Home உறவு-காதல் பெண்கள் கலியாணம் செய்ய ஆண்களிடம் எதிர்பார்க்கும் கண்டிஷன்கள்

பெண்கள் கலியாணம் செய்ய ஆண்களிடம் எதிர்பார்க்கும் கண்டிஷன்கள்

280

ஆண் பெண் உறவு:பெண்கள் எந்த மாதிரி ஆண்களை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார்கள் தெரியுமா? திருமணம் என்பது இரு மனங்களும் ஒத்துப் போகின்ற விஷயம். இருவரும் இணைந்து ஒரு பரஸ்பர ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். அப்படி செய்யப்படும் ஒவ்வொரு திருமணத்தில் மிகவும் அவசியமான விஷயங்கள் நம்பிக்கை, அன்பு, மரியாதை மற்றும் நேர்மை போன்றவை துணைகளிடையே இருக்க வேண்டும்.

ஆனால் இதெல்லாம் கொடுத்த பிறகும் ஒரு பெண்ணை ஆணால் சந்தோஷமாக வைத்திருக்க முடியவில்லை. எனவே திருமணத்திற்கு பின்பு ஒரு பெண்ணை மகிழ்ச்சியாக வைத்திருப்பது ஒரு ஆணுக்கு புரியாத புதிராக இருக்கிறது. அதற்குத்தான் இந்த கட்டுரையில் உங்கள் அன்பான துணை உங்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை நாங்கள் கூறப் போகிறோம். சரி வாங்க பார்க்கலாம்

எதிர்ப்பார்ப்பு ஒவ்வொரு திருமணத் தம்பதிகளும் எதாவது ஒரு எதிர்பார்ப்பை கொண்டு தான் வாழ்வில் இணைகிறார்கள். ஆனால் ஒரு ஆண் தன்னுடன் இணையும் பெண்ணின் எதிர்ப்பார்ப்பையும் காரணிகளையும் கண்டிப்பாக முழுவதுமாக புரிந்து வைத்திருக்க வேண்டும். இது இருவருக்கிடையேயான காதலை மட்டும் வலுப்படுத்துவதோடு இருவருக்கிடையேயான புரிதலை அளிக்கிறது. இதன் மூலம் உங்கள் மனைவி உங்களிடம் எதுவும் சொல்லாவிட்டாலும் அவரது மெளன மொழியைக் கூட அறிந்து அவர்களை மகிழ்விக்க முடியும்.

தனிப்பட்ட ஆசைகள் ஒவ்வொரு பெண்ணும் திருமணத்திற்கு முன்பும் நம்முடைய தனிப்பட்ட ஆசைகளை ஒரு ஆண் நிறைவேற்றுவார் என்று நினைத்து தான் திருமணத்தில் அடியெடுத்து வைக்கிறார்கள். இந்த ஆசைகள் நிறைவேறும் போது ஒரு பெண் திருமணத்தில் ிகுந்த மகிழ்ச்சியையும் அடைகிறாள். இந்த தேவைகள் உண்மையிலேயே ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமானதும் கூட. எனவே உங்கள் மனைவியை நீங்கள் சந்தோஷமாக வைத்திருக்க நினைத்தால் அவரது தேவைகளையும் ஆசைகளையும் புரிந்து கொள்ளுங்கள். இதில் நீங்கள் செய்யும் சிறு தவறு தான் உங்கள் திருமண வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி விடுகிறது. எனவே உங்கள் தவறுகளை களைந்து வருமுன் பிரச்சினைகளை தடுப்பதே இல்லற வாழ்க்கை சிறக்க சிறந்த வழி. வில்லார்ட் ஹார்லியின் புத்தகம், பெண்கள் தங்கள் ஆண்களிடம் கேட்கும் 5 விஷயங்களை பற்றி விவரிக்கிறது.

அன்பு பெண்களுக்கு அன்பு ஒன்றே போதும் எனலாம். ஏனெனில் பெண்கள் ரெம்பவும் உணர்ச்சி பூர்வமான நபர்கள். அவர்க் எதையும் உணர்வுப் பூர்வமாக மட்டுமே சிந்திப்பார்கள். உங்கள் மனைவிக்கு திருமண வாழ்க்கையில் நீங்கள் அவர் கேட்பதை வாங்கி கொடுத்தாலும் அதற்கு சமமான அளவு அன்பு செலுத்தவும் மறந்து விடாதீர்கள். அன்பு மட்டுமே உங்கள் இருவரை இணைக்கும் காதல் மந்திரம். ஒவ்வொரு பெண்ணும் தன் துணையிடமிருந்து இதைத் தான் எதிர்ப்பார்க்கிறார்கள். நீங்கள் இதி் பின்தங்கி இருந்தால் முதலில் அதை சரி செய்ய வேண்டும். சரியான அன்பை அவர்களுக்கு கொடுக்கா விட்டால் அது அவர்களின் மனதில் உங்களைப் பற்றி ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விடும். இது தான் திருமண வாழ்வில் ஏற்படும் முதல் பிரச்சனை. எனவே எல்லா வழியிலும் உங்கள் மனைவி மீது அன்பு செலுத்த தயாராகுங்கள்.

உரையாடல் உங்கள் மனைவி எப்பொழுதும் உங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று விரும்புவார். நீங்கள் இருவரும் இணைஊ தினசரி நடவடிக்கைகள், கடந்த, எதிர்கால மற்றும் நிகழ்கால எண்ணங்களைப் பற்றி பேசுவதற்கு ஒரு உரையாடல் அவர்களுக்கு தேவைப்படுகிறது. இந்த உரையாடல் உங்கள் இருவருக்கிடையே நடப்பதாக இருப்பதோடு உங்களுக்கிடையே ஒரு நல்ல புரிதலை கொடுக்கும். நீங்கள் அவருடன் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றும், வாழ்க்கை, திருமணம் மற்றும் அவள் பற்றி உங்கள் மனதைக் கடக்கும் ஒவ்வொன்றையும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்.

நேர்மை மற்றும் வெளிப்படை ஒவ்வொரு பெண்ணும் இநத இரண்டு விஷயங்களை தான் ஒரு ஆணிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறாள். திருமண உறவில் இருவரும் நேர்மையாக நடந்து கொள்வது இருவருக்கிடையேயான உறவை வலுப்படுத்தும். உங்கள் துணை உங்களிடம் உண்மையாக இருக்க விரும்பினால் நீங்களும் அதற்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் இருவருக்கிடையேயான நம்பிக்கை வளரும். பெண்கள் கேட்கும் மற்றொரு விஷயம் வெளிப்படையாக செயல்படுவது. அவளுடைய உலகம் நீங்கள் தான் என்று நினைப்பதால் அவர்களிடம் நீங்கள் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும். உங்களைப் பற்றி முழுவதுமாக மனம் திறக்க வேண்டும் என்று அவள் விரும்புகிறாள். இந்த திறந்த மனதுடன் அவளை அணுகும் போது வரப்போகின்ற காலத்திலும் உங்களின் மீதான அந்த பெண்ணின் காதல் பெருகிக் கொண்டே இருக்கும்

பொருளாதார நிலை திருமணமான பெண்கள் தங்கள் கணவரால் பொருளாதார பாதிப்பை சந்திக்கின்றனர். எதற்கெடுத்தாலும் கணவரையே சார்ந்து இருப்பது அவர்களது மனநிலையை பாதிக்கிறது. எனவே அவள் எதுவும் வாங்க வேண்டும் என்றால் அங்கே கணவனின் உறுதியளிப்பு தேவைப்படுகிறது. எனவே உங்கள் மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க நீங்கள் விரும்பினால் அவர்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உறுதியாக இருக்க வேண்டும். அவர்களுக்கு தேவைப்படும் அளவிற்கு பொருளாதார சுதந்திரம் கொடுக்க வேண்டும். இந்த பொருளாதார உறுதியளிப்பு தான் உங்கள் திருமண வாழ்க்கையை சந்தோஷமாக வைத்திருக்கும்.

குடும்பம் திருமணம் ஆனவுடன் ஒவ்வொரு பெண்ணும் பிறந்ததிலிருந்து இருந்த உறவை பிரிந்து தான் வருகிறார்கள். எனவே அவர்களுக்கு தங்கள் குடும்பம் குறித்த கவலையை எப்பொழுதும் இருக்கும். எனவே இதில் உங்கள் கடமை மிகவும் முக்கியம். இது தான் ஒவ்வொரு திருமணமான பெண்களின் முதல் எதிர்பார்ப்பு என்றே கூறலாம். இதை நீங்கள் சரிவர கவனிக்காவிட்டால் கண்டிப்பாக உங்கள் உறவுக்கு சிக்கல் தான் உண்டாகும். எனவே அவர்கள் பிரிந்து வந்த உறவுகளை அடிக்கடி அவர்களுடன் இணைத்து அவர்களை மகிழ்வியுங்கள். அவர்களின் பெற்றோரை காண விரும்பினால் அழைத்துச் செல்லுங்கள். அவர்களின் நண்பர்களை காண அணுமதியுங்கள். முடிந்தால் நீங்களும் அவர்களுடன் ஒரு நட்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களை சந்தோஷப்படுத்துங்கள். உங்கள் வீட்டு உறவுகளைப் போலவே அவர்களின் உறவுகளையும் கவனியுங்கள். உங்கள் துணையின் சந்தோஷம் தான் உங்களின் சந்தோஷம் என்று வாழுங்கள். கண்டிப்பாக உங்கள் திருமண வாழ்க்கை இனிக்கும்.

இந்த 5 பெண்களின் தேவைகளையும் ஒவ்வொரு ஆணும் அறிந்து கொண்டு திருமண வாழ்வில் அடியெடுத்து வையுங்கள். அப்போது உங்கள் இருவருக்கிடையேயான காதலும் அன்பும் பொங்கிப் பெருகும்.