Home சூடான செய்திகள் இந்தியிலும் ஜெயிப்பார் தனுஷ் – பாலிவுட் இயக்குநர் நம்பிக்கை

இந்தியிலும் ஜெயிப்பார் தனுஷ் – பாலிவுட் இயக்குநர் நம்பிக்கை

24

முதல் முறையாக பாலிவுட்டில் கால் பதிக்கும் தனுஷ், இங்கும் ஜெயிப்பார் என்று அவரை இயக்கவிருக்கும் ஆனந்த் ராய் தெரிவித்தார்.

கொலவெறி பாடல் தந்த தாறுமாறான வெற்றியால், தனுஷுக்கு திடீரென்று கிடைத்த வாய்ப்பு ராஞ்சனா படம்.

இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாகிறார் தனுஷ். ஜோடியாக சோனம் கபூர் நடிக்கிறார்.

தமிழ் நடிகர்களில் இந்தியிலும் நீண்ட நாட்கள் நடித்தவர், வெற்றி பெற்றவர் என்ற பெருமை ரஜினிக்கு மட்டுமே உண்டு.

வாரணாசியில் வாழும் சாதாரண குடும்பத்துப் பையனுக்கும், பெண்ணுக்குமிடையிலான காதல் கதைதான் இந்தப் படம்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் ஆனந்த் கூறுகையில், “பாலிவுட் எனும் புயலை வெற்றிகரமாக சமாளிப்பார் தனுஷ்.

பொதுவாக தமிழ் மற்றும் மலையாள நடிகைகள் பாலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டுகிறார்கள். ஆனால் அதுவே நடிகர்கள் என்றால் பாலிவுட்டில் வரவேற்பு இருப்பதில்லை. நிச்சயம் இந்த முறை அதில் மாற்றம் ஏற்படும்.

நல்ல தமிழ்ப் படங்களை இந்தியில் ரீமேக் செய்யும்போது, நல்ல தமிழ் ஹீரோக்களை வைத்து இந்தியில் படம் எடுக்காமல் போவது ஏன்?” என்றார்.