Home சமையல் குறிப்புகள் பட்டர் சிக்கன் செய்வது எப்படி

பட்டர் சிக்கன் செய்வது எப்படி

21

download (1)தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத சிக்கன் – அரை கிலோ
பட்டர் – 50 -75 கிராம்
காஷ்மீரி சில்லி பவுடர் – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 2 (பெரியது)
தக்காளி – 2 (பெரியது)
முந்திரிப்பருப்பு – 10
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
புளிப்பில்லாத கட்டி தயிர் – 1 டேபிள்ஸ்பூன்
பட்டை – 1,
கிராம்பு – 2,
ஏலக்காய் – 2
உப்பு – தேவைக்கு
கொத்தமல்லி இலை – அலங்கரிக்க
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சிக்கனை ஒரே போல் மீடியம் சைஸ் துண்டுகள் போட்டு அதனை நன்கு சுத்தம் செய்து அதில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், உப்பு, சில்லிபவுடர் 1 ஸ்பூன் போட்டு பிரட்டி ஊற வைக்கவும்.
* தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு தோல் உரித்து வைக்கவும்.
* வெங்காயம், முந்திரியை சிறிது பட்டர் போட்டு நன்கு வதக்கி ஆறவைக்கவும்.
* மிக்ஸியில் தோல் உரித்த தக்காளி, வதக்கிய வெங்காயம், முந்திரி சேர்த்து அரைத்து எடுக்கவும்.
* பின்பு கடாயில் பட்டர் விட்டு அதிகம் உருகும் முன்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு உடனே ஊற வைத்த சிக்கனை போட்டு சிவக்க பிரட்டி வேக விடவும்.
* பின்பு அதில் அரைத்த பேஸ்ட் சேர்த்து, 1 டீஸ்பூன் மிளகாய் தூள், உப்பு சிறிது சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
* நன்கு கொதிவந்து மணம் வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
* சுவையான பட்டர் சிக்கன் ரெடி.
* இது நாண், சப்பாத்தி, பரோட்டா உடன் பரிமாறலாம்.