Home உறவு-காதல் திருமணத்திற்கு பிறகு காதல் ஏற்பட தம்பதிகள் சொல்லும் முக்கிய காரணங்கள்

திருமணத்திற்கு பிறகு காதல் ஏற்பட தம்பதிகள் சொல்லும் முக்கிய காரணங்கள்

34

காதல்- திருமணத்திற்கு பிறகு
காதல் எப்படி வரும்…. எப்போது வரும் என்ற தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் நம்மை அது ஆட்கொண்டுவிடும். காதலாகிருந்து அது கசிந்துருகி பிறகு திருமணத்தில் முடிவது ஒரு வகை என்றால், பெற்றோர் பார்த்து, திருமணம் முடித்து, பிறகு காதலிப்பது மற்றொரு வகை. காதலர்களுக்கு திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து காதலிப்பதில் எந்தவித பிரச்னையும் இல்லை. ஆனால் திருமணத்தில் இணைந்த இருவருக்குள் காதல் எப்படி உருவாகிறது?

ஆச்சர்யமூட்டும் பதில்கள்
இந்த கேள்வியை 7 தம்பதிகளிடம் கேட்கப்பட்டன. அவர்கள் சொன்ன பதில் ஒவ்வொன்றும் அற்புதம் தான். அவற்றை தெரிந்துக்கொள்ள ஆர்வத்துடனும், உத்வேகத்துடன் தொடர்ந்து எங்களுடன் கீழே பயணியுங்கள்.

என் பெற்றோர் மீதும் அவர் அன்பு செலுத்தினார்
திருமணம் முடிந்த நான்கு மாதங்களில் நான் அமெரிக்கா சென்றுவிட்டேன். அப்போது எதிர்பாராத விதமாக அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. நான் நிலைக்குலைந்து விட்டேன். ஆனால் இந்தியாவில் என் கணவர் அப்பா உடன் உறுதுணையாக இருந்தார். எனக்கும் தைரியத்தை அளித்தார். ஒரு மாதம் கழித்து நான் வீட்டிற்கு திரும்பிய பிறகு எனது கணவர் என் உயிருக்கு உயிரானவராக மாறிவிட்டார்.

என் வேலை பறிபோன பிறகு அவள் துணை நின்றாள்
”திருமணத்திற்கு பிறகு நான் வேலையிழந்தேன். பொருளாதார ரீதியாக நானும், என் மனைவியும் மிகவும் சிரமப்பட்டோம். எனது உறவினர்கள் நான் வாழ்க்கையில் தோற்றுவிட்டதாக கூறினர். ஆனால் அப்போது என்னை ஊக்குவித்து என்னை உத்வேகப்படுத்தியவள் என மனைவி தான். என் வலிமையும் அவள் தான், எனது காதலியும் அவள் தான்”

திருமணம் என்கிற பந்ததத்தை அவர் உணர்த்தினார்
”கல்யாணத்திற்கு முன் நான் வைத்தது தான் என் வாழ்க்கையில் சட்டம். ஆனால் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை மாறிப்போனது. திய உறவுகள், புதிய குடும்பத்துடன் இணைய எனக்கு கடினமாக இருந்தது. குடும்ப வாழ்க்கையை வாழ என் மாமியரின் துணை தேவைப்பட்டது. அதனால் பல இரவுகள் தனிமையில் அழுதிருக்கிறேன். எனது பிரச்னையை உணர்ந்த என் கணவர், தீர்வுகளை அளித்தார். அதுவே அவர் மீது எனக்கு காதலை உருவாக்கியது”

வேலையை விடு என்றவர்களை அவர் விரட்டினார்
மிகவும் கட்டுக்கோப்பான குடும்பத்தில் இருந்து வந்தவர் என் கணவரானார். புருஷன் வீட்டில் பலரும் நான் பார்த்து வரும் வேலையை விடு என்றனர். எனக்கு அது பெரிய அதிர்ச்சியை அளித்தது. இந்த பிரச்னை எளிதாக தெரியலாம். ஆனால் அதற்கு தீர்வு காண்பது மிகவும் கடினமாக இருந்தது. முற்போக்கான ஆண் எனக்கு கணவராக வாய்த்ததால், பிரச்னைகளை அவர் பார்த்துக்கொண்டார். எனக்கான வாழ்க்கையை வாழ அவர் வழி ஏற்படுத்தி தந்தார். எனது பாதுகாப்பு கவசம் என் கணவர் தான்

பொறுமையில் அவள் கடலினும் பெரியவள்
”எனது 8 ஆண்டு காதல் வாழ்க்கை தோல்வியை தழுவ, பெற்றோரின் வற்புறுத்தலால் பெண் பார்க்க சம்மதித்தேன். அப்போது சந்தித்த ஒரு பெண்ணை எனக்கு பிடித்திருந்தது, அவளிடம் எனது காதல் விவகாரங்களை கூறிவிட்டேன். அந்த பெண் நினைத்திருந்தால், என்னை தவிர்த்திருக்கலாம். ஆனால் அவள் என்னை திருமணம் செய்துக்கொண்டாள். ஆனால் அவளுடன் என் வாழ்க்கையை வாழ எனக்கு நேரம் தேவைப்பட்டது. அதுவரை காத்திருந்த அவளின் மேல் காதல் வர இறுதியாக அவள் கரம் பற்றினேன்”

தாய்மையில் அவள் என்னவளானால்
”பெண் பார்க்கும் போது எனக்கு பிடித்திருந்தது. திருமணமும் நடந்தது. வாழ்க்கையும் அப்படியே நகர்ந்தன. ஆனால் அதில் காதல் உண்டா என்று கேட்டால்? நேர்மையாக நான் இல்லை என்று தான் சொல்வேன். அப்படி ஒரு தருணத்தில் தான் அவள் தாய்மையடைந்தாள். அதற்கு பிறகு எனக்கு ஒவ்வொரு நாளு அவளுடன் பொன் நாளாக மாறியது. பிறகு எங்களது குழந்தை பிறந்த பிறகு என் மனைவிக்கு என்னவளானால்”

மனம் அவர் அருகாமையை மிகவும் விரும்பியது
”திருமணம் முடிந்து நாங்கள் வாழ தொடங்கிய பிறகு, அவருக்கு ஒரே விளையாட்டு தான். எப்போது என்னை பயமுறுத்தி விளையாடுவதில் அவருக்கு ஒரு இன்பம். மேலும் வேலைக்கு சென்றால் என்னுடன் தொலைப்பேசியில் பேசிக்கொண்டே இருப்பார். ஆனால் இதெல்லாம் எனக்கு எரிச்சலாக்கத்தான் இருந்தது. பிறகு திடீரென அவசர வேலையாக என் கணவர் டெல்லி சென்றுவிட்டார். அவர் என் அருகில் இல்லை, எனக்கு தொலைப்பேசியில் அழைப்பு வரவில்லை. இதெல்லாம் என்னை கலக்கமடைய செய்தன. பிறகு பணியை முடித்து வீடு திரும்பிய பிறகு அவரை கட்டிப்பிடித்து அழுதுவிட்டேன். ஐ மிஸ் யூ என்றேன். பிறகு ஒரே லவ் தான்”