Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பகாலத்தில் பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்

கர்ப்பகாலத்தில் பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்

140

தாய் நலம்:பெண்களின் வாழ்வில் பல்வேறு காலகட்டங்கள் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.ஆனால் பெண்கள் மிகவும் அவதானமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டிய காலகட்டமாக கர்ப்பம் தரித்திருக்கும் காலப்பகுதியை குறிப்பிடலாம்..

பொதுவாக பெண்கள் சரியான நேரத்துக்கு சரியான உணவுகளை உள்ளெடுக்காமல் இருப்பதுக்கு பல்வேறு காரணங்களை கூறலாம்..ஆனால் கர்ப்ப காலத்தின் போது இவ்வாறான காரணங்களை கூறுவது தவிர்க்கப்படவேண்டியது.உணவு கட்டுப்பாடு என்பது கர்ப்ப காலத்தின் போது தீவிரமாக கடைபிடிக்க வேண்டிய விடயம் ஆகும்..முக்கியமாக கர்ப்ப காலத்தின் போது சில உணவுகளை தவிர்க்க வேண்டும்..
அவ்வாறான உணவுகளை பற்றித்தான் நாம் இன்று பார்க்கப்போகிறோம்.

1.பப்பாளி பழம்
இது அனைவர்க்கும் பரீட்சயமான ஒரு பழம்தான் ..இந்த பப்பாளி பழத்தினை கர்ப்ப காலத்தின் போது சாப்பிட வேண்டாம் என பெரியவர்கள் கூறுவதை கேட்டு இருப்பீர்கள்.அதற்கு காரணம் பப்பாளி பழத்தினை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் பிரசவ தேதிக்கு முன்னரே குழந்தை பிரசவம் ஆகிவிடலாம் .இது குழந்தையின் ஆரோக்கியத்துக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடலாம்.

2.அன்னாசி பழம்
அன்னாசி பழத்தில் அதிகளவு ப்ரோமிலைட் இருப்பதால் இவை கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது அல்ல.
ஆரம்ப கட்ட காலங்களில் அன்னாசி பழங்களை தவிர்ப்பது மிக நல்லது.இல்லாவிட்டால் கரு கலைந்து விடும் சாத்தியக்கூறுகள் கூட உள்ளன.

3.திராட்சை
கர்ப்பமான பெண்களுக்கு இரத்த சோகையை தடுக்க அதிகமான பழங்களை சாப்பிட சொல்வது வழக்கம்.
அப்பிடி சொல்வதால் நீங்கள் திராட்சையை சாப்பிட தேர்ந்து எடுத்தால் அதனை இன்றோடு மறந்துவிடுங்கள்
திராட்சை பழங்களில் ஏராளமான இரசாயனங்கள் தெளிக்கப்பட்டு இருக்கலாம்.அத்துடன் திராட்சையில் இருக்கும் அதிக அமில தன்மை பாதிப்பை ஏற்படுத்தும்.

4.கத்தரிக்காய்
கத்தரிக்காய் அதிகமாக நாம் உணவுகளில் சேர்க்கும் காய்கறிகளுள் ஒன்று.ஆனால் தினமும் அரை கத்தரிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் கர்ப்பத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்..அத்துடன் கத்தரிக்காய் மாதவிடாயை தூண்டும் தன்மை கொண்டது.எனவே கர்ப்ப காலங்களில் தவிர்ப்பது மிக சிறந்தது.

5.பெருஞ்சிரகம்
கர்ப்பிணி பெண்கள் பெருஞ்சிரகம் மற்றும் மல்லி போன்றவற்றை தவிர்ப்பது நல்லது..இவை அதிகாமானால் உடலுக்கு நல்லது அல்ல.இவை உடலின் ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரிக்க கூடியன.இதனால் கர்ப்பப்பை வலுவிழக்க வாய்ப்புகள் உள்ளன.

6.எள் விதைகள்
இரத்தசோகையினை தடுக்க எள் சிறந்த மருந்தாக காணப்படுகிறது.ஆனால் கர்ப்பிணி பெண்கள் இதனை தவிர்க்க வேண்டும்..இவை கருக்கலைப்பை கூட ஏற்படுத்தலாம்.

7.வெந்தயம்
பொதுவாக நாம் பயன்படுத்தும் வெந்தயத்தில் இருக்கும் தாதுக்கள் கர்ப்பப்பையை வலுவிழக்க செய்யலாம்.
இதனால் ஆரம்ப கர்ப்ப காலங்களில் வெந்தயத்தை தவிர்ப்பது சிறந்தது.சில நேரங்களில் இது கர்ப்பிணிகளுக்கு அழற்சியை கூட ஏற்படுத்தலாம்.

8.முட்டை
அவிக்காத பச்சை முட்டை மற்றும் half ஆயில் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்..இவற்றில் இருக்கும் salmonella என்ற பாக்டீரியா சாப்பிடும் உணவை விஷமாக்கி விடும்.இதனால் தலைவலி, வாந்தி ,வயிற்றுவலி போன்றன ஏற்படலாம்.உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துவிடும்.

முட்டை

9.முளை கட்டிய பயிர்வகைகள்
முளை கட்டிய பயிர்வகைகள் மற்றும் தானியங்களை பச்சையாக உண்பதை தவிருங்கள்.இதில் உள்ள பாக்டீரியாகள் பல தொல்லைகளை ஏற்படுத்தலாம்.

10.அதிக மசாலா மற்றும் காரம்
அதிக மசாலா மற்றும் காரம் நிறைந்த உணவுகள் உங்களுக்கு பல பிரச்சினைகளை கொடுக்கலாம்.ஜீரண கோளாறுகளும் வரலாம்.எனவே கர்ப்பிணி பெண்கள் இதனை தவிர்ப்பது மிக சிறந்தது.

முக்கிய குறிப்பு:-சில வாழ்க்கைமுறை(lifetyle) மற்றும் ஆரோக்கியம் (health)சார்ந்த புதிய உடலியல் நடைமுறைகளை பின்பற்றும் போது உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுங்கள்