Home ஆண்கள் ஆண்மைக்குறைவு என்றால் என்ன? ஒரு பார்வை ..

ஆண்மைக்குறைவு என்றால் என்ன? ஒரு பார்வை ..

58

முதலில் ஆண்மைக்குறைவு என்றால் என்ன? பலர் ஆண்மைக் குறைவையும்,குழந்தை பிறக்காமல் போகும் மலட்டுத் தன்மையையும் (infertility)போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள்.இரண்டிற்கும் சம்பந்தம் எதுவும் கிடையாது.மனத்தில் ஏற்படும் சலனத்தின், ஆசையின்,உணர்ச்சி வசப்படுவதின் போது , ஆணின் இரத்தோட்டம்(blood circulation)ஒழுங்காக இல்லாமால், ஆண்குறிக்கு இரத்தம் குறைவாக போக,(erectile dysfunction=ED),அதாவது மூளையின் உணர்வு நாளங்கள்(nerves) இராசயண செய்திகளை ஆண்குறியின் நாளங்களுக்கு அனுப்புகிறது.இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து,விந்து தள்ளுதல்(ejaculation) நடைபெறுகிறது. இந்தச் செயலுக்கு தடையாக, இரத்த ஓட்டம் குறைவதால், அல்லது தடைப்படுவதால் வருவது ஆண்மைக்குறைவு எனப்படுகிறது. அனேகமான சந்தர்ப்பங்களில் இது உளவியல் காரணமாகவே ஏற்படுகிறது.இந்த ஆண்மைக்குறைவு( erectile dysfunction=ED/male impotence) முற்றாக தடைப்படும் போது தான், விந்து தள்ளுதல் நடைபெறாமல் போவதும், கருத்தரிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.
ஆனால் விந்து தள்ளுதல் குறைவடையும் போதும் அல்லது தடைப்படும் போதும்(anejaculation ,) உயிரணுக்களின் குறைவால், இல்லாமையால் (azoospermia)அல்லது தரம் குறைந்து சுசுறுப்பாக இல்லாமையினால், உயிரணுக்கள், Fallopian Tube ல் பெண்ணின் முட்டையை அடைய முடியாமல் இருப்பதால் வருவது மலட்டுத்தன்மை.
ஆக தொலைக்காட்சி மருத்துவ விளம்பரங்களை மனத்தில் கொண்டு உங்களைக் குழப்பிக் கொள்ளாதீர்கள். இவை இரண்டுமே சிலருக்கு உடல் காரணமாகவும்,வேறு பலருக்கு உளவியல் காரணமாகவும் ஏற்படுவதால், மனம் உளவியல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து விட்டாலே, குறையின் பெரும்பங்கு நிவர்த்தி செய்யப்பட்டு விடும் என்பது,பொதுவாக மருத்துவ வட்டாரங்களின் முடிவாக இருக்கிறது.

இவை இரண்டிற்கும் நீரிழிவு(diabetes), தைரோய்ட் (thyroid ), இரத்த உயர் அழுத்தம், சிறுநீரக பிரச்சனைகள், இரத்த குழாய்,நாளங்கள் பழுதடைந்திருத்தல்,இருதய கோளாறு, ஹார்மோன்கள் குறைவாக சுரப்பது,தண்ணீரில் உள்ள அர்செனிக் நச்சுத்தான்மை(arsenic poison),அடிக்கடி நித்திரையில் ஏற்படும் விந்து வெளியேற்றம்(wet dream or nocturnal emission),சீரில்லாத குறைந்த இரத்தஓட்டம்,நரம்புத் தளர்ச்சி,விந்துநீர்ப்பை (prostate gland )நோய்கள் போன்ற நோய்களும் அல்லது குறைபாடுகளும், போதை மருந்துகள்,மது,புகைப்பிடித்தல்,சில மருந்துகளின் பக்க விளைவுகள், உணவு முறை போன்றவையும் காரணமாகின்றது.
இது தவிர நம்முடைய பழக்க வழக்கங்களும் பெரும் காரணமாக அமைந்து விடுகின்றன. இதற்கு தவறான எண்ணங்கள்,மனஅழுத்தம், பயம், கவலை, வெட்கம்,தாழ்வு மனப்பான்மை போன்ற காரணங்களை சொல்லலாம்.சில நோய்களை மருத்துவர்கள் மூலமும்,மற்ற காரணிகளை நாமாகவே சரிப்படுத்திக் கொள்ளவும் முடியும்.
இரண்டு மனம் ஒன்றுபட்டு வாழ்வதும்,சுக துக்கங்களில் பங்கு கொண்டு, அதைப் பகிர்ந்து கொள்வதும் திருமணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்றால்,மணமுறிவு ஏது,பிரிவு ஏது,கவலை ஏது,கண்ணீர் எது, போராட்டங்கள் ஏது,ஆண்மைக்குறைவு தான் ஏது?ஆண்மைக்குறைவுக்கு ஆண் மட்டுமல்ல,பெண்ணும் சில சமயங்களில் காரணமாகி விடுகிறாள் என்கிறது ஒரு ஆராய்ச்சித் தகவல்.
திருமணத்திற்கு முன்பு இருந்த சில பழக்கங்கள்,அதனால் ஏற்படும் பயம்,வெட்கம்,தாழ்வு மனப்பான்மை,அதை மனைவியிடம் சொல்வதில்,வெளிக்காட்டுவதில் உள்ள தயக்கம், சில ஆண்களை திருமணத்தின் பின் பாதிக்கின்றன.உங்கள் மனைவி,உங்கள் கணவன் குறைகளை எடுத்து சொல்வதில் , மனம் விட்டு பேசுவதில் என்ன தப்பு இருக்கிறது? பலரின் ஆண்மைக்குறைவுகளுக்கு கணவன்,மனைவியின் புரிந்து கொள்ளாமையும்,குறைகளை பேசி தீர்த்துக் கொள்ளாமையும் காரணம் என்கிறார்கள் மனநல ஆய்வாளர்கள்.நீங்கள் ஒன்றுபட்டு மகிழ்ச்சியுடன் வாழ விரும்புகிறீர்களா அல்லது பயம்,வெட்கம்,தாழ்வு மானப்பான்மையால் எதையும் பேசித் தீர்க்காது கவலையுடனும் ஏக்கத்துடனும் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கப் போகிறீர்களா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
என்னால் முடியுமா,மனைவி தவறாக நினைப்பாளா,போன்ற பயத்தை,தயக்கத்தை தவிர்த்து நடந்து கொள்வதும், நல்ல உணவு, தேகப்பயிற்சி,ஓய்வு,மனம் திறந்த பேச்சும், கூடவே மனைவி கணவனின் குறைகளை சுட்டிக் காட்டாது, வெறுக்காது புரிந்து கொண்டு நடப்பதாலும் இந்தப் குறையை போக்கி மகிழ்வுடன் வாழ முடியும்.
ஆண்குறிக்கு, விரைவாக வரும் இரத்தப் பாய்வும்(premature ejaculation), காலம் தாழ்த்தி வரும் இரத்தப் பாய்வும்(delayed ejaculation) சாதாரணமென்பதால், மனைவியுடன் மனம் திறந்து பேசுவதன் மூலம் இவற்றை தீர்த்துக் கொள்ளலாம். உடற்கட்டை அதிகமாக்கும் உடற்பயிற்சி,சரியான இருக்கை இல்லாத சையிக்கிளில் அதிக நேரம் பயணம் செய்வதை குறைப்பது,கொழுப்புள்ள உணவுகள்,அதிக சர்க்கரை,மாச்சத்து(fast food,fett,cholosterine,high sugar,carbohydrate,) குறைப்பது,மரக்கறி உணவு வகைகளை சேர்த்துக் கொள்வது, வைட்டமின்,zinc,selenium குறைபாட்டை நிவர்த்தி செய்வதும் அவசியமாகிறது.
90 வீதமானோருக்கு உளவியல் பிரச்சனைகள் காரணமென்பதால், முதலில் அதற்கு தீர்வு காண வேண்டும் என்பதே பொதுவான மருத்துவர்களின் கருத்தாகையால்,அந்தப் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிக்க வேண்டும், பிரச்சனைகள் தீராவிடின் பின்னர் டாக்டரை சந்திப்பது நல்லது.இதைவிட தன்னினச் சேர்க்கை உள்ளவர்களும், திருமணத்திற்கு முன் சுயஇன்பம் கண்டவர்களும், திருமணத்திற்குப் பின் குடும்ப உறவில் பின்வாங்குவதும், பயம் கொள்வதும் இயல்பானவை.இவை நோயும் அல்ல,தவறான பழக்கமும் அல்ல என்பதையும்,உங்களால் ஒரு பெண்ணின் உணர்ச்சிகள் உதாசீனம் செய்யப்படுகிறது என்பதையும் புரிந்து கொண்டு, மன உறுதியுடனும்,மனம் திறந்து பேசியும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம்.
12 வயதில் ஏற்படும் பருவ மாற்றத்திற்கு பின், 12 மாதங்களில் அநேகமாக இரவில் எல்லோருக்கும் ஏற்படக்கூடிய விந்து வெளியேற்றம்(wet dreams),விறைப்பு, இது நோயல்ல, பருவமடைந்த ஆணிடம் வழமையாக வரக் கூடியதும்,சலனம்,கனவு,சிறுநீர் நிரம்பி இருப்பது போன்ற காரணங்களாலும் வர சாத்தியமுண்டு.இது தவிர விறைப்பில் இரண்டு வகை உண்டு.சாதாரணமாக நித்திரையில் வருவது தூக்க விறைப்பு,(Nocturnal penile tumescence (NPT) இரண்டாவது மரண விறைப்பு,(death erection.) என்பது ஒருவன் தூக்கில் ஏற்றப்பட்டு அடையும் சாவின் போதும், தற்கொலை அல்லது வன்முறை காரணத்தால் இறக்கும் போதும் ஏற்படக் கூடியது (வன்முறையினால் இறப்பு ஏற்பட்ட பெண்களிடமும் இந்த death erection காணப்படுவதை பிரேத பரிசோதனையின் போது கண்டறியப்படுகிறது.).
இது தவிர கருத்தரிப்பிற்கு,மலட்டுத்தன்மைக்கு,தடையாக இருப்பது உயிரணுக்கள் குறைவாக காணப்படுவதும்( low sperm count,Oligospermia), இல்லாமல் இருப்பதும்(Azoospermia),Aspermia,Hypospermia போன்றவையுமாகும். உயிரணுக்களின், சாதாரணமாக ஒரு முறை வெளித் தள்ளப்படும், அளவு 2-6 மில்லிலிட்டராகவும், மில்லிலிட்டர்க்கு 20 மில்லியன் உயிரணுக்கள் இருப்பின் போதுமானதாயினும், தரமான,சுசுறுப்பான 2 மில்லியன் கூட கருத்தரித்தலுக்குப் போதுமாகும். உயிரணுக்கள் வரவு தடைப்படுவது,ஹார்மோன்,எடை அதிகரிப்பு, உணவு,அதிக சையிக்கில் ஒட்டத்தினால் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது,மனஅழுத்தம் போன்ற காரணங்களால் வரும் குறைகளை நிவர்த்தி செய்வதால் இவற்றை தீர்த்துக் கொள்ளலாம்.
எனவே ஆண்மைக் குறைவையும் கருத்தரிக்க முடியாது போவதையும் ஒன்றாக்கி விடாதீர்கள்.அதே சமயம் ஆண்மைக்குறைவு போல் பெண்களுக்கும் பெண்மைக்குறைவு ஏற்படுகிறது.இது female ejaculation எனப்படுகிறது.