Home பெண்கள் அழகு குறிப்பு வாரம் ஒரு முறை அக்குளில் இதை தடவினால் காணாமல் போய் விடும் கருமை..!

வாரம் ஒரு முறை அக்குளில் இதை தடவினால் காணாமல் போய் விடும் கருமை..!

32

பெண்களுக்கு தங்களை அழகாக்குவதில் மாத்திரமின்றி அழகிய ஆடைகள் அணிவதிலும் கொள்ளைப் பிரியம் உண்டு. எனினும் எல்லா வகையான ஆடைகளையும் எல்லாராலும் அணிய முடியாது. உடற்பருமன், உடலமைப்பு என்பன அதில் ஆதிக்கம் செலுத்தும்.

உடலமைப்பு மாத்திரம் இன்றி, இப்போது உடலை எவ்வாறு பேணுகின்றோம் என்பதும் ஆடைகள் அணிவதில் ஆதிக்கம் செலுத்துகின்றது என்று தான் கூற வேண்டும். ஏன் எனக் கேட்கின்றீர்களா?

ஆம், ஸ்லீவ்லஸ் உடைகளை அணிவதென்றால் உடற்பருமன் மாத்திரம் இன்றி, அக்குள் பகுதி தொடர்பிலும் அக்கறை வேண்டும்.

சிலருக்கு அக்குள் பகுதி கருமையாக காணப்படுவதால் அது பார்ப்போரை முகம் சுழிக்க வைக்கும். அத்துடன் ஸ்லீவ்லஸ் ஆடைகளை அணியும் போதும் பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும்.
அது சரி, இந்த கருமையை எப்படி போக்குவது?

அக்குள் பகுதியின் கருமையை நீக்க அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் உள்ள பழங்களைக் கொண்டு கூடஇ ந்த கருமையை போக்கமுடியும்.
இனி, எவற்றைக் கொண்டு அக்குள் கருமையை நீக்கலாம் எனப் பார்ப்போம்.

01. ஒரேஞ்ச்
ஒரேஞ்ச் தோலை உலர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் சிறிது ஒரேஞ்ச் பொடியை எடுத்து, அதில் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்து பேஸ்ட் செய்து, அக்குளில்தடவி 15 நிமிடம் உலர வைத்து கழுவி வர, அக்குள் கருமை நீங்கும்.

02. அன்னாசிப்பழம்
அன்னாசிப் பழத் துண்டுகளைக் கொண்டு அக்குளை 10 நிமிடம் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, நன்கு உலர்ந்ததும், பாலில் நனைத்தெடுத்த பஞ்சைக் கொண்டு அப்பகுதியை துடைத்து எடுக்க வேண்டும். இப்படி வார இறுதியில் செய்து வந்தால், அக்குளில் உள்ள கருமையைப் போக்கலாம்.

03. தக்காளி
தக்காளியை அரைத்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி உலர வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், அக்குள் கருமை அகலும்.

04. எலுமிச்சை
எலுமிச்சையை இரண்டாக வெட்டி, அக்குளில் மசாஜ் செய்து உலர வைக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரின் மூலம் கழுவ வேண்டும். இப்படி மாதம் இரண்டு முறை செய்து வந்தால் அக்குள் கருமையைப் போக்கலாம்.

05. வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயைக் கொண்டு அக்குளை மசாஜ் செய்ய வேண்டும். உலர்ந்ததும், தயிரைத் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி அல்லது தினமும் செய்து வந்தால், அக்குள் கருமையை விரைவில் போக்கலாம்.

06. உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை அரைத்து அதனை அக்குளில் தடவி 15 நிமிடம் நன்கு உலர வைத்து, பின் அதனை ஈரத் துணியால் துடைத்து எடுத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை செய்து வர, நல்ல மாற்றத்தை காணலாம்.