Home பாலியல் பெண்களின் பாலியல் உறுப்பில் பாதிப்புக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்

பெண்களின் பாலியல் உறுப்பில் பாதிப்புக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்

126

பாலியல் தகவல்:குழந்தை முதல் வயதான பெண்கள் வரை எல்லோருக்கும் வரகூடிய பிரச்சனை வல்வோவஜினிட்டிஸ். அதாவது அந்தரங்க உறுப்பு பகுதியில் ஏற்படுகின்ற ஒருவித தொற்று.அரிப்பு,எரிச்சல்,சிவந்து போதல் மற்றும் தோல் பிய்ந்து காணப்படுதல் இதன் அறிகுறிகள். இதுபோன்ற அறிகுறிகளை அலட்சியமாக எடுத்துக்கொள்ள்கூடாது.

வல்வோவஜினிட்டிஸ் பாதிப்புக்கான காரணங்கள்.தீர்வுகள் என்னென்ன பார்ப்போம்.

காரணங்கள்….

இது சிறு வயது பெண்களும் ,பருவ வயதுப் பெண்களும் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பூஞ்சை, வைரஸ், பாக்டீரியா, பாராசைட் என்று எந்த வகையானத் தொற்றின் காரணமாகவும் இந்தப் பிரச்னை ஏற்படலாம்.

கெமிக்கல் கலந்த வாசனைத் திரவங்கள் [பெர்ஃப்யூம்] அந்தரங்க உறுப்புகளுக்கான வாசனை ஸ்பிரே, சோப், வெஜைனல் ஆகியவற்றை பயன்படுத்துபவர்களுக்கும், குளிப்பதற்கு பாத்டப் உபயோகிக்கிறவர்களுக்கும் இது சாதாரணமாக வரக்கூடும்.

உடல் உறவுக்கு முன்பும், பின்பும் கருத்தரிப்பதை தவிர்க்க விந்தணுக் கொல்லி பயன்படுத்துகின்ற பெண்களுக்கும் வரும். பெண்களுக்கு மலத்துவாரமும் சிறுநீர்த்துவாரமும் அருகருகே இருப்பதால், சரியாக சுத்தம் செய்யப்படாத பட்சத்தில், கிருமித் தொற்று சுலபமாகப் பற்றிக்கொள்ளும்.

மாதவிடாய் காலத்தில், பெண்களின் உடலில் இயற்கையாக நிகழும் ஹார்மோன் மாற்றங்களும் இதற்கொரு காரணம். மெனோபாஸ் நிறைவு பெற்றதும், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் சுரப்பிவும் குறையும். இந்த ஹார்மோன்தான் அந்தரங்க உறுப்புக்கு வழுவழுப்புத் தன்மையைக் கொடுக்கக் கூடியது. அது குறைகிற போது உறுப்பில் வறட்சி ஏற்பட்டு அரிப்பும் எரிச்சலும் காணப்படும். அதிகப்படியான பெண்களுக்கு மாதத்தின் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் அந்தரங்க உறுப்பில் அரிப்பும் எரிச்சலும் இருக்கூடும். இதற்குக் காரணம்

உடலில் ஏற்படக்கூடிய பி.ஹெச். அளவு மாற்றங்கள்.

கருத்தரிக்கும் காலத்தில் விந்தணுக்களை ஏற்றுக் கொள்ள ஏதுவாக பெண்ணின் உடலில் காரத்தன்மை அதிகமாக காணப்படும். கரு தோன்றிய பிறகு அந்த அமிலத்தன்மை கொண்டதாக மாறிவிடும். அப்போதுதான் கருத்தரிப்பதோ, ஏற்கனவே உருவான கரு பாதிப்படையாமல் இருக்கும். இந்த காலகட்டத்தில் பெண்ணின் உடலில் கிருமித் தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகம்.

நமது உடலில் வாய், மூக்கு காது என அனைத்து உறுப்புகளிலும் பாக்டீரியாக்கள் இருக்கும். இவற்றில் பெரும்பாலதும் இயற்கையாகவே நமது உடலைப் பாதுகாப்பவை ஆகும். ஏதோ ஒரு உடல் உபாதைக்காக ஆன்ட்டிபயாடிக் எடுக்கும் போது,அது நல்ல பாக்டீரியாக்களை தாக்கி, அதன் காரணமாக தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம்.
உடல் உறவுக்குப் பிறகு பரவும் கிருமித் தொற்று மிகவும் சதாரனம். மிகவும் இறுக்கமான, வியர்வையை உறிஞ்சாத உள்ளாடை அணிகின்ற பெண்களுக்கும் இந்தப் பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம்.

பருவம் அடையும் காலத்துக்கு முன்பு சில பெண்களுக்கு இப்பிரச்னை வரும். காரணம், சுய சுகாதாரமின்மை.

கழுவப்படாத டாய்லெட் உபயோகிக்கிற பலருக்கும் இந்தப் பிரச்னை மிக அதிகமாக வரும. தண்ணீரைத் தவித்து, டிஷ்யூ பயன்படுத்த வேண்டியிருப்பதால், முழுமையான சுத்தம் செய்ய வாய்ப்புகள் இல்லாததால் அதன் விளைவாக கிருமித் தொற்று சுலபத்தில் பற்றிக் கொள்ளும்.

பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்படும் சிறுமிகளுக்கும் இந்தப் பிரச்னைபரவலாக தென்படும். 35 வயதுக்கு உட்பட்டவர்கள், நடுத்தர வயதுகார்களுக்கு இந்தப் பிரச்னை வந்தால், அது சர்க்கரை நோய்யின் அறிகுறியாகவோ, தைராய்டின் அறிகுறியாகவோ கூட இருக்கலாம்.

இதன் அறிகுறிகள்;
வெள்ளை படுதல்,அரிப்பு, நமச்சல்,எரிச்சல் ஆகியவை உண்டாகும். உறுப்பில் சிறுநீரோ, தண்ணீரோ பட்டால் எரிச்சல் உண்டாகும். கிருமியின் தாக்குதல், இதன் தீவிரம் ஆகியவற்றைப் பொறுத்து வெள்ளைப் போக்கின் தன்மையும் வேறுட்டு காணப்படும். ஒரு சிலருக்கு நீர்த்த தண்ணீர் போல் இருக்கும். சிலருக்கு திரிந்த தயிர் போன்றும் மஞ்சள் நிறத்துடன் வெள்ளைப் போக்கும் இருக்கும்.

கிருமித் தொற்றின் காரணமாக ஒருவிதமான அசுத்தமான வாடையும் வரும். சிலருக்கு காய்ச்சல், குளிர் காய்ச்சல் போன்றவையும் சேர்ந்து இருக்கும்.

பரிசோதனை முறைகள்..
முதலில் மருத்துவரிடம் கலந்து பேசி தேவைப்பட்டால் வெள்ளைப் போக்கை பரிசோதனைக்கு அனுப்பி, எந்த வகையான கிருமி தாக்கியிருக்கிறது எனக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு தகுந்த மருந்துகள் அறிவுறுத்தப்படும். தோல் சம்பந்தமான பிரச்னை என்றால் அதற்கான தீர்வுகள், வெளிப்பூச்சுக்கான மருந்துகள் ஆகியவை உங்களுக்கு தீர்வாக அமையும்.

செய்ய கூடாதவை…

பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை சேவிங் செய்யக்கூடாது.

பல பெண்கள் ரோமம் இல்லாத சருமத்தின் மீதுள்ள மோகத்தால், தனது சருமத்திற்கு பாதுகாப்பை அளிக்கும் முடியை நீக்கி வருகின்றனர்.

இதில் கை, கால், அக்குள்களில் மட்டுமின்றி, பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியையும் அகற்றுகின்றனர்.

அந்தரங்க முடியை ஷேவிங் செய்யும் போது அதில் ஷேவ் செய்வது, ட்ரிம் செய்வது, வேக்ஸ் செய்வது போன்றவை பொதுவான வழிகள். இதில் ஷேவிங் முறையைத் தான் நிறைய பேர் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இந்த வழியால் நமக்கு வலி இருக்காது. அந்தரங்க பகுதியில் ஷேவிங் செய்த பின் அரிப்பு ஏற்படும். அந்த அறிப்பு மெல்லமெல்ல அதிகரித்து அது ஒரு நோய்யாகும் வாய்ப்புகள் அதிகம்.

நமது உடலில் மிகவும் மென்மையான பகுதியான பிறப்புறுப்பில் வளரும் முடியை எப்போதுமே ஷேவிங் செய்யக்கூடாது ஏனெனில் அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

1] எப்போதும் பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடி, அப்பகுதிக்கு நல்ல குஷன் போன்று இருக்கும் மற்றும் தீவிரமான உடலுறவின் போது உராய்வு ஏற்படுவதைத் தடுக்கும்.

2] அந்தரங்கப் பகுதியை ஷேவிங் செய்யும் போது, அதன் வடிவம் மற்றும் நிலையினால் பல காயங்களை சந்திக்கக்கூடும்.

மேலும் ஷேவிங் செய்த பின் கடுமையான அரிப்புக்களை அனுபவிக்கக்கூடும்.

உடலுறவின் பின்னரும் மாதவிடாய் காலங்களிலுத் தமது உறுப்பைச் சுத்தமாக வைத்திருப்பதாகக் கூறி நீரை உள்ளுக்குள் அடித்துச் சுத்தப்படுத்துவார்கள். அது கூடாது.

பெண் பாலுறுப்பின் மென் திசுக்களில் இயல்பாக இருக்கும் நல்ல கிருமிகள் அழிந்து, அங்கு நோயைப் பரப்பும் தீய கிருமிகள் பரவிவிடும்.

உள்ளே வைக்கும் டம்புன்ஸ் (Tampons) கூடவே கூடாது.

தீர்வுகள்…

பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடி உங்களுக்கு தொந்தரவாக இருப்பின், ட்ரிம் செய்து கொள்ளுங்கள்
லூசுசான தளர்வான, காட்டன் உள்ளாடைகள் தேர்வு செய்து அணிய வேண்டும்.

டியோடரன்ட், ஸ்பிரே போன்றவற்றை பயண்படுத்தகூடாது.

நாம் கழிப்பறை செல்லும் போது முறையாக சுத்தப்படுத்த சிறு வயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்குப் பழக்க படுத்த வேண்டும்.

மெனோபாஸ் வயதுப் பெண்கள் மருத்துவ ஆலோசனையின் பேரில் அவசியம் என்றால் ஈஸ்ட்ரோஜென் க்ரீம் எடுத்துக் கொள்ளலாம்.

ஓகே வாசரக்ர்ளே.. வல்வோவஜினிட்டிஸ் பற்றி தெரிந்து கொண்டீர்கள் அல்லவா. கவனத்துடன் இருங்கள். வாழ்த்துகள்.

டாக்டர். எம். ஜெனிஃபர்