Home பெண்கள் பெண்குறி அந்தரங்க பகுதியில் இது இருக்க காரணம் என்ன தெரியுமா?

அந்தரங்க பகுதியில் இது இருக்க காரணம் என்ன தெரியுமா?

56

பெண்களுக்கு பெண்ணுறுப்பில் ஒரு சில பிரச்சனைகள் வருகிறது. இதனால் அவர்கள் வெளியிடங்களுக்கு செல்லுதல், வேலைக்கு செல்லுதல் போன்ற நேரங்களில் அவர்களுக்கு இது பிரச்சனையை தருவதாக இருக்கும். மிகுந்த சிரமத்திற்கும் உள்ளாக்கும். பெண்ணுறுப்பில் ஏற்படும் பருக்கள் என்பது மிகவும் சாதாரணமானது தான். இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதனை மருந்துவரிடம் சொல்ல தயக்கம் காட்டுகிறார்கள். இந்த பருக்கள் வர காரணங்கள் பல. இவை பாக்டீர்யாக்களினால் உண்டாகும் பாதிப்புகள், மன அழுத்தம், மாத்திரைகள், ஹார்மோன் பிரச்சனைகளின் காரணமாக ஏற்படுகின்றன. பல பெண்கள் அந்தரங்க பகுதியில் வரும் இந்த பருக்களுக்கு இயற்கை முறையிலான வைத்தியத்தையே நாடுகின்றனர். ஏனென்றால் இதில் தான் எந்த விதமான பக்கவிளைவுகளும் இல்லை. இந்த பகுதியில் பெண்ணுறுப்பில் உண்டாகும் பருக்களுக்கான சிகிச்சை முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. உலர்வாக இருக்க வேண்டும் எல்லா நேரங்களிலும் உங்களது அந்தரங்க பகுதியை உலர்வாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மெல்லிய துண்டினாலோ அல்லது காட்டன் துணியினாலோ மிருதுவாக துடைத்து உலர்ந்த நிலையிலேயே வைத்துக் கொள்வது அவசியம். ஈரப்பதமாக இருத்தல் என்பது கண்டிப்பாக கூடாது.

2. சோப்புகள் ஆன்டி பாக்டீரியல் சோப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாசனையான சோப்புகள், கடின தன்மை கொண்ட சோப்புகள் போன்றவற்றை பயன்படுத்துவது கூடாது. இது உங்களது அந்தரங்க பகுதியில் உள்ள பி.எச் அளவை பாதிக்கும்.

3. வெதுவெதுப்பான நீர் அந்தரங்கபகுதியில் உள்ள பருக்களால் அரிப்புகள் உண்டாகும். இதனை விரல் நகங்களால் கீற தோன்றும் எனவே அடிக்கடி இவற்றை வெதுவெதுப்பான நீரை ஒரு மெல்லிசான டவளில் நனைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனால் அரிப்புகள் குறையும்.

4. ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகர் பருக்களால் உண்டாகும் பாக்டிரியாக்களின் பாதிப்புகளை குறைக்க வல்லது. எனவே இரண்டு கப் அளவு ஆப்பிள் சீடர் வினிகரில் ஒரு கப் அளவு தண்ணீர் கலந்து அந்த நீரினால் உங்களது பெண்ணுறுப்பை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் சுத்தமான டவளை கொண்டு அந்த இடத்தை உலர்த்திவிடுங்கள். இதனை ஒருநாளைக்கு மூன்று முறைகள் செய்வதன் மூலம் பாக்டீரியாக்களினால் உண்டாகும் பாதிப்புகளை குறைக்கும்.

5. உள்ளாடைகள் காட்டனால் ஆனால் மிருதுவான உள்ளாடைகளை மட்டுமே அணிய வேண்டும். காட்டன் உள்ளாடைகள் பருக்கள் மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை கொண்டது. அதோடு மட்டுமில்லாமல் இது உங்களது அந்தரங்க பகுதியை உரிய வெப்பநிலையில் வைத்திருக்கும் தன்மை கொண்டது. காற்றோட்டத்தையும் கொடுக்கும்.

6. இது வேண்டாம்! பெண்ணுறுப்பில் இந்த சமயத்தில் வாக்ஸிங், சேவிங் போன்ற செயல்களை செய்ய வேண்டாம் இது பருக்களை உடைய வைத்து பிற இடங்களுக்கு பரப்பும் தன்மை கொண்டதாகும்.

7. டீ ட்ரீ ஆயில் டீ ட்ரீ ஆயிலை பாதாம் ஆயிலை பாதாம் ஆயிலுடன் சேர்த்து அல்லது தேங்காய் எண்ணெய் உடன் கலந்து இந்த பருக்களின் மீது தடவலாம்.