Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களே வெள்ளை நிறத்தில் மாறவேண்டுமா? இதை செய்யுங்கள்

பெண்களே வெள்ளை நிறத்தில் மாறவேண்டுமா? இதை செய்யுங்கள்

41

வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கு, தோலின் நிறம் கருமையாக மாறுவதைத் தடுக்க எளிய வழிகளை இங்கே காண்போம்.
வெயிலில் சென்று வீடு திரும்பியதும் கை, கால்களை கழுவிவிட்டு ஐஸ் கட்டிகள் சிலவற்றை எடுத்து மெல்லிய Cotton துணியில் சுற்றி ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கிவிட்டு அரைத்து முகம், கை, கால்களில் பூச வேண்டும். பின்னர் அரைமணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். ஏனெனில் உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச், வெயிலால் உண்டாகும் சருமப் பிரச்சனைகளைத் தீர்த்து, தொற்றுக்கள் ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

கிரீன் டீயை கொதிக்க வைத்து இறக்கி, ஆறிய பின்னர் பஞ்சைக் கொண்டு கருமையான இடங்களில் ஒத்தடம் கொடுக்க நிவாரணம் கிடைக்கும்.

சருமம் பாதிக்கப்பட்ட இடத்தின் மீது தயிரை தடவி காயவிட்டு, பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவினால் கருந்திட்டுக்கள் மறையும். மேலும் சருமம் மென்மையாவதோடு, சரும தொற்றுகளும் ஏற்படாது.

தேனைக் கொண்டு கருமையாக மாறியுள்ள கை, கால்களில் தடவி, 10 நிமிடம் கழித்து கழுவி வர விரைவில் தோல் பழைய நிறத்திற்கு மாறிவிடும்.

தேங்காய் எண்ணெய்யை எடுத்து உடல் முழுவதும் தடவி, உலர விட்டு அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வெயிலின் தாக்கத்தினால் நிறம் மாறாமல் இருக்கும்.

முட்டையின் வெள்ளைக்கரு சரும எரிச்சலைப் போக்கும் தன்மை கொண்டது. எனவே, முட்டை வெள்ளைக் கருவை தனியாக எடுத்து நேரடியாக சருமத்தில் தடவி வர வேண்டும். இதனால் சருமத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், சருமம் சிவந்து இருந்தாலும் அவற்றை சரிசெய்து விடும், வெறும் வெள்ளைக்கரு மட்டுமில்லாமல், இதனுடன் சிறிது தேனும் கலந்து பயன்படுத்தலாம்.