Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்களுக்கு ஏன் பருத்த மார்புகள் வேண்டும்?

பெண்களுக்கு ஏன் பருத்த மார்புகள் வேண்டும்?

45

பிராவின் நோக்கம் ஆரோக்கியம் அல்ல, வர்த்தக / ஆணாதிக்க அழகியல் தான். [உடலில் கொழுப்புத் திரட்சிகள் கொண்டுள்ள பெண்தான் குழந்தையைப் பெற்று வளர்க்க சக்தியுள்ள வலிமையான பெண். இதனால் பருத்த மார் கொண்ட பெண் வம்சாவளி நீட்டிக்க வேண்டும் ஆணுக்குப் பிடித்தமானவளாய் உள்ளாள். பருத்த முலைகள் இவ்வாறு பரிணாமம் தரும் பச்சை விளக்குகள் என்பது மற்றொரு சாரார் கருத்து.

பருமனான முலைகள்? ஆரம்பத்தில் சமிக்ஞைகள் பற்றிச் சொன்னதை நினைவு படுத்துங்கள். சாலையில் பச்சை விளக்கு போல் இந்த நூற்றாண்டிலும் மனிதனின் ஆழ்மனம் துணையைக் கண்டதும் சில சமிக்ஞைகள் தருகிறது. துணைத்தேர்வைப் பொறுத்த வரையில் பெண்ணின் மார்பு, இடை, புட்டம் போன்ற சில அடிப்படைக் கூறுகள் பெரும்பான்மையான ஆண்களுக்குப் பச்சை விளக்குகள். இவை மறைக்கப்படும் போது உதடுகள், கண்கள், கூந்தல் ஆகியவை கவனத்துக்குள்ளாகின்றன.

பிராவின் நோக்கம் ஆரோக்கியம் அல்ல, வர்த்தக/ஆணாதிக்க அழகியல் தான். பிரா கணுக்ககளை மறைத்தாலும், அது கூர்மையான, மேலெழுந்த, பருமனில் கச்சிதமான ஒரு மார்பு வடிவத் தோற்றம் தருகிறது. சுருக்கமாய்ச் சொல்வதானால் பிரா மார்பை மறைப்பதகற்காக அல்ல, மேலும் அழகுபடுத்துவதற்கானது. பிரா ஒழுக்கவியலாளனின் தேர்வல்ல. மாறாக, பெண்ணுடலை குழந்தை உற்பத்தி ஆலையாகக் காணும் சராசரி ஆணின் தேர்வு.]

பெண்களுக்கு ஏன் பருத்த மார்புகள் என்ற கேள்வியை ஏன் கேட்க வேண்டும்?

1) பாலூட்டிகளில் மனித இனத்துக்குத் தான்விகிதப்படி மிகப்பெரிய மார்புகள். இது ஏன்?

2) மார்பு எனும் பாலூட்டும் உறுப்பை அதன் அடிப்படைச் செயல்பாட்டைத் தவிர, பருமனாய், துவளாமல் மேலெழுந்து கச்சிதமாய் இருக்கும்படி ஆண் எதிர்பார்ப்பது ஏன்? பொது இடங்களில் சதா தங்கள் மார்புகள் கண்காணிக்கப்படுவதை, பரிசீலனைக்கு உள்ளாவதை உணர்ந்து கூச்சமுறும் பெண்கள் கேட்க வேண்டிய கேள்வி இது. இதற்கான பதில் ஆண்களைப் புரிய பயன்படும்.

3) வரலாற்றில் பெண்ணுடல் மீதான கவனம் எப்போதுமில்லாத அவல நிலையை அடைந்துள்ளது. பிளாஸ்டிக் அறுவையாளர்களிடம் மாட்டி, நமது வெற்றிப் பெண்கள் இயல்பான உடலமைப்பை இழந்து தங்களுக்குத் தாங்களே அந்நியமாகும் பெரும் அவலம் உலகமெங்கும் நிகழ்கிறது.

லிப்போ சக்ஷன் (உடல் கொழுப்பை உறுஞ்சி எடுத்து உடலுறுப்பை வடிவாக்குவது), முகச்சுருக்கத்துக்கு பொட்டாக்ஸ் ஊசி, டக்கப் அறுவை சிகிச்சை (தொங்கும் மார்பை கட்டுக்கோப்பாக்க) எனப் பெண்ணுடலை சோதனைக்கூட கின்னி பிக்கைப் போல் அறுத்து, குழாயால் உறிஞ்சி பிளாஸ்டிக் அறுவை விற்பன்னர்கள் உலகம்பூரா கோடிக்கணக்கில் பணம் ஈட்டுகின்றனர். இது ஆணின் விருப்பத்திற்கேற்ப உடலை வடிவமைக்கும் ஆதிக்கவாதச் செயல்தான்.

ஒப்பிடுகையில் பெண்களைப் போன்று ஆண்கள் தங்கள் உடலை அறுத்து, இஞ்சு, இஞ்சாய் உறுப்புகளை வடிவமைத்து, பட்டினி கிடந்து, ஒல்லியாகும் மாத்திரை விழுங்கி சிறு நீரகத்தைப் பாழ்செய்து சுயவதை புரிவதில்லைதான்.

நமது புதுமைப்பெண் ஆணிடம் தன்னைப் புணர்ச்சிக்குத் தயாராய்க் காட்ட ஆணைவிட அதிகமாய் சிரத்தை எடுப்பதும், அத்தகைய ஒரு பிம்பத்தை அவள் மேல் ஊடகங்கள் வணிக ஆதாயத்துக்காகத் திணிப்பதும் இந்தப் பெண்விடுதலை நூற்றாண்டின் மாபெரும் நகைமுரணே.

சமூகத்தின் எத்தனையோ வார்ப்புகளில் விழுந்து, ஊடகங்கள் தொடர்ந்து உற்பத்தி செய்யும் கவர்ச்சிப் பாவை பிம்பங்களில் தானும் ஒரு பிம்பமாய்த் தொலைந்து நவீனப் பெண், சுயத்தன்மை, ஆளுமை, அறிவுத்திறனின் அடையாளங்களை இழக்கிறாள். மார்புகள் சமகாலப் பெண் பிம்பத்தின் ஒரு முக்கிய அடையாளம்.

மார்புகளின் வடிவம் பற்றிய தீவிர பிரக்ஞை பூனை கழுத்து மணி போல் நவீனப்பெண்ணுக்குள் விடாமல் ஒரு கண்காணிப்புக் குரலாக ஒலிக்கிறது. இந்தக் குரல் யாருடையது?

மூன்றாவது கேள்வியிலிருந்து நம் விசாரணையை ஆரம்பிக்கலாம்.

அக்குரல் ஆணுடையதுதான். ஆண்கள் பெண்களுக்குப் பூட்டிய ஆகப்பெரிய விலங்குகளில் மிகச் சூட்சுமமானதும் தந்திரமானதும் பிராதான். பிரா அணிவதன் பயன் என்ன? பிரா அணிவதால் தொய்வுற்ற மார்புகள் உறுதி பெற்று நிமிரும் என்றும், இவ்வாறு இதை அணியாதோரின் மார்புகள் துவண்டு தொங்கிப் போகும் என்றும் இரு வினோதமான பொய்கள் படித்த பட்டதாரிப் பெண்கள் மத்தியிலும்கூட நிலவுகிறது.

பத்தாம் வகுப்பில் என் நண்பனான ராஜா ஜட்டி அணியாமல் இருந்தால் குறி வளரும் என்றொரு கட்டுக்கதையை நம்பி சுதந்திரமாய்ச் சில காலம் திரிந்ததைப் போன்ற அபத்தம் இது.

அடுத்து இந்த நவீன நாரீமணிகள் கவனத்துக்கு: பல நாடுகளிலாய்ச் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவில் தெரிய வந்தது 70 இலிருந்து 100 % பெண்கள் சரியாய்ப் பொருந்தாத பிரா அணிந்து அவதியுறுகின்றனர் என்றே!

இவ்வாறு பொருந்தாத பிராவினால் தொள்வலி, கழுத்துவலி எனப் பல உபாதைகள் வேறு. பிரான்சில் 250 பெண்களைக் கொண்டு ஒரு ஆய்வு செய்யப்பட்டது.

இந்தப் பெண்களிடம் ஒரு வருடத்திற்கு பிரா அணிவதில்லை என்றும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதாகவும் ஒப்பந்தம். வருட முடிவில் நடத்தப்பட்ட ஆய்வில், பலரும் பிரா இல்லாமலே அதிக வசதியாய் உணர்வதாய், அவர்களின் மார்புகள் மேலும் உறுதியாய், மெலெழுந்தபடியாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நமக்கு இதுவரை சொல்லப்பட்ட விளக்கத்துக்கு மாறான இத்தகவல் ஒரு நிதர்சன உண்மையைச் சொல்கிறது.

பிராவின் நோக்கம் ஆரோக்கியம் அல்ல, வர்த்தக/ஆணாதிக்க அழகியல் தான். பிரா கணுக்ககளை மறைத்தாலும், அது கூர்மையான, மேலெழுந்த, பருமனில் கச்சிதமான ஒரு மார்பு வடிவத் தோற்றம் தருகிறது. சுருக்கமாய்ச் சொல்வதானால் பிரா மார்பை மறைப்பதகற்காக அல்ல, மேலும் அழகுபடுத்துவதற்கானது. பிரா ஒழுக்கவியலாளனின் தேர்வல்ல. மாறாக, பெண்ணுடலை குழந்தை உற்பத்தி ஆலையாகக் காணும் சராசரி ஆணின் தேர்வு.

அடுத்து முதல் கேள்விக்குச் செல்வோம். பருமனான முலைகள்? ஆரம்பத்தில் சமிக்ஞைகள் பற்றிச் சொன்னதை நினைவு படுத்துங்கள். சாலையில் பச்சை விளக்கு போல் இந்த நூற்றாண்டிலும் மனிதனின் ஆழ்மனம் துணையைக் கண்டதும் சில சமிக்ஞைகள் தருகிறது. துணைத்தேர்வைப் பொறுத்த வரையில் பெண்ணின் மார்பு, இடை, புட்டம் போன்ற சில அடிப்படைக் கூறுகள் பெரும்பான்மையான ஆண்களுக்குப் பச்சை விளக்குகள். இவை மறைக்கப்படும் போது உதடுகள், கண்கள், கூந்தல் ஆகியவை கவனத்துக்குள்ளாகின்றன.

இந்த உடலுறுப்புகள் துணையின் உடல் நலன், கலாச்சாரம், பணவசதி ஆகியன பற்றிய சமிக்ஞைகளை அளிக்கின்றன. முலையின் பருமன் அதில் நிறைந்துள்ள கொழுப்புத் திசுக்களால் ஏற்படுவது. தொப்பை போல் மார்புகளும் கொழுப்பின் சேமிப்பறைகள். மகப்பேறின் போது பொதுவாய் உடல் கொழுப்பை நிறைய சேமிக்கிறது.

இதனால் மார்புகள் பெரிதாகின்றன. ஆதிகாலத்தில் குழந்தையைப் பேணுவதில் ஈடுபட்டிருக்கும் பெண்ணுக்கு வேட்டையாடி உணவு சேகரிக்க முடியாதாகையால், இந்தக் கொழுப்புத் திரட்சியைத்தான் உடல் சக்தியாக மாற்றிப் பயன்படுத்திக் கொண்டிருக்கும். இருந்தாலும் ரொம்ப நாள் இந்த சேமிப்பைச் செலவழித்தால் தாயின் உடல் மெலிவதுடன், அடுத்த மகப்பேறுக்கான காலமும் தள்ளிப் போகும்.

இதனால் ஒரு ஆதிமானுடச் சமூகத்தில் மக்கள் தொகை சமனிலை இழந்துவிடும். இதைத் தவிர்க்க இத்தகைய முலைபருத்த தாய்மார்களை கவனமாய் உணவு தந்து முன்வரலாற்று ஆண்சமூகம் பேணியிருக்க வேண்டும். இப்படி முலைப் பருமனின் வசதி கருதி பரிணாமம் இத்தகைய மார்புகளைப் பெண்களுக்கு அளித்திருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உடலில் கொழுப்புத் திரட்சிகள் கொண்டுள்ள பெண்தான் குழந்தையைப் பெற்று வளர்க்க சக்தியுள்ள வலிமையான பெண். இதனால் பருத்த மார் கொண்ட பெண் வம்சாவளி நீட்டிக்க வேண்டும் ஆணுக்குப் பிடித்தமானவளாய் உள்ளாள். பருத்த முலைகள் இவ்வாறு பரிணாமம் தரும் பச்சை விளக்குகள் என்பது மற்றொரு சாரார் கருத்து. ஆனால் இக்கருத்தில் ஒரு அப்பட்டமான முரண் உள்ளது.

குழந்தைப் பேற்றுக்குப் பின் பெண் மீண்டும் கருத்தரிப்புக்குத் தயாராக ஒன்றரை வருடங்களாவது ஆகும்.

அவ்வாறு கருத்தரிக்காத பெண்ணை ஆண் நெருங்குவதில் பயனில்லை. குழந்தைப் பேணலில் ஈடுபட்டுள்ள பெண்ணுக்குப் பரிணாமம் ஏன் இந்தப் பருத்த கவர்ச்சி உறுப்புகளை அளித்து ஆணைக் குழப்ப வேண்டும்?

இங்குதான் இயற்கை ஆணுக்கு மற்றொரு குறிப்பைத் தருகிறது. மகப்பேற்றுக்குப் பின் அதிகமாய் கொழுப்பு சேருவதால் மார்புகள் துவண்டு தொங்கிப் போகின்றன. தொங்கும் மார்புகளை சமிக்ஞையாய் ஏற்று ஆண் குழந்தைபேணலில் ஈடுபட்டுள்ள, கருத்தரிக்கத் தயாரல்லாத பெண்ணைத் தொந்தரவு செய்வதைத் தவிர்க்கலாம்.

இப்போது துணைத் தேடலுக்கான துல்லியமான அளவுகோல் ஏறத்தாழத் தயாராகிவிட்டது: கச்சிதமாய்ப் பருத்து, வடிவாய், துவளாமல் மெலெழுந்த மார்புகள் கொண்ட பெண்தான் ஏற்ற பெண். இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. பொதுவான கொழுப்பு சேர்க்கை, வயதாகுதல் ஆகிய பல மகப்பேறு தவிர்த்த காரணங்களினாலும் மார்புகள் தொங்கிப் போகும். ஆனால் இந்தப் பெண்கள் புணர்ச்சிக்குத் தயாராய் இருந்தாலும், இவர்களின் வீங்கின உறுப்புகள் மாறான செய்திகளைத் தரலாம் (அதாவது தயாரில்லை என). இதற்காகத்தான் பிரா எனும் மார்புவிலங்கும், ‘டக்-அப்’ அறுவை சிகிச்சையும்.

நூற்றாண்டுகளின் வரலாற்றில் புணர்ச்சித் துணைக்கான அளவுகோலில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், உடல் நலத்தைக் குறிப்புணர்த்தும் சில உடலியல் அம்சங்கள் இன்னும் மாறவில்லை. ஒரு உதாரணம் தருகிறேன்.

என் அலுவலகத்தில் மெடிக்கல் டிரான்கிரிப்ஷன் துறையில் பயிற்சி அளிக்கும் ஒரு ஆறரை அடி உயர இளம் மருத்துவர் உள்ளார். மற்றபடி சுமாரான தோற்றம் கொண்ட இந்த இளைஞரைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடாத பெண்கள் என் துறையில் இல்லை. இதைவிட வினோதமான சம்பவத்தைக் கண்ணுற்றேன்.

ஆழ்வார்பேட்டையில் ஒரு ஈபப்ளிஷிங் பி.பி.ஓவுக்கு வேலை விஷயமாய்ப் போய் வரவேற்பறையில் காத்திருந்தேன். அமைதியான குளிரூட்டப்பட்ட அறையில் எதிரில் அழகிய, பெரிய கண்களுடைய பெண் வரவேற்பாளர். அப்போது கடிதம் ஒன்றை ஒப்படைப்பதற்காக மற்றொரு நிறுவனத்திலிருந்து ஒரு உயரமான கடைநிலை உதவியாளன் வந்திருந்தான். அவனைப் பார்த்து தன்னிலை மறந்து இவள் ஒரு பார்வை விட்டாள் பாருங்கள், இந்தப் பிறவியில் நான் மறக்க மாட்டேன்.

இருவருக்கும் கல்வி, அந்தஸ்தில் எம்பித் தாவினாலும் எட்டாது, ஆனாலும் இவன் தன் உயரத்தால் அந்தப் பெரிய பள்ளத்தாக்கைக்கூட நொடியில் தாண்டிவிட்டான். அந்தக் கறுத்த கடைநிலை உதவியாளனின் உயரம் அப்பெண்ணின் ஆழ்மனத்தில் உள்ள பாலியல் சேர்க்கைப் படிவத்தில், ‘வலிமை’ என்னும் கட்டத்தில் பெரிதாய் ஒரு டிக் குறியை வரைந்திருக்க வேண்டும். உடனே பச்சை விளக்கு எரிந்து விட்டது.