Home சூடான செய்திகள் ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!

ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!

35

m096-300x191பாலுணர்வு அல்லது செக்ஸ் உணர்ச்சி என்பது மிருகங்கள், பறவைகள் போன்ற ஜீவிகளுக்கு உள்ளதுபோல மானுட இனத்திற்கும் அதன் பிறவியிலேயே அளிக்கப்பட்ட இயற்கை உணர்ச்சியாகும். உணவுப் பசி, தண்ணீருக்காக ஏற்படும் தாகம், உழைப்பினால் ஏற்படும் களைப்பு, அதன் காரணமாக தேவைப்படும் ஓய்வும், உறக்கமும் போன்று, யதார்த்தமாக ஏற்படும் ஒரு இயற்கையான உணர்ச்சியே பாலுணர்ச்சியும் ஆகும். ஆனால், மற்ற இயற்கை உணர்ச்சிகள்

எல்லாவற்றையும் விட, இந்த உணர்ச்சிக்கு – நம் நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய அளவில – அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.இதற்குக் காரணம் என்னவென்று கூறுவதற்கு பெரும் சிந்தனை தேவையில்லை. பசி உள்ளிட்ட மற்ற அனைத்தும் அதன் நுகர்ச்சிக்குப் பின் சக்தியாகி, பின் கழிவாகின்றன. ஆனால், காமத்தின் நுகர்ச்சிக்குப் பின்தான் சந்ததி உருவாகிறது. குடும்பம் உருவாகிறது. சமூகம் உருவாகிறது. அதன் வளர்ச்சிப் போக்கில் நாடும், நாகரீகங்களும் உருவாகியுள்ளன. அனைத்திற்கும் வேராய் இருப்பது இந்த உணர்ச்சி. இதில் பெறும் இன்பம் வேறெதிலும் மானிடம் (ஆன்மீகத்தை தவிர்த்து விட்டுப் பார்ப்போம்) பெறுவதில்லை. அதனால்தான் மானுட வாழ்வில் இதற்கு ஒரு உயர்ந்த நிலை அளிக்கப்பட்டுள்ளது. அரசர் வரலாறும் அந்தப்புர வரலாறும்! மானுட வரலாற்றில் ஆட்சிக்கும் அந்தப்புரத்திற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. குறுநில மன்னர்கள், அரசர்கள் ஆண்ட காலத்தையும், பல்வேறு நாட்டு அரசர்கள், அண்டை நாட்டு அரசர்களை வெற்றிபெற்று தங்கள் எல்லைப்பரப்பை விரிவாக்கிக் கொண்டதையும் வரலாறு மூலம் அறிகிறோம். மன்னர் ஆட்சியானாலும், பெரிய சக்ரவர்த்தியானாலும் எல்லா ஆட்சிகளிலுமே அந்தப்புரம் என்ற ஒன்று இருந்துள்ளது. அதாவது, மன்னருக்கு ராணியைத் தவிர வேறு பெண்களுடன் பாலுறவு கொள்ள வேண்டும் என எப்போது நினைக்கிறாரோ, அப்போது அந்தப்புரத்தில் வாழும் அல்லது பரம்பரையாக வசிக்கும் பெண்களுடன் சரச விளையாட்டில் ஈடுபடுவார். அந்தப்புர பெண்களும் மன்னரை மனம் குளிர மகிழ்விப்பார்கள். நாள் கணக்கில், வாரக்கணக்கில் – ஏன் மாதக்கணக்கில் கூட அந்தப்புர பெண்களின் அழகில் மயங்கிக் கிடந்து ஆட்சியை இழந்த மன்னர்களும் உண்டு.இதன்மூலம் மனிதன் ஒரு பெண்ணிடம் மட்டுமே பாலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், அவ்வப்போது வேறு பெண்களையும் நாடிச் சென்றுள்ளான் என்பது தெரிய வருகிறது. இதில் மன்னன், சாதாரண மனிதன், ஆண், பெண் என்ற பேதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு அனைவருமே அடக்கம். நாளடைவில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து, ஜனநாயக ஆட்சி வந்த பின் பரத்தையர்கள் அல்லது விலைமாதர்கள் (தாசிகள் என்ற பெயரும் உண்டு) என்ற குறிப்பிட்ட பிரிவினர், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் தங்கள் இருப்பிடத்தை உருவாக்கி வாழ்ந்து வந்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஊரின் நாட்டாமை அல்லது பண்ணையார், ஜமீன் என அந்தந்த பகுதிகளில் செல்வாக்குப் பெற்றவர்களின் தயவில் அவர்கள் தங்கள் ‘பிழப்பை’ நடத்தி வந்துள்ளார்கள். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், கோயில் திருவிழாக்கள், ஊரில் முக்கிய நிகழ்ச்சிகள், ஜமீன்தார் வீடுகளில் நடக்கும் நன்நிகழ்ச்சிகளுக்கு பரத்தையர் குலத்தைச் சேர்ந்தவர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்ட பிறகே நிகழ்ச்சிகளை நடத்தி வந்திருப்பதையும் அறிகிறோம்.கோயில்களில் திருவிழாக்கள் மட்டுமல்லாது, அன்றாடம் நடைபெறும் திருப்பணி பூஜைகள், வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் இந்த பிரிவினர் நாட்டியம், பாடல் போன்ற கலைநிகழ்ச்சிகளையும் நடத்தி வந்துள்ளனர். விழாவிற்கு கூடும் பொதுமக்கள் அளிக்கும் காணிக்கை, ஊர்ப் பெரியவர்கள் தரும் சன்மானங்களைக் கொண்டு அவர்கள் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்கள். இந்த பிரிவினர் குறிப்பிட்ட எந்த ஒருவரையும் திருமணம் முடித்துக் கொள்ளாமல், தங்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளை மட்டும் வளர்த்து தங்கள் வழியில் கலைகளைக் கற்றுக் கொடுத்து பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்துள்ளதையும் காண்கிறோம். ஆண் குழந்தைகள் பிறந்தால், உடனே அந்தக் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொன்று விடுவார்களாம்.