Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

26

Captureகுழந்தைகளுக்கு மசாஜ் செய்வதனால் அவர்கள் பல வித உடல்நல பயன்களை பெறுகின்றனர் என்று பல ஆய்வுகள் கூறுகிறது. அது குழந்தைகளுக்கு சொகுசை ஏற்படுத்தி அமைதியாக தூங்க வைக்கும். மேலும் மலச்சிக்கல் மற்றும் வாய்வு பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணியாக விளங்கும்.

குழந்தைகளுக்கு தினமும் சிறிது நேரம் மசாஜ் செய்தாலே போதுமானது. அதனால் அவர்களுக்கு கிடைக்க போகும் உடல்நல பயன்கள் பல உள்ளது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் டிப்ஸ் சிலவற்றை நீங்கள் அறிந்து வைத்திருந்தால் மசாஜை ஆனந்தமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிக்கலாம். இதோ, உங்களுக்காக சில மசாஜ் டிப்ஸ்களை பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதனால் கிடைக்கும் பெரிய பயன் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஏற்படும் பாச பிணைப்பே. ஸ்பரிசம் என்பது உங்கள் குழந்தைக்கு ஆயிரக்கணக்கான வார்த்தைகளை வெளிப்படுத்த ஒரு சிறந்த வழிவகையாகும். நீங்கள் அன்பாக தடவி கொடுப்பதால் உங்கள் குழந்தை பாதுகாப்பாக உணரும். இதனால் நீங்கள் அவர்கள் அருகில் இருக்கும் வேளையில் அவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.

குழந்தைகளை அன்பாக வருடும் போது அவர்கள் அமைதி அடைவார்கள். உங்கள் விரல்களால் நீங்கள் வருடும் போது உங்கள் குழந்தைகளுக்கும் நல்ல தூக்கம் வரும். இதனால் அவர்கள் தூங்க நல்ல சொகுசான சூழல் உருவாகும்.

மசாஜ் செய்வதனால் உடலில் உள்ள இரத்த ஓட்டம் மேம்படும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இது குழந்தைகளுக்கும் பொருந்தும். நன்றாக மசாஜ் செய்யும் போது அவர்களின் இரத்த ஓட்டம் மேம்படும். இதனால் ஏற்படும் அனைத்து உடல்நல பயன்களும் அவர்களை வந்தடையும்.

குழந்தையின் வயிற்றுப் பகுதியை சுற்றி மசாஜ் செய்தால் வாய்வினால் ஏற்பட்டுள்ள வயிற்று வழியை அது நீக்கும். மசாஜ் செய்யும் போது முட்டியையும் பாதங்களையும் ஒன்றாக பிடித்துக் கொண்டு, முட்டியை வயிற்றை நோக்கி மெதுவாக அமுக்குங்கள். இது குழந்தைக்கு ஏற்பட்டுள்ள வாய்வுகளை வெளியற்ற உதவும் முக்கியமான டிப்ஸ்களில் ஒன்று.

மலச்சிக்கல் என்பது குழந்தைகளுக்கு ஏற்பாடும் ஒரு பொதுவான பிரச்சனையே. குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதால் அது மலச்சிக்கலை தவிர்த்து அவர்களுக்கு பெரிய பயனை அளிக்கும். வயிற்றுப் பகுதியை சுற்றி மசாஜ் செய்தால் மலம் கழித்தல் மேம்பட்டு, மலச்சிக்கலை தவிர்க்கும்.

குழந்தைகளுக்கு செய்யும் மசாஜால் ஏற்படும் பயன்கள் குழந்தைக்கு மட்டும் தான் என்று கூறி விட முடியாது. ஒரு தாய்க்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன உளைச்சலை போக்கிடவும் இந்த மசாக் பெரிதும் உதவி செய்கிறது. மசாஜ் செய்வதால் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையே உள்ள பிணைப்பு அதிகரிப்பதால் இந்த மன உளைச்சல் நீங்கும்.