Home சமையல் குறிப்புகள் சுவையான செட்டிநாட்டு மீன் குழம்பு

சுவையான செட்டிநாட்டு மீன் குழம்பு

13

1சுவையான செட்டிநாட்டு மீன் குழம்பு தயாரிக்கும் முறை எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மீன் – 1/2 கிலோ
வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
பூண்டு(உரித்தது) – ஒரு கைப்பிடி அளவு
மஞ்சள் தூள் –1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
தனியா தூள் – 2 டீஸ்பூன்
புளி – ஒரு எலுமிச்சை அளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
தாளிக்க :
கடுகு,
கறிவேப்பிலை,
காய்ந்தமிளகாய்
அரைக்க :
தேங்காய்துருவல் – 1/2 மூடி
செய்முறை:
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முதலில் மீனை சுத்தம் செய்து தனியே எடுத்து கொள்ள வேண்டும்.
* புளியை கரைத்து அதிலே மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு போட்டு கலக்கவும்.
* ஒரு கடாயை அடுப்பில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளிக்கவும்.
* தாளித்த பின் வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.
* தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் புளிதண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* அரைத்த தேங்காய் துருவலையும் அதனுடன் சேர்க்கவும்.
* குழம்பு கொதிக்கும் போது மீனை போடவும்.
* 10 நிமிடம் மீன் வெந்ததும் மேலே கொத்தமல்லி தூவி இறக்கவும்.
* இப்போது சுவையான செட்டிநாட்டு மீன் குழம்பு தயார்.