Home பெண்கள் உடல் கட்டுப்பாடு வியர்வை நாறுவது ஏன்?

வியர்வை நாறுவது ஏன்?

20

சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட அதிகம் கோபப்படுகிற நபர்களுக்கு வியர்வை அதிகளவில் வெளியாகும்…

பேருந்தில் பயணம் செய்யும்போது கையைத் தூக்கி கம்பியைப் பிடித்துக் கொள்வதற்கு கூட ஒரு கணம் தயங்க வேண்டியதாயிருக்கிறது. யாரிடமாவது நெருங்கி நின்று பேசுவதற்குத் கூட யோசிக்க வேண்டியிருக்கிறது.

காரணம், உடல் துர்நாற்றம். வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழ்கிற நம் எல்லோரும் எதிர்கொள்ளும் பிரச்னைதான் இது. இந்த உடல் துர்நாற்றம் ஏன் வருகிறது? நம்முடைய உணவுமுறை கூட இதற்குக் காரணமா? துர்நாற்றத்தைப் போக்க என்ன வழி? சரும சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்குமார் கண்ணன் இதுகுறித்துப் பேசுகிறார்…

‘‘நம் உடலின் தட்ப வெப்ப நிலை அதிகமாகும்போது அதை சீர்படுத்துவதற்காக sweat glands என்கிற சுரப்பியிலிருந்து வெளியேறுவது தான் வியர்வை. மனித உடலில் அக்குள் பகுதிகளில் இந்த வியர்வை சுரப்பிகள் அதிகளவில் இருப்பதால் அங்கிருந்து நிறைய வியர்வை வெளியாகிறது. அதிகமாக படபடப்பாகும்போதும், சூடான திரவங்களைக் குடிக்கும்போதும், அதிர்ச்சியான விஷயங்களை கேட்கும்போதும் வியர்வை வெளியாகிறது. சில பேருக்கு நரம்பு மண்டலத்தின் தூண்டுதல் அதிகமாக இருப்ப தால் உள்ளங்கை மற்றும் பாதங்களில் இருந்து கூட வியர்வை அதிகமாக வெளியேறும்.

மனித உடலில் வியர்வை வெளியேறு வதற்கான நோக்கமே உடலின் தட்பவெப்ப நிலையை சீராக வைத்துக்கொள்வதற்கு மட்டுமில்லாமல் உடம்பிலுள்ள நச்சுப் பொருட்களையும் வெளியேற்று வதற்குத்தான். இப்படியாக வெளியேறிய வியர்வைக்கென எந்த விதமான வாசனையோ, நிறமோ கிடையாது. வியர்வை வெளியான பின் நுண்ணுயிரிகளான பாக்டீரியாக் களின் தாக்குதலால்தான் துர்நாற்றமே வருகிறது. அதிகமாக வியர்வை வெளியேறும்போது துர்நாற்றம் அதிகமாவதற்கும் இதுதான் காரணம்.

அசைவ உணவுகள் சாப்பிடும்போது துர்நாற்றம் வருகிறது என்கிற தவறான கருத்து பரவலாக இருக்கிறது. உணவு முறைக்கும் துர்நாற்றத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. உடலை நாம் எவ்விதமாக பராமரித்துக் கொள்கிறோமோ அவ்வளவு துர்நாற்றத்தைக் குறைக்க வாய்ப்பிருக்கிறது.

உடலைப் பொறுத்து துர்நாற்றத்தின் அளவு மாறுபடும். சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட அதிகம் கோபப்படுகிற type1 persionalities எனப்படும் நபர்களுக்கு வியர்வை அதிகளவில் வெளி யாகும். உழைப்பே இல்லாத மனிதர்கள் சிறிய வேலை செய்தால் கூட வியர்வை அதிகளவில் வெளியாகும். துர்நாற்றத்தைப் போக்குவதற்கான வழிகள்…

* துர்நாற்றத்துக்கு முக்கிய காரணமாக இருக்கும் வியர்வையின் அளவைக் குறைக்க வேண்டுமென்றால் வயது, உயரத்துக்கு ஏற்ற உடல் எடையை பராமரிக்க வேண்டும்.

* வெதுவெதுப்பான தண்ணீரில், தினமும் இரண்டுவேளை குளிக்கும்போது துர்நாற்றத்தை பரப்பும் பாக்டீரியா நுண்ணுயிரிகள் சுத்தமாகும்.

* தட்பவெப்பநிலைக்கு உகந்த உடைகளை தேர்வு செய்து அணிய வேண்டும்.

* குளித்து முடித்த பிறகு வியர்வை வெளியாவதற்குள் டியோடரன்ட் (deodorants) பயன்படுத்தலாம்.
அவற்றுள் இருக்கும் ஆன்ட்டி பாக்டீரி யல் தன்மை துர்நாற்றம் தரும் பாக்டீரியாக்களை அழித்துவிடும்.

* பாடி ஸ்பிரேவினால் சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டால் அதற்கு பதிலாக ROLLON எனப்படும் திரவ வடிவிலான டியோடரன்டை பயன்படுத்தலாம்.

* அதிக வியர்வை இருந்தால் குளித்து முடித்ததும், ஈரத்தை நன்கு துடைத்து விட்டு, ஆன்ட்டி பாக்டீரியல் டஸ்ட்டிங் பவுடர் உபயோகிக்கலாம்.

* உடைகளை வைக்கும் பீரோ மற்றும் அலமாரியை முறையாக பராமரிக்க வேண்டும்.

* அதிகமாக வியர்வை வெளியேறும் நிலையில் ANTIPERSPIRANTS பயன்படுத்தும்போது வியர்வையின் அளவு குறைவதால் துர்நாற்றமும் குறையும்.

* நுண்ணுயிர் கிருமிகளிலிருந்து எடுக்கப்பட்ட புரதத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் BOTOX என்னும் மருந்தை ஊசி மூலம்
செலுத்தும் போது அக்குள், உள்ளங்கை, பாதங்களில் வெளியேறும் வியர்வையின் அளவைக் குறைக்கலாம்.

* இயல்புக்கு மாறாக அதிக வியர்வையோ, துர்நாற்றமோ வரும் நிலையில் சரும மருத்துவரை அணுகி தக்க ஆலோசனைகளை பெற்ற பின்னர் மருந்துகளை உபயோகிக்கலாம்.