Home சூடான செய்திகள் யோனிப் பொருத்தம் இல்லாவிட்டால் தாம்பத்தியத்தில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

யோனிப் பொருத்தம் இல்லாவிட்டால் தாம்பத்தியத்தில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

29

திருமணத்தைப் பொருத்தவரை யோனிப் பொருத்தம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பொதுவாக திருமணத்தின் முக்கிய குறிக்கோள் புதிய சந்ததியை (குழந்தைகள்) உருவாக்குவது. இதற்கு தம்பதிகளுக்குள் உடல் ரீதியான உறவு முக்கியம்.

சுக்கிரன் நீதி, சுக்கிரன் நாடி ஆகிய நூல்களில் தம்பதிகளுக்கு பொருத்தம் பார்க்கும் போது அதனை லக்னம், ராசி ஆகிய 2 கோணங்களில் பார்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.ஜோதிடத்தைப் பொறுத்தவரை லக்னம் என்பது உயிர்; ராசி என்பது உடல்.

உதாரணத்திற்கு ஒருவர் மீன லக்னம், ரிஷப ராசி என்றால், மீன லக்னத்திற்கு 7, 8ஆம் இடம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதுடன், ராசிக்கும் 7,8ஆம் இடத்தைப் பார்க்க வேண்டும்.

ஜோதிட ரீதியாக ராசி என்பது சந்திரன் இருக்கும் இடத்தைக் குறிக்கிறது. உடல், மனதிற்கு உரிய கிரகம் சந்திரன். உடலுறவுக்கு உடலும், மனதும் ஒத்துழைக்க வேண்டும். எனவே, யோனிப் பொருத்தத்தைக் கணிக்கும் போது ராசியையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

யோனிப் பொருத்தம் உடல் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் ஜோதிடத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விலங்குகள் கூறப்பட்டுள்ளன. அந்த வகையில் தம்பதிகளுக்கு உரிய விலங்குகள் பகை இல்லாத வகையில் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு உடல் ரீதியான உறவு மேற்கொள்ளும் தன்மைகள்/இயல்பு சம்பந்தப்பட்டவருக்கும் காணப்படும்.

உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு ஆண் குதிரை என்று ஜோதிடத்தில் கூறப்பட்டு உள்ளது. எனவே, குதிரைக்கு உரிய சுபாவங்கள்/தன்மைகள் சம்பந்தப்பட்டவர் மேற்கொள்ளும் உறவின் போது வெளிப்படும். இது காம சாஸ்திரத்திலும் கூறப்பட்டுள்ளது.