Home சமையல் குறிப்புகள் ஆத்தூர் மட்டன் மிளகு கறி

ஆத்தூர் மட்டன் மிளகு கறி

33

தேவையான பொருட்கள் :

மட்டன் – அரை கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
இஞ்சி – பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
புதினா, கொத்தமல்லி, சிறிதளவு

மசாலாவுக்கு :

மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
வரமிளகாய் – 4
மல்லித்தூள்(அ)முழு மல்லி – 1 ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 2
முந்திரி – ஐந்து
ஏலக்காய் – 3
தேங்காய் – அரை மூடி
இஞ்சி – நெல்லிக்காய் அளவு
பூண்டு – 10 பல்

செய்முறை :

* வெங்காயம், புதினா, கொத்தமல்லி, சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மட்டனை சுத்தம் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* முதலில் மசாலாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள மிளகு, சீரகம், சோம்பு, வரமிளகாய், மல்லித்தூள்(அ)முழு மல்லி, பட்டை, கிராம்பு, முந்திரி, ஏலக்காய், தேங்காய், இஞ்சி, பூண்டு என அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு நைசாக அரைத்து கெள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மட்டன், மஞ்சள் தூள், உப்பு, வெங்காயம், தக்காளி, அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் ஊற வைத்த மட்டன் கலவையையும் சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்கவும்.

* சிறிது தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 விசில் போட்டு வேக விடவும்.

* விசில் போனவுடன் குக்கரை திறந்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் புதினா கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* ஆத்தூர் மட்டன் மிளகு கறி ரெடி.