Home சமையல் குறிப்புகள் ‘சீரக சிக்கன் ஃப்ரை செய்வது எப்படி

‘சீரக சிக்கன் ஃப்ரை செய்வது எப்படி

28

என்னென்ன தேவை?

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
சீரகத் தூள் – 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
சிக்கன் – 500 கிராம்
தண்ணீர் – 1/2 கப்
எலுமிச்சை சாறு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி சீரகம் சேர்த்து பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். சீரகத் தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி சிக்கன் துண்டுகளைப் போட்டு டாஸ் செய்யவும். இப்போது உப்பு மற்றும் சிறிது தண்ணீர் விட்டு 10 நிமிடங்கள் வேக விடவும். சிக்கன் நன்கு சுருண்டு வரும்போது எலுமிச்சை சாறு சிறிது விட்டு இறக்கவும்.