க்கையில் எதை தொட்டாலும், தோல் விதான். மீண்டும், 2008ல் சென்னை விஜயம். சினிமா கம்பெ னிகள் துரத்தியடித்தன. தற்கொலை செய்து கொள்ளப் போன என்னை, அம்மாவின் நல விசாரிப்பு போன் தடுத்து விட்டது. அன் றைக்கு குடிக்க இருந்த பூச்சி மருந்து இன்றைக்கும் பத்திரமாக என்கிட்ட தான் இருக்கிறது.
என் காதலியின் பள்ளி படிப்பு முடிந்தது. காதலை வெளிப்படுத்த சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த போது, காதலி வீட்டார் வே றொரு ஊருக்கு குடிபெயர்ந்து விட்டனர். மிகவும் சிரமப்பட்டு அவர்கள் இருக்கும் ஊரை கண்டுபிடித்தேன். இப்போது, அவள் கல்லூரியில் படிக்கிறாள். நான் சினிமாவில் பிரபலமானால், அவளே ஓடிவந்து, வெட்கத்தை விட்டு, காதலை அறிவிப்பாள். சினிமாவில் ஜெயிக்க திறமை மட்டும் போதாது; பணமும், அதிஷ்டமும் தேவை. சினிமா வாய்ப்பு ஒன்றிரண்டு வந்து கொ ண்டிருக்கிறது. அடிக்கடி சென்னை போய் வருவதால், கடன் பிரச்னை. மாதத்துக்கு, 20 நாள் விடுமுறை எடுப்பதால், அலுவலகத் தில் பிரச்னை. முணுக் கென்றால் எட்டி பார்க்கும் முன் கோபம் என்னை பந்தாடுகிறது. நான் எது செய்தாலும், பிரச்னையில்தான் முடிகிறது. நீங்களே சொல்லுங்கம்மா… நான் காதலிலும், சினிமாவிலும் ஜெயிப்பேனோ?
என் துரதிஷ்டம் என்னை விட்டு நீங்குமா? மூழ்கிக் கொண்டி ருக்கிற என்னை எப்படியாவது காப்பாத்துங்கம்மா… ப்ளீஸ்!
— விடிவை எதிர்பார்த்து,
உங்கள் அன்பு மகன்.
அன்புள்ள மகனுக்கு —
உன் கடிதம் கிடைத்தது. கடிதத்தில் அனைத்து வகை இலக்கணப் பிழைகளும் காணக் கிடைத்தன. வாக்கியங்கள் முற்றுப் பெறா மல், அந்தரத்தில் நின்றிருந்தன. பாராகிராப்புகள் பிரிக்கப்பட வில்லை. முந்தைய வாக்கியத்துக்கும், அடுத்த வாக்கியத் துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கடிதத்தை படித்து, தலை கிறுகிறுத்துப் போனேன். இந்த லட்சணத்தில் நீ கதையும், கவிதை யும் எழுதினால், அதை யார் வாசிப்பது?
உன் பெற்றோர் உனக்கு செல்லம் கொடுத்து சீரழித்திருக்கி ன்றனர். வாழ்க்கையில் பாட புத்தகங்களையே தொடக் கூடாது என்ற உயரிய நோக்கம் உனக்கு. உன்னை கண்டித்து, தண்டித்து, தொடர்ந்து படிக்க வைத்திருக்க வேண்டும் உன் பெற்றோர். போலீஸ், கிரிக்கெட் வீரன், சினிமா டைரக்டர் ஆக ஆசை உனக்கு. போலீசாக, ஐ.பி.எஸ்., படிக்க வேண்டும்; கிரிக்கெட்டராக, ஒரு நாளைக்கு, 15 மணி நேரம் வீதம், 10 வருடங்கள் உழைக்க வேண்டும்; ஆஸ்கர் பரிசு வாங்கும் சினிமா டைரக்டராக, 50 ஆயிரம் பக்கங்கள் வாசிப்பும், 30 வருட வாழ்க்கை கல்வியும் தேவை. இவை எதுவுமே உன்னிடம் இல்லை.
டைரக்டர் செல்வராகவன், அமீர், சற்குணம், நடிகர் தனுஷ் போன் றோர், இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற கல்வியோ, உழைப்போ தேவையில்லை என தாங்கள் எடுக்கும், நடிக்கும் படங்களில் கூறுகின்றனர். அதை பார்த்துதான் உனக்கு சினிமா ஆசை வந்திருக்கிறது. உன்னை ஒரு தமிழ் படத்தில், சின்னஞ் சிறு வேடத்தில் பார்த்த ஞாபகம் எனக்கு.
உன்னை புண்படுத்துவதற்காக நான் எதையும் எழுதவில்லை. உனக்கு அதிர்ச்சி வைத்தியம் தேவைப்படுகிறது; செய்கிறேன், விழித்துக் கொள்.
பதினைந்து வயதில், 12 வயது பெண்ணை காதலித்திருக்கிறாய். நீ, அவளை கதாநாயகியாக பார்க்க, அவள், உன்னை கோமாளி யாக பார்த்திருக்கிறாள். உன் காதல் வெறும் இனக்கவர்ச்சி. அவளின் படிப்பு முடிய நீ, காத்திருந்ததை பெரிய தியாகம் போல் கூறுகிறாய். அவளுக்கு, 15 வயதானவுடன், நீ உன் காதலை சொல்லி, அவளும், நீயும் வெளியூர் ஓடி பிச்சை எடுப்பீர்களா? நீ ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகக் கூறியிரு க்கிறாய். 10வது பெயிலான உனக்கு, கலெக்டர் வேலையா கிடைக்கும்? பியூன், அட்டெண்டர் அல்லது கேஷûவல் லேபரராக பணி செய்து கொண்டிருப்பாய்.
படிக்க வேண்டிய வயதில் படிக்காமல், ஒருதலை காதல் பண்ணி, சென்னைக்கு அவ்வப்போது ஓடி, சினிமா வாய்ப்பு தேடி விட்டு, வாழ்க்கையில் எதை எடுத்தாலும் தோல்வி என புலம்பியி ருக்கிறாய். தற்கொலை செய்யப் போனவனை தாயின் போன் தடுத்து விட்டதாம்… ஆஹா!
உன்னுடைய எல்லா பிரச்னைகளுக்கும், முழுக்க முழுக்க நீயே தான் காரணம். சொந்த செலவில் உனக்கே சூன்யம் வைத்துக் கொண்டிருக்கிறாய். என்ன செய்யலாம் என்கிறாய்?
துரத்தி, துரத்தி காதலித்த பெண்ணை, விட்டுவிடு; சினிமா ஆசைக்கு முழுக்கு போடு. உன் தயவில் வேறு யாராவது ஆஸ்கர் வாங்கட்டும். பார்க்கும் வேலையை விடுமுறை போடாது முழு ஈடுபாட்டுடன் செய்.
தொலை தூர கல்வி மூலம் பிளஸ் 2, அண்டர் கிராஜுவேட், போஸ்ட் கிராஜுவேட் படி. நல்ல வேலைக்கு போ. 29 வயதில் பெற்றோர் காட்டும் பெண்ணை மணந்து, அவளை ஆசை தீர காதலி. தேவை யில்லாத செலவுகளை செய்யாமல், கடன் வாங்குவதை நிறுத்து. யோகா, தியானம் கற்று, கோபத்தைக் குறை. மேற்சொன்ன வைகளை நீ செய்தால், வாழ்க்கையில் மிக உயர்வாய். உன் இப்போதைய கடிதம், எட்டு வருடங்களுக்குப் பின், உனக்கே ஒரு பகல் கனவு ஆசாமியின் புலம்பலாக தெரியும். ஜெயிக்கவே பிறந்தாய் மகனே… முந்தானை சிறையில் சிக்காது