Home ஆண்கள் அறிந்துகொள்ளுங்கள் இவையும் விந்தணு உற்பத்தியை குறைக்கும்

அறிந்துகொள்ளுங்கள் இவையும் விந்தணு உற்பத்தியை குறைக்கும்

32

ஆண்களின் விந்தணு உற்பத்தி தற்போதைய காலத்தில் அதிகரித்து வருவதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் தான் காரணமாக அமைகிறது.

விந்தணு குறைந்து ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுவதால் சந்தோஷமான காதல் வாழ்க்கையில் குழந்தை இல்லை என்ற கவலையை ஏற்படுத்திவிடும்.

இவ்வாறு ஆண்களிடையே விந்தணு குறைவதற்கு எந்தெந்த விடயங்கள் காரணமாக அமைகின்றது என அறிந்துகொள்வோம்.

சுடுநீர் குளியல்
பெரும்பாலான ஆண்கள் உடல் வலி அதிகம் உள்ளது என்று சூடான நீரில் குளிப்பார்கள். அவ்வாறு அதிகப்படியான வெப்பம் உள்ள நீரில் குளித்தால், விந்தணுவின் தரம் குறைவதோடு, உற்பத்தியும் தடைப்படும். எனவே குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே நல்லது.

உள்ளாடை
அணியும் உள்ளாடை மிகவும் இறுக்கமானதாக இருந்தாலும், ஆண் விதையானது வெப்பமாகி, விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும். எனவே எப்போது தளர்வாக இருக்கும் உள்ளாடையையே அணிய வேண்டும்.

செல்லிடத் தொலைபேசிகள்
பொதுவாக ஆண்கள் செல்லிடத் தொலைபேசிகளை காற்சட்டையின் பக்கட்டில் வைப்பதால், செல்லிடத் தொலைபேசிகளிலிருந்து வெளிவரும் கதிர்கள், விந்தணுவின் உற்பத்திக்கு இடையூறு ஏற்படுத்தி, அதன் உற்பத்தியின் அளவைக் குறைத்துவிடும். மேலும் ஆய்வு ஒன்றிலும், செல்லிடத் தொலைபேசிகளை அதிகம் பயன்படுத்தினாலும், விந்தணுவின் உற்பத்தி குறையும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மன அழுத்தம்
மன அழுத்தம் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதில் ஒன்று தான் விந்தணு உற்பத்தி குறைவு. சில சமயங்களில் இவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும். எனவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தினமும் மேற்கொள்ள வேண்டும்.

போதிய உடலுறவு இல்லாமை
உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் பல உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். அதில் ஒரு பிரச்சனை தான் விந்தணு உற்பத்தி குறைவு. எனவே அவ்வப்போது உடலுறவு கொள்வதன் மூலம், மன அழுத்தம் குறைந்து, விந்தணுவின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

மது பாவனை
மது அதிகம் அருந்தினால், அவை டெஸ்டோஸ்டிரோனின் அளவை குறைக்கும். இதனால் விந்தணுவின் உற்பத்தியும் குறையும். ஆகவே மது அதிகம் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

புகைப்பிடித்தல்
சிகரெட்டில் உள்ள புகையிலையானது, விந்தணுவின் உற்பத்தியை குறைப்பதோடு, மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடும். ஆகவே அழகான குழந்தை பெற வேண்டுமென்று நினைத்தால், சிகரெட் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

சோயா பொருட்கள்
ஆண்கள் சோயா பொருட்களை அதிகம் உட்கொண்டால், விந்தணுவின் உற்பத்திக்கு தடை ஏற்படும். ஏனெனில் அதில் உள்ள ஐசோஃப்ளேவோன்ஸ், விந்தணுவின் எண்ணிக்கை, தரம் மற்றும் உற்பத்தியை பாதிக்கும்.

தொலைக்காட்சி பார்த்தல்
பெரும்பாலான ஆண்கள் தொலைக்காட்சி பார்க்கும் போது, எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களை உண்டுகொண்டே பார்ப்பார்கள். இதனால் உடல் பருமன் அதிகரித்து, விந்தணுவின் உற்பத்தியும் குறையும். மேலும் ஆய்வு ஒன்றில், நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் கொண்டே தொலைக்காட்சி பார்க்கும் ஆண்களின் விந்தணு உற்பத்தியை விட, தினமும் டிவியை அதிகம் பார்க்காமல், உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு விந்தணுவின் உற்பத்தி அதிகம் உள்ளதாகவும் சொல்கிறது.

லெப்டொப்
தற்போது லெப்டொப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிக அளவு லேப்டாப்பை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு ஆண்கள் லெப்டொப் பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து பயன்படுத்தினால், அதிலிருந்து வெளிவரும் வெப்பமானது, விந்தணுவின் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே லெப்டொப் பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.