Home இரகசியகேள்வி-பதில் என் கணவர் சுமார் 3 நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிப் பதில்லை

என் கணவர் சுமார் 3 நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிப் பதில்லை

86

கேள்வி: நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அவரிடம் உடலுறவு பற்றிப் பேசும்போது அவர் அருவருப் படைந்தார்.

அதேநேரம், திருமணத்தின் பின் நான் உறவுக்கு அழைத்து தான் மறுத்தால் தன்னுடன் சண்டை பிடிக்கக்கூடாது என்றும் கூறினார்.

இதனால் திருமணத்துக்குப் பின் இவரால் எனக்கு சுகம் கிடைக்காதோ என்று பயமாக இருக்கிறது. இது திருமணத்துக்குப் பின் சரியாகிவிடுமா? அவர் நிறைய விட யங்களில் அருவருப்படைபவர். அவரின் மனம் மாறுமா?

பதில்: அவர் தன்னை மாற்றிக்கொள்ள அனேக வாய்ப்புகள் உண்டு.
உறவு பற்றிய அவரது அருவருப்பானது, உடலுறவு பற்றி அவருக்குக் கிடைத்த தவறான தகவல்கள் அவரை இவ்வாறு எண்ண வைக்கலாம்.

அதாவது, அவர் பூப்பெய்தியதும் முன்னெச்சரிக்கைக்காக அவரது வீட் டிலோ அல்லது உறவு பற்றி அரைகுறையாகத் தெரிந்த அவரது நண்பிகள் வாயிலாகவோ இவ்வாறான எண்ணம் அவருக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.

சிலநேரங்களில் அவர் சிறு வயதில் யார் மூலமாவது துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியிருக்கலாம். சிறுவயதில் அந்தச் சம்பவம் அவர் மனதில் ஏற்படுத்திய வடுவானது உறவு குறித்த அவரது பார்வையைத் தவறாக்கியிருக்கலாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது நிச்சயமாக அவர் உறவை வெறுக்க வாய்ப்புகள் உண்டு.

ஆனால் ஒரேயொரு விடயத்தை மட்டும் நீங்கள் கவனித்தீர்கள் என்றால் இது பற்றிய அச்சம் உங்களுக்குள் எழுந்திராது. அதாவது, உறவை வெறுக்கும் பெண் ஒரு ஆணைக் காதலிக்கவோ, திருமணம் செய்யவோ நிச்சயமாக விரும்பமாட்டார்.

திருமணத்தின் பின் தாம்பத்தியம் அவசியம் என்பதை அவர் நன்கு அறிந்தேயிருப்பார்.

அப்படியிருந்தும் உங்களை விரும்புவதும், உங்களைத் திருமணம் செய்துகொள்ளவிருப்பதும், உறவின்பாலான அவரது தடையை இலகுவாக அகற்றிவிட முடியும் என்றும் அவரது இந்த அருவருப்பு உணர்வு மாறிவிடும் என்றுமே உணர்த்துகிறது
.
எனவே, இதுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை. சந்தோஷமாக உங்கள் உறவைத் தொடருங்கள்.

யாருக்குத் தெரியும்? உங்களைப் பற்றி அவருக்கு ‘நன்கு’ தெரிந்திருப்பதால், திருமணத்துக்கு முன் உங்களுடன் இவ்வாறு பேசினால் எங்கே நீங்கள் எல்லை மீறி விடுவீர்களோ என்ற பயத்தினால் கூட அவர் இப்படிக் கூறியிருக்கலாம்!

———————————
கேள்வி: எனக்கு வயது 28. திருமணமாகிவிட்டது. குழந்தைகள் இல்லை. உறவின்போது என் கணவர் சுமார் 3 நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிப் பதில்லை.

உச்சநிலைக்குப் பின் அவர் மிகுந்த கஷ்டத்துடன் சோர்ந்துவிடுகிறார்.

உறவின்போது வெளிப்படும் சுக்கிலப்பாயம் முழுவதுமாக என் பெண்ணுறுப் புக்குள் செல்வதில்லை.

வெளியே கசிந்து விடுகின்றன. சுக்கிலப்பாயம் முழுமை யாக உள்ளே செல்லாவிட்டால் குழந்தை பிறக்க வாய்ப்பில்லையா?

அத்துடன், உறவின் போது எனது அடிவயிற்றில் பலமான வலியை உணர்கிறேன். எங்களிடம் ஏதும் குறைகள் இருக்குமா?

பதில்: பெரும்பாலான ஆண்கள் 3 நிமிடங்கள் வரையே தாக்குப்பிடிப்பார்கள். எனவே இதை ஒரு குறையாக எண்ணிவிடாதீர்கள்.

முன் விளையாட்டுக்களில் அதிக நேரம் ஈடுபடுவதன் மூலம் அந்த மூன்று நிமிடங்களே பெண்களை உச்ச நிலை எட்ட வைக்கப் போதுமானதாக இருக்கிறது.

நீங்கள் கூறும் விபரங்களை வைத்துப் பார்க்கையில் உங்களது பிறப்புறுப்பில் காணப்படக்கூடிய கன்னித்திரை இன்னும் அகலாமல் இருக்கலாம் எனச் சந்தேகம் தோன்றுகிறது.

இதனாலேயே வலியும் சுக்கிலப்பாயம் வெளியேறும் போக்கும் காணப்படலாம் என்றும் தோன்றுகிறது.

சுக்கிலப்பாயம் முழுமையாக உள்ளே செல்வதனால் தான் குழந்தை உருவாகிறது என்பது தவறானது.

சுக்கிலத்தில் காணப்படும் கோடிக்கணக்கான உயி ரணுக்களில் வீரியமான ஒன்று உள்ளே சென்றால்கூட கரு முட்டையைத் தேடிப்போய் சினையாகிவிடும்.

இது நிகழ்வதற்குக்கூட உங்களது கன்னித்திரை விலகவேண்டும். எனவே, தாமதிக்காமல் ஒரு பெண்ணோயியல் வைத்தியரைக் கலந்தாலோசிப்பது நல்லது.

—————————————————
கேள்வி: எனக்கு வயது 22. என் கணவருக்கு வயது 27. திருமணமாகி ஒரு வருடமாகியும் குழந்தை இல்லை. நாம் உறவில் இணையும்போது என் கணவர் முன்விளையாட்டுக்களைத் தவிர்த்துவிட்டு உடனே இணைகிறார்.

அவர் உச்சம் தொட்டதும், என் தேவைகள் பற்றி சிந்திக்காமல் உடனே விட்டு விலகிவிடுகிறார். அவரைத் திருப்திப்படுத்தவே விருப்ப மில்லாமலேயே அவருடைய ஆசைக்கு இணங்குகிறேன். முன் பெல்லாம் இப்படியில்லை. இப்போது இப்படி நடந்துகொள் வதற்குக் காரணம் நான் இன்னும் கருவுறாமையா? என் மேல் அவருக்கிருந்த ஆசை குறைந்துவிட்டதா?

பதில்: வருத்தமான விடயம்தான்! ஒரு பெண்ணின் விருப்பத்தை அறியாமலேயே அதுவும் முன்விளை யாட்டுக்களைத் தவிர்த்து உறவில் ஈடுபடுவது, உடல் ரீதி யாகவும் உள ரீதியாகவும் அந்தப் பெண்ணுக்கு எந்தளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொண்டால் இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

திருமணமானது முதலே உஙகள் கணவர் இவ்வாறு நடந்துகொண்டிருந்தால் அதை வேறு விதமாகப் பார்க்கலாம்.

ஆனால், ஒரு வருடத்தின் பின் இப்படி நடந்துகொள்வதுதான் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஒரு வேளை நீங்கள் குறிப்பிடுவது போலவே குழந்தைப் பேறு கிட்டாததே பிரச்சினையாகவும் இருக்கலாம்.

தாம்பத்தியம் தவிர உங்கள் இருவருக்குமான உறவு எப்படியிருக்கிறது என்று தெரியவில்லை.

ஒருவேளை உங்களுடன் நன்கு சிரித்துப் பேசியோ அல்லது உங்கள் மீது அக்கறை செலுத்துபவராகவோ இருந்தால், இந்தப் பிரச் சினையை மென்மையான முறையில் அவரிடமேயே கேட்டுப் பார்க்கலாம்.

ஒருவேளை தன்னைப் பாதித்திருக்கும் ஏதோ ஒரு பிரச்சினை உங்களையும் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக, அவரும்கூட விருப்பமில்லாமல் உங் களுக்காக உறவில் இணையவும் வாய்ப்புகள் உள்ளன.

பொதுவில், இதுபோன்ற பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட இரண்டுபேரும் கதைத்துத் தெரிந்து கொள்வதே நல்லது. இல்லாவிட்டால் பல்வேறு சந்தேகங்கள் மனதுக்குள் குடிபுகுந்துவிடும்.

அப்படி நடந்துவிட்டால் அவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்வது மிகச் சிரமமான காரியம்.

எனவே, உங்கள் கணவரிடமேயே இதுபற்றிக் கதை யுங்கள். நிச்சயம் பிரச்சினைகள் தீரும்.