Home பெண்கள் அழகு குறிப்பு கூந்தலை காப்பாற்ற இந்த எண்ணெய் தேய்ப்பது அவசியம்!

கூந்தலை காப்பாற்ற இந்த எண்ணெய் தேய்ப்பது அவசியம்!

60

பெண்கள் தங்கள் கூந்தலை பாதுகாக்க பல வழிகளை கையாண்டு வருகிறார்கள். ஆனால் என்ன செய்தும் தலைமுடி உதிரும் பிரச்னை குறைவதில்லை.

தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும். தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. அதற்கு மேல் முடி உதிர்ந்தால்தான் பிரச்னை.

முடி உதிருது எதனால்:

மன அழுத்தம், டென்ஷன், தூசி, பரம்பரைவாகு, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை அல்லது வேறு எதாவது நோய்க்கான அறிகுறி போன்ற பல காரணங்களால் கொத்துக் கொத்தாகத் தலை முடி உதிரும். சுத்தமின்மை, ஈரப்பதம், எண்ணெய்ப் பசை இல்லாமல் போனால், முடி வறண்டு உதிரும்.

பேஷனால் பிரச்னை

இப்போது பேஷன் என்ற பெயரில் தலைமுடியை எண்ணெய் தேய்க்காமல் பல பெண்கள் விட்டுவிடுகிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம் எண்ணெய் தேய்ப்பதால் மட்டும் கூந்தல் சிறப்பாக மாறப்போகிறதா என்ற எதிர்கேள்வி கேட்பார்கள். ஆனால் உண்மையில் ஆனால் கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது மிக அவசியம்.

எண்ணெய் தேய்ப்பதன் நன்மைகள்

தலைக்கு ஒழுங்காக எண்ணெய் வைப்பது, தலை குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து இளஞ்சூடாக்கி, தலையில் மயிர்க்கால்களில் தடவி விரல்களால் மசாஜ் செய்ய வேண்டும். ஒரு துண்டை வெந்நீரில் நனைத்துப் பிழிந்து தலையில் நன்றாக இறுக்கிக் கட்டி, அரை மணி நேரத்திற்குப் பிறகு தலைக்குக் குளிக்கவும். தினமும் தொடர்ந்து ஒரு வாரம் செய்துவர, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தலாம். தலைக்குப் புத்துணர்வு கிடைப்பதுடன் முடி வளர்ச்சியையும் தூண்டும்.

நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்களிலும் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. நல்லெண்ணெயில் உள்ள வைட்டமின் E முடி சிதைவைத் தடுக்கிறது.

முடி செம்பட்டையாக உள்ளவர்கள் நல்லெண்ணெய் தேய்த்தால் செம்பட்டை குறைய வாய்ப்பு உள்ளது. தலை உலர்ந்து பொடுகு
உள்ளவர்களுக்கு எண்ணெய் தேய்த்தால் அரிப்பு குறையும்.

குளிப்பதற்கு முன் எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தை வாரம் ஒரு முறையும், குளித்த பிறகு எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தை அன்றாடமும் கடைபிடிக்கலாம்.

தலை முழுக்க எண்ணெய் படும்படி மட்டும் தேய்த்தால் போதும்; நனையும் அளவுக்கு அதிகம் தேய்க்க தேவையில்லை.

எண்ணெய் ஒவ்வாமை உள்ளவர்களும் தலையில் இயற்கையாக அதிக எண்ணெய் உள்ளவர்களும், எண்ணெய் தேய்ப்பதைத் தவிர்க்கலாம்.

இயற்கையாக கிடைக்கக்கூடிய நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினாலே போதும். ஆலிவ் எண்ணெய் மற்றும் வெளிநாட்டு எண்ணெய்களை பயன்படுத்துவது தேவையில்லை.

செயற்கை ஹேர் ஆயில்களை மருத்துவர்களின் ஆலோசனைப்படி மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். விளம்பரத்தை பார்த்து வாங்கி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.