Home அந்தரங்கம் மனைவியை கட்டிலறையில் அழைக்கும்போது கவனிக்கவேண்டியது

மனைவியை கட்டிலறையில் அழைக்கும்போது கவனிக்கவேண்டியது

254

அந்தரங்க உறவு:கணவன், மனைவி உறவின் முக்கிய இடம் படுக்கையறை. உடலுறவில் ஈடுபட மட்டுமல்ல, மனம் விட்டு பேசவும், ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொள்ளவும், ஊக்கமளிக்கவும் கூட சிறந்த இடம் படுக்கையறை. படுக்கையறையை தம்பதிகளின் இல்லற பந்தத்தின் கரு என்றும் கூறலாம்.

உங்கள் இருவருக்குமான நெருக்கமான படுக்கையறையில் சில விஷயங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். சில விஷயங்களை தவிர்காமல் செய்ய வேண்டும்.

கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் உறங்க வேண்டியது மிகவும் அவசியம். இது, உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் நெருக்கத்தையும், இல்லற பந்தத்தின் இணைப்பையும் அதிகரிக்கும்.

எலக்ட்ரானிக் பொருட்களை உங்கள் படுக்கை அறைக்குள் எடுத்து செல்ல வேண்டாம். இது உங்கள் ஆழ்ந்த தூக்கத்தை மட்டுமின்றி இல்லறத்தையும் கெடுக்கும் தன்மை கொண்டதாகும். முக்கியமாக இது மூன்றாம் நிலை ஆழ்ந்த உறக்கத்தை சீர்கெடுக்கிறது. இதனால், உங்களுக்கு உடல் அசதி ஏற்படும்.

படுக்கை அறைக்கு சென்றதும் கொஞ்ச நேரம் இருவரும் படுக்கையில் அமர்ந்து அல்லது படுத்துக் கொண்டே கூட பேசுங்கள். இது கணவன் மனைவி மத்தியிலான நெருக்கத்தை அதிகரிக்க உதவும். தயவு செய்து இந்நேரத்தில் சண்டை சச்சரவு பற்றி பேசிவிட வேண்டாம்.

ஆண், பெண் இருவரும் படுக்கை அறையில் எதிர்பார்க்கும் விஷயம் கொஞ்சுதல். ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு கணவன், மனைவி படுக்கை அறையில் மட்டுமே கொஞ்சிக்கொள்ள முடியும். எனவே, ஆசை தீர உங்கள் மனைவியை / கணவனை அவ்வப்போது கொஞ்சுங்கள். மேலும், நீங்களும் கொஞ்சும்படியாக நடந்துக் கொள்ள வேண்டும்.

தினமும் இரவு உறங்கும் முன்னர் முத்தம் கொடுத்து குட் நைட் கூறி உறங்க செல்லுங்கள். கண்டிப்பாக அடுத்த நாள் காலை எந்த சண்டையும் வராது. நாளும் நிம்மதியாக செல்லும்.

தீண்டாமை ஒரு பாவ செயல். படுக்கையறையில் இது கொடுமை என்றே கூறலாம். ஆம், உங்கள் தாம்பத்திய வாழ்க்கை சிறக்க வேண்டும் எனில், தீண்டுதலும், கொஞ்சி விளையாடுதலும் இருக்க தான் வேண்டும். இதை நிறுத்தினாலும் கூட இல்லற மகிழ்ச்சியின் ஓர் பகுதியில் இழப்பு ஏற்படும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

Previous articleநீங்கள் சுயஇன்பத்திற்கு அடிமையாக இருந்தால் இதை பின்பற்றுங்கள்
Next articleதம்பதியினர் புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்!