Home பாலியல் மனைவிக்கு மாதவிடாய் ஏற்படும்போது கணவன் எப்படி செயல்படவேண்டும்

மனைவிக்கு மாதவிடாய் ஏற்படும்போது கணவன் எப்படி செயல்படவேண்டும்

249

பாலியல் செயல்பாடு:பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவது இயற்கையானது தான். பண்டைய கால நடைமுறைப்படி, மாதவிடாய் ஏற்படும் பெண்கள், ஓய்வெடுக்க தனி அறையில் தங்க வைக்கப்பட்டனர்.

அக்கறை
மாதவிடாய் ஏற்படும் போது, பெண்களுக்கு உடல் சோர்வு இருக்கும். அதனால் அதிகமாக அவர்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். ஆதனால் திருமணமான பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது, அவர்களது கணவர்கள் அக்கறைக்காட்டுவது அவசியமானது

அதிக உடல் உழைப்பு கூடாது
மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்படும் வலியை அறிந்து ஆண்கள் நடந்து கொள்ள வேண்டும். மாதவிடாயின் போது, பெண்களை அதிக பளு மிகுந்த வேலைகளையும், உடல் உழைப்பும் தேவைப்படும் வேலைகளையும் ஆண்கள் செய்ய அனுமதிக்கக்கூடாது.

கணவன் சமைக்க வேண்டும்
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ருசியான, கார சாரமான உணவுகளை சாப்பிட அதிகம் விரும்புவார்கள். அதனால் கணவர்கள், மனைவிகளுக்கு பிடித்த உணவுகளை சமைத்து கொடுக்க வேண்டும்.

வலிக்கு மருந்தாக கணவன் இருக்கவேண்டும்
மாதவிடாயின் போது, பெண்களுக்கு உடலில் சில இடங்களில் வலி ஏற்படும் போது, முதுகுக்கு வெதுவெதுப்பான நீரில் துண்டை முக்கி ஒத்தடம் கொடுப்பது நல்லது. முடிந்தால் மசாஜ் செய்துவிடுங்கள்.

ஈகோ கூடாது
அதேபோல கால், கை வலி ஏற்படுவதும் இயற்கை தான். அப்போது ஈகோ பார்க்காமல் மனைவியை அக்கறையுடன் ஆண்கள் கவனித்துக்கொள்ள வேண்டும்.

செக்ஸ் எதிர்பார்ப்பு கூடாது
5 நாட்கள் வரை வலியால் அவதிப்படும் பெண்களுக்கு, செக்ஸ் குறித்த உணர்வு இருப்பதில்லை. அதனால், ஆண்கள் அப்போது செக்ஸ் குறித்த எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்வது நல்லது.

இல்லறம் சிறக்க வாழ்த்துக்கள்
மாதவிடாய் நாட்களில் உங்களது பார்ட்னரை அன்பாக பார்த்துக் கொண்டு இல்லற வாழ்க்கையை, இன்பமாக வைத்துக்கொள்ளுங்கள்.