Home பெண்கள் உடல் கட்டுப்பாடு தினமும் எடையைக் கவனி!

தினமும் எடையைக் கவனி!

24

40 கிலோவுக்கு மேல் எடையைக் குறைத்து, அதிசயிக்கவைத்த கோமதியிடம் பேசினோம்,
“அடிப்படையில் நான் ஒரு விளையாட்டு வீராங்கனை. தேசிய, மாநில அளவிலான நிறையப் போட்டிகளில் கலந்துக்குவேன். ஒரு கட்டத்துல, விளையாட்டையும் விட்டுட்டு, உடலையும் கவனிக்காமல் விட்டுட்டேன். விளைவு எடை ரொம்பவே அதிகமாயிடுச்சு.

தொலைக்காட்சிப் போட்டியில் கலந்துக்க ஆரம்பிச்சதும், நேயர்கள் நேரடியாகப் பார்ப்பாங்க… ஒவ்வொரு வாரமும் வெளியேற்றம் இருக்கும்னு கடுமையா உடற்பயிற்சி செஞ்சேன்.

கால் ரொம்பவே வலிச்சது. ஆனால் போகப் போகப் பழகிடுச்சு. முதல்ல, அரை கி.மீ கூட நடக்க முடியாம இருந்த நான், இப்ப, டிரெட்மில்லில் ஒரு நாளைக்கு 25 கி.மீ நடக்கிறேன், ஓடுறேன். மணிக்கு ஒருமுறை உடல் எடையைப் பரிசோதிச்சிட்டே இருப்பேன்.
சத்துள்ள உணவுகள், பழங்கள் மட்டுமே தேவையான அளவு எடுத்துக்கிட்டேன்.

ஆரம்பத்தில், 20 கிலோ எடையை ஈஸியாக் குறைக்க முடிஞ்சது. அதுக்கப்புறமும், உடல் எடையைக் குறைக்க அதிக அளவில் உடற்பயிற்சி செஞ்சேன். என் குடும்பமும் ரொம்ப உதவியா இருந்ததால்தான், இந்த அளவுக்கு எடையைக் குறைக்க முடிஞ்சது.

ரொம்பவே உடம்பு லேசான மாதிரி, உற்சாகமா இருக்கு. இன்னும் அஞ்சு கிலோ எடையைக் குறைச்சால்தான், என் உயரத்துக்கு ஏற்ற எடைக்கு வர முடியும். அதற்கான பயிற்சிகளையும் எடுத்திட்டிருக்கேன்” என்கிறார் பெருமிதமாக!