Home சூடான செய்திகள் அதிக செலவு இல்லாமல் மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி?

அதிக செலவு இல்லாமல் மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி?

34

x5-300x165மனைவியை ஸ்பெஷலாக உணரவைக்க அதிக அளவு பணமும் நேரமும் தேவை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதெல்லாம் இல்லாமல் உங்கள் மனைவியை ஸ்பெஷலாக உணரவைக்க என் கைவசம் உள்ள ஐடியாவை தருகிறேன். நீங்கள் இதை எல்லாம் முயற்சி செய்து பார்த்து ரிசல்ட்டை எனக்கு அனுப்பிவைக்கவும் .( அதன் பின் தான் நான் என் வீட்டில் முயற்சி செய்யவேண்டும்)

நாம் செய்யும் சில சின்ன சின்ன செயல்கள் மனைவியின் கவனத்தையும் அன்பையும் பெறுகச் செய்வதோடு அவர்களை நாம் ஸ்பெஷலாக நடத்துவதையும் நினைப்பதையும் உணர்த்த செய்யும். ( இதனால் நமக்கு விளையும் பயன்? நாம் அதிக நேரம் லேப் டாப்பில் உட்கார்ந்தால் வசை கிடைப்பதற்கு பதிலாக நல்ல உபசரிப்பு கிடைக்கும், நண்பர்களுடன் சேர்ந்து ட்ரிங்க்ஸ் அடிக்கும் போது சுட சுட நல்ல சைடிஸ் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் மக்கா.. சொல்லுரத சொல்லிட்டேன்)

ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு சிறிய புன்னகையுடன் மென்மையாக கட்டிப்பிடித்து ஒரு முத்தம் தாருங்கள்.அது அவர்களுக்கு அந்த நாளை சிறப்பாக தொடங்குவதற்க்கு ஒரு சிறிய டோக்கன் கொடுத்தது போல இருக்கும்.அது தன் கணவர் தன்னை உணர்வுபூர்வமாக நேசிப்பதை உணர்த்தும்.( மக்கா நீங்க சொல்ல வருவது எனக்கு புரிகிறது அந்த மூஞ்சிய காலையில் மேக்கப் இல்லாமல் பார்த்து பயம் இல்லாமல் எப்படி புன்னகை செய்வது என்று நீங்கள் கேட்கவருவதும் எனக்கு நல்லா தெரியும் அதற்கும் என்னிடம் ஐடியா உள்ளது. காலையில் கண்ணை முடிக்கொண்டே கட்டி அணைத்து முத்தம் கொடுத்து விடுங்கள். நமக்கும் பயம் வராது &அவர்களும் நினைப்பார்கள் நாம் மிகவும் காதல் உணர்வுடன் அவர்களை நினைத்து முத்தம் கொடுப்பதாக) ((எப்படி நம்ம ஐடியா?? என்ன அவார்டு தர நினைக்கிறீகளா. இந்த ஆன் லைன் அவார்டு எல்லாம் எனக்கு வேணாம். நான் ஒன்னும் ஏமாளி அல்ல சும்மா ஒரு பிக்சர் அனுப்பி அதில் உங்கள் பெயரையும் போட்டு & உங்கள் ப்ளாக்கிற்கு ஒரு லிங்கும் அதில் வைத்து என் ப்ளாக்கில் இலவசமாக அதை போடுவதெல்லாம் வேண்டாம். ) வேணுமென்றால் ஒரு தங்க பிஸ்கட் வாங்கி அதில் உங்கள் பெயரை போட்டு அனுப்பி வைத்தால் வாங்கி கொள்கிறன்))