Home சமையல் குறிப்புகள் மட்டன் கொத்து கறி

மட்டன் கொத்து கறி

13

maxresdefaultமட்டன் வேக வைக்க…

மட்டன் – 500 கிராம்
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 1/2 கப்

கறி செய்ய…

தேங்காய் எண்ணெய் – 1/4 கப்
பெருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ஒரு பிரஷர் குக்கரில் எழும்பு இல்லாத மட்டன் துண்டுகளை எடுத்து உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து 12 முதல் 15 விசில் வர வேக வைக்கவும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, பெருஞ்சீரகம் போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அத்துடன் வேக வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்க்கவும் பின் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். மட்டனில் உள்ள தண்ணீர் நன்கு சுண்டும் வரை அதிக வெப்பதில் வைக்கவும், பின் அதில் சிறிது மிளகு தூள் சேர்க்கவும். கரண்டியால் நன்கு அவற்றை கொத்தவும் பிறகு கொத்தமல்லி இலை சிறிது சேர்த்து பரிமாரவும். சுவையன மட்டன் கொத்து கறி ரெடி.