Home சூடான செய்திகள் அஜித்துடன் குத்தாட்டம் போட்ட பிரேசில் அழகி

அஜித்துடன் குத்தாட்டம் போட்ட பிரேசில் அழகி

12

அஜித் நடிப்பில் உருவாகி வரும் பில்லா-2 படத்தில் பிரேசிலை சேர்ந்த கேபிரியல் பெர்ட்டான் என்ற அழகி அஜித்துடன் சேர்ந்து ஆட்டம் போட்டு இருக்கிறார்.
அஜித்தின் பில்லா படத்தின் ‌மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக பில்லா-2 உருவாகி வருகிறது.

சக்ரி டோல்ட்டி இயக்கி வரும் இப்படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தூத்துக்குடியில் டேவிட்டாக இருந்த அஜித் எப்படி பில்லாவாக மாறினான் என்பதே படத்தின் கதை.

படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இந்நிலையில் படத்தில் ஒரு பாடல் காட்சியில் பிரேசில் நாட்டை சேர்ந்த கேபிரியல் பெர்ட்டான் என்ற அழகி அஜித்துடன் நடனமாடி இருக்கிறார்.

இதுகுறித்து கேபிரியல் பெர்ட்டான் கூறுகையில், பில்லா படத்திற்கு முன்பே சக்ரி டோல்ட்டியை நான் சந்தித்து இருக்கிறேன். அப்போது அவரிடம் இந்திய படங்களில் நடிக்க ஆர்வம் இருப்பதாக கூறினேன்.

அதன்படி பில்லா-2 படத்தில் ஒரு பாட்டில் ஆட வாய்ப்பு கொடுத்தார். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் அஜித் கூட என்றதும் கூடுதல் சந்தோஷம்.

முதல் படத்திலேயே அஜித்துடன் நடனமா? என்று எனது நண்பர்களும் கூட ரொம்ப ஆச்சரியப்பட்டார்கள். ஆரம்பத்தில் அவ்வளவு பெரிய ஸ்டார் கூட எப்படி ஆடுவது என்று சற்று தயங்கினேன்.

ஆனால் அஜித்தே ரொம்ப என்கரேஜ் செய்து என்னை ஆட வைத்தார். அஜித் எப்பவும் தன் வேலையில் முழு ஈடுபாட்டோடு நடிப்பார். அதேசமயம் புதுமுகங்களையும் வரவேற்கும் நற்குணம் கொண்டவர் என்று தெரிவித்தார்.

மேலும் பில்லா-2 படத்தை தொடர்ந்து தெலுங்கில் ரவி தேஜா மற்றும் பவன் கல்யாண் உடன் ஒரு படத்திலும் கமிட் ஆகி இருக்கிறேன். தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Previous articleமலையாளத்திலும் திண்டாடும் பிரியாமணி
Next articleஎனது தாயார் என்னை பாராட்டினார்: ஸ்ருதிஹாசன்