Home சூடான செய்திகள் அவசரமில்லாத தொடக்கமே ஆரோக்கியத்திற்கு வழி

அவசரமில்லாத தொடக்கமே ஆரோக்கியத்திற்கு வழி

50

திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்களா நீங்கள்? அப்படியானால் உங்களுக்குத்தான் இந்த கட்டுரை. மற்றவர்கள் படிக்கவேண்டாம் என்றில்லை. படித்து பிறருக்கு ஆலோசனை கூறவேண்டும் என்று நினைப்பவர்களும் இதை படிக்கலாம். என்ன ஒரே சஸ்பென்சாக இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம் விசயம் அத்தனை முக்கியமானது.

அவசரம் வேண்டாம்

திருமணமான தினத்தன்று காலையில் முகூர்த்தம் முடிந்த உடனே இரவு நடக்கப்போகும் சாந்தி முகூர்த்தம் பற்றி பேசி புதுமணத் தம்பதிகளை திகிலில் ஆழ்த்துபவர்கள் தான் அதிகம் பேர் இருப்பார்கள். ஆனால் அவசரப்படாமல் ஆற அமர முதலிரவை வைத்துக்கொண்டால்தான் அது சுக இரவாக இருக்கும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள். தம்பதியர் முதன் முதலில் சந்தித்துக்கொள்ளும் இரவில் அதாவது முதலிரவில் நிம்மதியாக இருவரும் தூங்குங்கள் என்பதுதான் உளவியலாளர்கள் மற்றும் மருத்துவர்களின் அறிவுரை.

அடப்போங்க சார். யாருக்காவது முதலிரவில் தூக்கம் வருமா? என்று கேட்பது காதில் விழுகிறது. வேறு வழியில்லை கண்டிப்பாக அன்றைய தினம் தூங்கினால்தான் தொடரும் நாட்களில் சிக்கல் இல்லாமல் வாழ்க்கையை சந்திக்க முடியும் என்கின்றனர். ஏனெனில் என்னதான் சுற்றம் சூழ தாலி கட்டி மனைவி ஆக வந்து விட்டாலும் சந்தித்த முதல் நாளன்றே தாம்பத்ய உறவை தொடங்குவது சரியில்லை என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்து.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள்முதல் சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரில் ஆண், பெண் இருவருக்குமே ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். திருமண தினத்தற்கு வீட்டிலும், சத்திரத்திலும் ஒரே கூட்டமும் கும்மாளமுமாய், இருந்திருக்கும். தண்ணீர் மற்றும் கழிவறை பிரச்சினையினால் அவசரக்குளியல் என இருவரின் உடல்களுமே சுத்தமாக இருக்காது. இதனால் பரவும் நோய்களும் அதிகம், இதனால் தான் திருமண தினத்தன்றே தாம்பத்ய உறவை வைத்துக்கொள்வது ஆரோக்கியமானதல்ல என்கின்றனர் மருத்துவர்கள்.

ஹனிமூன் நோய்கள்

முதல்நாளே உறவைத் துவங்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸிசஸ் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாம். பிறப்புறுப்பை பாதிக்கும் பல வியாதிகள் வர வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். அவசர கோலத்தில், ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் உறவு கொள்ளும் தம்பதியருக்குக் இந்த வியாதிகள் கட்டாயம் வருமாம்.

முதலிரவன்று இதமான வெந்நீரில் நன்றாக குளியுங்கள். ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளை தவிருங்கள். அளவோடு மிதமான உணவாக உட்கொள்ளுங்கள். அன்றைய தினம் சம்பிரதாயத்திற்காக வைக்கும் பால், பழம், இனிப்புகளை சாப்பிட்டே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. உடலும் மனமும் லேசாக இருந்தலே பாதி டென்சன் பறந்துவிடும்.

அன்பை பரிமாறும் வழி

முதல்நாளன்றே ஒருவருக்கொருவர் தம்மை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் எதையாவது செய்யப்போய் அதுவே சிக்கலாகிவிடும் ஜாக்கிரதை. இதனால் இருவருக்குமிடையே அதிருப்தி உருவாகலாம். எனவே முதலிரவன்று புதுமணத்தம்பதியர் இருவரும் மனம் விட்டுப்பேசிக்கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக்கொள்ளலாம். விருப்பு, வெறுப்பு, குடும்ப சூழ்நிலை, பற்றியெல்லாம் பேசலாம்.

சின்னத் தொடுகை. மெல்லியதாய் ஒரு ஸ்பரிசம், போதும் அதுவே ஆயிரம் மடங்கு அன்பை இருவருக்குமிடைய உணர்த்துவதற்கு. தயக்கமும், கூச்சமும் களைந்த பின்பே தாம்பத்ய உறவை தொடங்குவதே ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படை என்கின்றனர் மருத்துவத்துறையினர். இந்த கட்டுரை பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்து திருமணம் செய்து கொண்டவர்களுக்கு மட்டுமல்ல. காதல் திருமணம் செய்பவர்களுக்கும் பொருந்தும்.

எனவே முதலிரவை, ஒரு நீ்ண்ட இனிய நாவலின் முன்னுரையாக கருதி நிதானமாக ஆரம்பியுங்கள். பிறகு பாருங்கள், வாழ்க்கை நாவலின் ஒவ்வொரு பக்கமும் படிக்கப் படிக்க இனிமையாக இருப்பதை உணர்வீர்கள்.

Previous articleகாலைநேரம் ஆண்களின் ஆண்குறி விறைப்பு
Next articleநான் கன்னித் தன்மை உடையவள்தான் என்பதை என் கணவருக்கு எப்படி நிரூபிப்பது?